Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

சதுர்வேத சாகாத்யாயினீம், ஸகல சாஸ்த்ரார்த்த ஸ்வரூபிணீம்

சதுர்தச புவனாதீஸ்வரீம் அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயகீம்,

தத்வஸ்வரூபிணீம், பதிவ்ரதா பூஷணீம், வேதவதீ அபராவதாரிணீம்,

ஸர்வ ஸிபலஷ்ண, ஹேதுபூத ஸர்வாங்க ஸுந்தரீம் ஸஹஸ்ர பத்மதள ஸம்பவீம்,

ம்ருகசீர்ஷ நக்ஷத்ர உத்பவீம், சந்த்ரவம்ஸ ப்ரதீபிகாம்

ஆத்ரேய ஆர்ச்சநாநஸ ஸ்யாவாஸ்வ த்ரயாரிஷேய,

ப்ரவரான்வித, ஆத்ரேய கோத்ரோத் பவாம்,

ஸீவீர மஹாராஜ வர்மணோ நப்த்ரீம், ஸுதர்ம மஹாராஜா வர்மண: பௌத்ரீம்,

ஆகாஸ மஹாராஜ வர்மண: புத்ரீம்,

பத்மாவதீ நாம்நீம் ஸாக்ஷாத் லஷ்மீ ஸ்வரூபிணீம் இமாம் கன்யாம்

- ப்ரவரம்

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


சேர்த்தி உற்சவம், வைணவத் தலங்களில் கோலாகலமாக நிகழும். அதிலும் ரங்கத்தில் நிகழும் சேர்த்தி உற்சவம் உலகப் புகழ்பெற்றது. ரங்கநாதரும் ரங்கநாயகித் தாயாரும் சேர்ந்து திருக்காட்சி அருளும் திருநாள் அது. லட்சக்கணக்கான பக்தர்கள் அந்த நாளில் தரிசனம் செய்ய விரும்புவார்கள். தாயாரோடு பெருமாள் சேர்ந்து காட்சிகொடுக்கும் வேளையில் கேட்கும் வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதனால்தான் கல்யாண உற்சவம் காண மக்கள் வெள்ளம் திரள்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கல்யாண உற்சவம் நாடெங்கும் நடைபெறுகிறது. அப்போது கூடும் மக்கள் கூட்டமே இதற்கு சான்று. இன்று உற்சவமூர்த்திகளுக்கு நிகழும் திருக்கல்யாணத்தை தரிசிக்கவே மக்கள் இன்று இத்தனை கூடுவார்கள் என்றால், அன்று பெருமாளும் தாயாரும் மனித ரூபம் கொண்டு எழுந்தருளித் திருக்கல்யாணம் கண்டருளும் திருக்காட்சியைக் காண தேவரும் ரிஷிகளும் மனிதரும் எப்படி ஆவல் கொண்டிருப்பார்கள்...

அப்படி ஒரு வரம் தரும் வைபவம் ஒன்றை இந்த உலக நன்மைக்காக நிகழ்த்தவே பெருமாள் திருமலையிலிருந்து இறங்கி வந்து நாராயணபுரத்தில் அலர்மேல் மங்கையைக் கண்டு அவள் மனதிலும் காதலை உண்டாக்கிப் பின் வகுளாதேவியைப் பெண் கேட்டு அனுப்பி வைக்கிறார் என்றால் அவரின் திருவிளையாடலை என்னவென்பது?

நிவாசனே குறத்தியாக வந்து தரணிதேவிக்குக் குறி சொல்லிவிட்டு வகுளையின் வரவையும் முன்சொல்லிக் கிளம்பினார். தேவியின் மனதிலோ சிறு கலக்கம்.

"யார் அவன்... பத்மாவதியின் மனம் கவர்ந்தவன்... அவன் மந் நாராயணன் என்றால் அவர் மனித உருவம் கொண்ட பத்மாவதியை எப்படி மணம் கொள்வார்?" என்று நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வகுளாதேவியைப் பணிப்பெண்கள் அழைத்துவர வருகிறாள்.

