Published:Updated:

மகாஸ்கந்த ஹோமம்: விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் தைப்பூச வழிபாடு; தோரணமலையில் சங்கல்பியுங்கள்!

தோரணமலை முருகன்

மகாஸ்கந்த ஹோமம்: அதேபோல தைப்பூசமும் சித்தர்கள் வழிபாடும் சிறப்பானது என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் சித்தர்களின் தபோவனமாக உள்ள தோரணமலை சிறப்பினும் சிறப்பானது எனலாம்.

மகாஸ்கந்த ஹோமம்: விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றும் தைப்பூச வழிபாடு; தோரணமலையில் சங்கல்பியுங்கள்!

மகாஸ்கந்த ஹோமம்: அதேபோல தைப்பூசமும் சித்தர்கள் வழிபாடும் சிறப்பானது என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் சித்தர்களின் தபோவனமாக உள்ள தோரணமலை சிறப்பினும் சிறப்பானது எனலாம்.

Published:Updated:
தோரணமலை முருகன்

தோரணமலையில் தைப்பூசத்தை ஒட்டி 2023 பிப்ரவரி-5-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

தைப்பூசமும் முருகன் வழிபாடும் சங்க காலம் தொட்டே நடைபெற்று வரும் ஒரு முக்கிய வழிபாடு என்கிறது தமிழர் வரலாறு. முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையான வழிபாடு. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் 'வேலன் வெறியாட்டு' என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன.

தைப்பூச நன்னாளில் வேல்மாறல் பூஜை, திருப்புகழ் மகாமந்திர பூஜை, மகா ஸ்கந்த ஹோமம் போன்றவற்றை செய்வதும் கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் என்கிறார்கள் பெரியோர்கள்.

முருகப்பெருமானுக்கு 16 விதமான காவடிகள் எடுப்பது இந்நாளைய விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு என்பர் ஆன்றோர்கள். முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம். இப்படி பல விசேஷங்கள் கொண்டது இந்த தைப்பூச நன்னாள்.

தோரணமலை
தோரணமலை

அதேபோல தைப்பூசமும் சித்தர்கள் வழிபாடும் சிறப்பானது என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் சித்தர்களின் தபோவனமாக உள்ள தோரணமலை சிறப்பினும் சிறப்பானது எனலாம். படுத்திருக்கும் யானை போல மலை இருப்பதால் வாரண மலை என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் வாயிலாக இருப்பதால் தோரண மலை என்றும், முருகப்பெருமான் அமர்ந்து கொள்ள ஞான சக்தியே மலையாக உருக்கொண்டதால் காரண மலை என்றும் இதற்கு அநேக திருநாமங்கள்.

அகத்திய மாமுனி, தேரையர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை எண்ணற்ற ஞானியர் உள்ளம் கவர்ந்த இந்த தெய்வீக மலை அதிசயங்கள் பல நிறைந்தவை. பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது. சிவ - சக்தி திருமணத்துக்கு தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா, முருகப்பெருமானின் ஆலோசனையால் இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அப்போது மலைமீது அகத்தியருக்குக் காட்சி தந்த குகை, இன்றும் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறையாக உள்ளது. அகத்தியரின் மாணாக்கராக இங்கு வசித்துவந்த தேரையரின் ஜீவசமாதியும் இங்கேயே உள்ளது இங்கு.

மகாஸ்கந்த ஹோமம்
மகாஸ்கந்த ஹோமம்

நவகோடி சித்தர்களின் தபோவனமாக விளங்கிய இந்த மலை, பிறகு களையிழந்து போக, ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் இம்மலை மீண்டும் பொலிவு பெற்றது. அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தோரணமலை மலைமீது குகையில் தாம் இருப்பதாக வெளிப்படுத்த, அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாகின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற்றது. அவரின் ஓயாத உழைப்பால் பல சந்நிதிகளும், மலைக்கு செல்ல திருப்படிகளும் உருவாகின. மலைமீது அபூர்வமான குகை முருகப்பெருமான் ஆலயமும், மலையடிவாரத்தில் வேறொரு முருகப் பெருமான் ஆலயமும் உருவானது. இங்கு ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் போன்ற சந்நிதிகளும் உள்ளன. சித்தர்கள் உலாவும் இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஆண்டு தைப்பூச தினமான பிப்ரவரி-5ம் தேதி (2023) இங்கு விசேஷ ஆராதனைகள் நடைபெற உள்ளது. அதிகாலை 6 மணிக்கு தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம், ஆன்மிக கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. மேலும் இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. நாள் முழுவதும் முருகப்பெருமானுக்கு மலை மீதும் மலையின் கீழும் வெகு விசேஷமான ஆராதனைகள் நடைபெற உள்ளன.

தோரணமலை முருகன்
தோரணமலை முருகன்

மூர்த்தம், தீர்த்தம், தலம், மலைவளம் என அனைத்திலும் சிறந்து விளங்கும் தோரணமலை, முருக பக்தர்களுக்கு ஒரு அருமையான சரணாலயம் எனலாம். இயற்கை அழகும் இறையின் அருளும் பொங்கிப்பெருகும் இந்த தலத்தில் ஒருநாள் வந்து தங்கினாலே பெரும்பாலான வியாதிகள் தீர்ந்துவிடும் என்பார்கள். அத்தனை ஆரோக்கியமான காற்று, மூலிகைகளின் மணம், இனிய ஊற்று நீர் என எங்கெங்கிலும் அற்புதமான சூழல் நிலவுகிறது. இந்த இடத்தில் நிச்சயம் முருகப்பெருமானின் அருளையும் சித்தர்களின் இருப்பையும் நீங்கள் கண்டுகொள்ளலாம்.

அற்புதமான இந்த தலத்தில் தைப்பூச விழாவைக் கொண்டாட தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து மகா ஸ்கந்த ஹோமம் எனும் சிறப்பான ஹோமத்தை நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் உங்கள் வேண்டுதல் யாவும் ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. குறிப்பாக தீராத நோய்கள் தீரும், மனஅமைதி கிட்டும். ஓயாத உழைப்பால் சலிப்பு கொண்டோருக்கு இந்த தலம் அமைதியும் மகிழ்வும் அளிக்கும். மேலும் தோஷ நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும். விரயச் செலவுகள் நீங்கும். ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு,பதவி உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு கிட்டும். உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொந்தங்களின் பகை தீரும். சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும், கடன் தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்தச் சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள். அன்பர்களே இந்த மகா ஸ்கந்த ஹோமத்தில் நாமும் பங்கு கொள்வோம்! நலமும் வளமும் பெறுவோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.