Published:Updated:

புனிதவதி, கமலவதி, திலகவதி... சைவ சமயத்தின் 3 ரத்தினங்கள்! - அதிகாலை சுபவேளை

காரைக்கால் அம்மையார் - அதிகாலை சுபவேளை
காரைக்கால் அம்மையார் - அதிகாலை சுபவேளை

புனிதவதி, கமலவதி, திலகவதி... சைவ சமயத்தின் 3 ரத்தினங்கள்! - அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

1. 7. 21 ஆனி 17 வியாழக்கிழமை

திதி: சப்தமி மாலை 6.37 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: பூரட்டாதி காலை 6.49 வரை பிறகு உத்திரட்டாதி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

ஹயக்ரீவர்
ஹயக்ரீவர்

சந்திராஷ்டமம்: ஆயில்யம் காலை 6.49 வரை பிறகு மகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: லட்சுமி ஹயக்ரீவர்

புனிதவதி, கமலவதி, திலகவதி... சைவத்தின் 3 ரத்தினங்கள்!

நம் மரபில் ஆண் பெண் இருபாலருக்குமே ஆன்மிக வளர்ச்சியில் சமபங்கு உண்டு. இன்னும் சொல்லப்போனால் பல நேரங்களில் பெண்களே முன்னோடிகளாக இருந்து சமயப் பணி செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களில் மூவரை சைவம் மூன்று ரத்தினங்கள் என்று போற்றும். புனிதவதி, கமலவதி, திலகவதி ஆகிய மூவரே அந்த ரத்தினங்கள். சைவத்தில் ஐந்தெழுத்து மிகவும் புனிதமானது, மகத்துவமானது. அதேபோன்று ஐந்தெழுத்தில் தம் பெயரைக் கொண்டதாலோ என்னவோ இவர்கள் பெரும் று பெற்றார்கள். ஒருவகையில் இவர்கள் பெரும் ஆன்மிகப் பணிகளின் தொடக்கப் புள்ளிகளாக இருந்தவர்கள். தங்களைத் தியாகம் செய்து சமயத்தை வாழவைத்தவர்கள். இவர்களிடமிருந்து பெரும் தொண்டு தொடங்கியது. அப்படிப்பட்ட மகத்தான அந்த மூன்று ரத்தினங்கள் குறித்தும் அவர்கள் சமயத்துக்கு ஆற்றிய தொண்டு குறித்தும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்

இன்றைய ராசிபலன்கள்

விரிவான இன்றைய பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்:

நம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். - நம்பிக்கை அதானே எல்லாம்!

ரிஷபம்:

மகிழ்ச்சி : குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். செலவுகள் அதிகரித்தாலும் பணவரவும் உண்டு. சகோதர உறவுகளிடம் மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. - ஆல் இஸ் வெல்!

மிதுனம் :

அலைச்சல் : புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குங்கள். சிந்தித்துச் செயல்படுவதன் மூலம் தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

கடகம் : சோர்வு : அதிகாலையில் சோர்வு காணப்பட்டாலும் பிற்பகலுக்கு மேல் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி தாமதமானாலும் கிடைத்துவிடும். இறைவழிபாடு நல்லது. - எல்லாம் நன்மைக்கே!

சிம்மம்: கவனம் : புதிய முயற்சிகளில் கவனம் தேவை. ஆரோக்கியத்திலும் அக்கறை அவசியம். யாரோடும் விவாதத்தில் ஈடுபட வேண்டாம். இறைவழிபாடு செய்ய வேண்டிய நாள். - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி: நன்மை : எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்துசேரும். சகோதர உறவுகளுக்கு உதவுவீர்கள். பிற்பகலுக்கு மேல் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. - நாள் நல்ல நாள்!

துலாம்: நிதானம் : செலவுகள் அதிகரிக்கும். பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். என்றாலும் செயல்களில் கூடுதல் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

விருச்சிகம்: அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும். - என்ஜாய் தி டே!

தனுசு: சுறுசுறுப்பு : காலை முதலே சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். செயல்கள் சாதகமாகும். சகோதர உறவுகளால் நன்மை கிடைக்கும். குடும்பத்திலிருந்த மனஸ்தாபம் நீங்கும். - ஜாலி டே!

மகரம்: விவாதம் : பணவரவு உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் யாரோடும் விவாதம் தவிர்ப்பது நல்லது. - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்: பிரச்னை : எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினரின் ஆதரவு உண்டு. என்றாலும் சிறு சிறு பிரச்னைகள் வந்துபோகும். நிதானம் தேவை. - சவாலே சமாளி!

மீனம் : ஆரோக்கியம் : மன உறுதியுடன் செயல்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் அக்கறை தேவை. - ஹெல்த் இஸ் வெல்த்!

அடுத்த கட்டுரைக்கு