தரணி தேவிக்குக் குறத்தி குறிப்பிட்டுச் சொன்ன பெண் இவள்தான் என்பது புரிந்துவிட்டது. எதிர்கொண்டு வரவேற்றாள். "யார் நீங்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு வகுளமாதா, "அம்மா நான் சேஷாசலத்தில் இருந்து வருகிறேன். இப்பிறப்பில் வேங்கடேசப் பிரபுவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்றவள். அவரின் ஆணைப்படி உங்கள் பெண்ணை நான் அவருக்கு மணமுடிக்க வந்துள்ளேன். தாங்கள் இந்த நற்காரியம் நடைபெற ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்" என்று சொன்னாள்.

கல்யாண உற்சவம்
கல்யாண உற்சவம்


இதைக்கேட்ட தரணிதேவி கவலை தோய்ந்த முகத்தினள் ஆனாள். "அம்மா, உன் முகம் வாடுவது ஏன்? உலகில் பெண் எவருக்கும் கிடைத்தற்கரிய பேறு அல்லவா இது? இதில் வாட்டம் கொள்ள என்ன உள்ளது? " என்று கேட்க அதற்கு தரணி தேவி பதிலுரைத்தாள்.

"தாயே... நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். வேங்கடவன் அந்த நாராயணனின் அம்சம். அப்படியிருக்கையில் ஹரியோடு அந்த மகாலட்சுமி உடன் இருப்பாள் அல்லவா... அப்படியிருக்கையில் ஏன் அவர் என் பெண்ணை விரும்புகிறார் என்பதுதான் குழப்பமாக உள்ளது" என்றாள்.

இதைக் கேட்ட வகுளா, "அம்மா, உன் கவலை புரிகிறது. இந்த நிவாச அவதார காலத்தில் லட்சுமி தேவி கொல்லாபுரம் சென்று அங்கே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இந்த நிலையில்தான் நிவாசன் உன் மகள் பத்மாவதியைக் கண்டு காதல் கொண்டுள்ளார். இதில் குழப்பம் அடைய எதுவுமே இல்லை" என்று சொன்னாள்.

இதைக் கேட்ட தரணிதேவி கொஞ்சம் தெளிவுற்று, வகுளாதேவி சொன்ன செய்தியை ஆகாச ராஜனுக்குச் சொன்னாள். இதைக்கேட்ட ஆகாசராஜன் மகிழ்ச்சி அடைந்தான். ஆனாலும் 'குருவின் கடாட்சம் இல்லாமல் எந்த நற்காரியமும் ஸித்திக்காது' என்பதால் பிருகஸ்பதியை மனதில் நிறுத்தித் தொழுதான். அப்போது பிரகஸ்பதி நேரில் பிரசன்னமாகித் தன் ஆசிகளைக் கூறி, "மன்னா, உன் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மேலும் தேவ ரகசியங்களை ரிஷிகள் அறிவார்கள். நீ சுகப்பிரம்மரிஷியை அணுகினால் இந்தத் திருமண வைபவத்தை நடத்த சகலவிதமான வழிகாட்டல்களையும் செய்வார்" என்று சொன்னார். இதைக் கேட்ட மன்னன் ஆகாச ராஜன் சுகப் பிரும்மத்துக்குச் சொல்லி அனுப்பினான்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி


சுகப்பிரம்மரிஷி நடந்தவற்றை எல்லாம் அறிந்து திருமண வேலைகளைத் தொடங்கினார். கல்யாணத்துக்கு முதல்படி லக்கினத்தைக் குறிப்பது. சுகபிரம்மமும் குருதேவரும் சேர்ந்து அந்த லக்கினத்தைக் குறித்தனர். பின்பு பத்திரிக்கையைத் தயார் செய்தனர். மனிதர்கள் மூலம் அந்தப் பத்திரிக்கையைக் கொண்டுபோய்ச் சேர்த்தால் நாள் ஆகும் என்று சுகபிரம்மத்தையே கொண்டுபோய்ச் சேர்க்க குருபகவான் வேண்டிக்கொண்டார். சுகபிரம்மமும் அதை ஏற்று கிளி ரூபம் கொண்டு நிவாசனை தரிசித்து வணங்கிப் பத்திரிக்கையை அவரிடம் கொடுத்தர்.

அதுவரை பத்மாவதியின் நினைவாகவே இருந்த நிவாசன் மனம் மகிழ்ந்து, "வைகாச சுக்லபட்ச தசமியும் வெள்ளிக்கிழமையுமாக அமைந்த நாளின் வரும் சுபமுகூர்த்ததுக்குத் தன் இஷ்ட மித்ர பந்துக்களுடன் வருகிறேன்" என பதில் எழுதி அதை சுகப்பிரம்மத்திடம் கொடுத்தனுப்பினார். சுகப்பிரம்மமும் பதில் கடிதத்தைக் கொண்டுவந்து ஆகாசராஜனிடம் கொடுக்க அவரும் மகிழ்ந்தார். தரணிதேவி வகுளாமாதாவுக்கு பட்டுவஸ்திரங்களையும் ஆபரணங்களையும் வழங்கி கௌரவித்தார். வகுளாமாதா அவற்றைப் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியோடு திருமலைக்கு வந்து சேர்ந்தார்.

நடந்தவற்றை எல்லாம் ஆச்சர்யம் பொங்க நிவாசனிடம் விவரித்தார். எதுவும் அறியாதவர்போல நிவாசனும் தாயின் சொல்லைக் கேட்டு மகிழ்ந்தவர் முகத்தில் லேசான வாட்டம் தோன்றியது. அதைக் கண்ட வகுளாமாதா, "என்ன ஆயிற்று நிவாசா, ஏன் இந்த முக மாற்றம்?" என்று கேட்க வேங்கடவனோ கவலை தோய்ந்த முகத்துடன் பேசலானார்.

"தாயே திருமணம் நிச்சயமானதில் மகிழ்ச்சி. ஆனால் திருமணத்துக்குத் தேவையான பணத்துக்கு எங்கே போவது?" என்று கூற வகுளாமாதா சிரித்தாள்.

"நிவாசா... இது என்ன வேடிக்கை. சாதாரண மானுடன் போல் நாடகமாடுகிறீர்கள்... லட்சுமி உம் கண் அசைவிற்காகக் காத்திருப்பவள். அவளைக் கேட்டால் தேவைக்கும் அதிகமாக செல்வத்தை வாரிவழங்கமாட்டாளா?" என்று கேட்டாள்.

நிவாசனோ, "தாயே, நீங்கள் சொல்வது சரிதான். நான் கேட்டால் லட்சுமி தருவாள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இந்தப் பிரபஞ்சத்தில் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளப் பொருள் வேண்டும் என்று மனைவியையே கேட்கும் கணவன் யாரேனும் உண்டா? அப்படிக் கேட்பதுதான் முறையாகுமா?" என்று சொல்ல வகுளாமாதாவும் கவலை கொண்டாள்.

"நிவாசா, எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நாம் ஏன் வராகமூர்த்தியிடம் பொருள் வேண்டிப் பெறக்கூடாது?" என்று கேட்க நிவாசனும் மற்றுமொரு திருவிளையாடலுக்குத் தயாராகி, "தேவையிருக்கும்போது கேட்கக் கூச்சப்பட்டால் நடக்குமா... வாருங்கள் இருவரும் சென்று அந்த வராக மூர்த்தியை சேவிப்போம்" என்று சொன்னார். இருவரும் வராக சுவாமியை தரிசனம் செய்யச் சென்றனர்.

- தரிசனம் தொடரும்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism