Published:Updated:

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி

Published:Updated:
திருமலை திருப்பதி
பிரீமியம் ஸ்டோரி
திருமலை திருப்பதி

அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா,

நிகர் இல் புகழாய் உலகம் மூன்று உடையாய்! என்னை ஆள்வானே,

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே,

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே.

- நம்மாழ்வார்


திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

திருமலை திருப்பதி என்று போற்றப் படும் ஏழுமலைகளும் நான்கு யுகங்களாக நிலைத்து நிற்கும் சிறப்பினை பெற்றவை. திருமால் கலியுகத்தில் சுயம்பு மூர்த்தியாகக் கலியுகத்தில் எழுந்தருளப் போகும் திவ்ய ஸ்தலம் என்பதை அறிந்து, ரிஷிகளும் தபஸ்விகளும் திரளாக வந்து அங்கே தவம் செய்யத்தொடங்கினர்.

பெருமாளும் அங்கே அர்ச்சாவதார மூர்த்தமாக எழுந் தருள்வதற்கு முன்பா கவே முனிவர்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம், அந்த மலைகளில் சஞ்சாரம் செய்து துஷ்டர்களை சம்ஹாரித்து பலவிதமான லீலா விநோதங்களையும் புரிந்து திருமலையின் மகாத்மியத்தை இந்தப் பிரபஞ்சத்துக்கு வெளிப்படுத்தினார் என்கின்றன ஞானநூல்கள். பின்னர், அர்ச்சாவதார மூர்த்தமாக ஏழுமலையில் எழுந்தருளும் தருணத்தில், ஓர் உத்தமமான பக்தன் மூலம் வெளிப்பட வேண்டும் என்று திருவுளம் கொன்டார் பெருமாள். அப்படி ஒரு பக்தனாகத் தொண்டைமான் விளங்கினார். அவர் திருமலைக்கு வந்த சரிதமும் அங்கே பெருமாள் அவருக்கு வெளிப்பட்ட சம்பவம் குறித்தும் புராணம் சொல்லும் தகவல் மிக சுவாரஸ்யமானது.

நாக கன்னிகையின் கதை!

முற்காலத்தில் சோழ மண்டலத்தை ஆண்டு வந்த ராஜா ஒருவர் கானகம் ஒன்றிலே வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு நாக கன்னிகையைக் கண்டார். அழகில் ரதியைப் போன்று இருந்த அந்த நாக கன்னிகையின் மீது ராஜனுக்கு விருப்பம் உண்டானது. அவர் அவளை நெருங்கித் தன் ஆசையைக் கூறினார். இருவரும் காந்தர்வ விவாகம் செய்துகொண்டனர். வனத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

நாக கன்னிகை பாதாள லோகத்தைச் சேர்ந்தவள். சோழ மன்னனோ நாட்டில் வாழ்பவர். எத்தனை நாள்கள் அவர் நாட்டையும் பரிபாலனத்தையும் விட்டுவிட்டுக் காட்டில் வாழ முடியும்? நாக கன்னிகையிடம் தன் நிலையைச் சொல்லி விடைபெற்றார்.

அந்த நாககன்னி கர்ப்பவதியாக இருந்தும் வேறு வழியின்றி அவருக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுத் தன் தந்தை இருக்கும் நாகலோகத்துக்குத் திரும்பி வந்தாள். நடந்தவற்றை எல்லாம் தன் தந்தையிடம் சொன்னாள். அவரோ எல்லாம் இறைவனின் சித்தப்படிதான் நடக்கும் என்று அவளைத் தேற்றினார். சில மாதங்களில் அவளுக்கு அழகான ஓர் ஆண்மகன் பிறந்தான். அவனுக்குத் தொண்டைமான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள்.

தொண்டைமான் சகல கலைகளையும் கற்றுக் கல்வியில் சிறந்தவனாகவும் நல்ல அழகிய தோற்றம் உடையவனாகவும் வளர்ந்தான். பாதாள லோகமே மெச்சும் வீரனாக விளங்கிய தொண்டைமானுக்கு ஒரு நாள் தன் தந்தை யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. தன் தாயைக் கேட்டான். அவளும் “உன் தந்தை சோழ மன்னன்” என்று சொல்ல, அதைக் கேட்டதும் அவன் தன் தந்தையைக் காண விரும்பி தாயிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.

பாதாள லோகத்திலிருந்து சோழ தேசத்தை அடைந்தான். அங்கே அரண்மனை எங்கே இருக்கிறது என்பதைக் கேட்டுக் கொண்டு மன்னனைச் சந்திக்கச் சென்றான். செல்லும் வழியிலெல்லாம் மக்கள் அவனைக் கண்டு வியந்தார்கள்.

காரணம், அவன் தங்களின் ராஜாவைப் போலவே இருக்கிறான் என்பதுதான். சோழ மன்னனின் அவைக்குச் சென்று அவனைக் கண்டு வணங்கினான் தொண்டைமான். அவனைக் கண்டதும் மன்னனுக்கு வேறு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. அவன், தனக்கும் நாக கன்னிகைக்கும் பிறந்த மகன் என்பதைப் புரிந்துகொண்டார்.

தன் மகனுக்குத் தன் தேசத்தில் பாதியைப் பிரித்துக்கொடுத்து அவனை அதற்கு அரசனாக்கினார். தொண்டைமான் ஆட்சி செய்ததால் அது தொண்டை மண்டலம் என்றாயிற்று என்று சொல்வாரும் உண்டு. தொண்டைமான் `நாராயணகிரி' என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். அந்த நாராயணகிரியே இன்றைய `கீழ்த் திருப்பதி' என்று சொல்கிறார்கள்.

தொண்டைமான் தசரதச் சக்கரவர்த்தியைப்போல நீதி வழுவாது ஆட்சி செய்தான் என்கின்றன புராணங்கள். பக்தியிலும் தர்மத்திலும் வழுவாத அவனுக்குத் தன்னை வெளிப்படுத்தும் நேரம் வந்துவிட்டதைப் பெருமாள் உணர்ந்தார். தன் திருவிளையாடலைத் தொடங்கினார்!

இறைவன் நிகழ்த்திய அருளாடல்!

அரண்மனைக்குப் பால் கொண்டு வருபவர்கள் ஏழுமலையில் ஒரு மலையில் இருந்தே வருவார்கள். ஒருநாள் அப்படிப் பால் கொண்டு வரும்போது பால் குடம் ஓர் இடத்தில் தவறி விழுந்து உடைந்து, பால் எல்லாம் அந்தப் பக்கம் இருந்த புற்றின் மீது கொட்டியது. தன் பிழைதான் என்று பால் எடுத்துவந்தவன் நினைத்தான். மறுநாளும் அந்தப் பக்கம் வரும்போது, அவனை அறியாமல் பானை கீழே விழுந்து உடைந்தது. அவனுக்குக் கலக்கம் உண்டானது. அடுத்தடுத்த நாள்களிலிலும் அதே சம்பவம் தொடர, பால் கொண்டு வரும் அன்பர்கள் `இனி வேறு பாதையில் போக வேண்டியதுதான்' என்று முடிவு செய்தனர்.

இறைச் சித்தமோ வேறுவிதமாக இருந்தது!

பால் கரந்தால்தானே எங்கும் கொண்டு செல்லமுடியும்? மறு நாளிலிருந்து பசுக்கள் எல்லாம் ஒரு புற்றின் அருகே சென்று தாமே அங்கு பால் சொரியத் தொடங்கின. இந்த அதிசயத்தைக் கண்ட மலையில் வாழும் ஆயர்கள், இந்த அற்புதத்தை மன்னனுக்குத் தெரிவித்தனர். மன்னன் இந்த அதிசயத்தைக் கேட்டானே தவிர, அதைப் பெரிதாய்ப் பொருட்படுத்தவில்லை.

அதே மலையில் ஒரு விவசாயி இருந்தான். மலையில் திணை விதைத்து அறுவடை செய்பவன். தெய்வ பக்தி நிறைந்தவன். தேவ பூஜை செய்து விட்டுத்தான் அறுவடை செய்வது வழக்கம். அங்ஙனம் அறுவடை செய்யும் நாளில், அறுவடைக்கு முன்பாகத் தன் மகனை அங்கு காவலுக்கு விட்டுவிட்டு அந்த விவசாயி வீடு வரைக்கும் சென்று திரும்பிக்கொண்டிருந்தான்.

மகனுக்குத் தந்தையின் நியமங்கள் தெரியாது. திணைதானே என்று ஒரு கதிரை அறுத்து அதிலிருந்த திணையை உதிர்த்து அதைத் தட்டித் தின்ன ஆரம்பித்தான். அப்போது அங்கு வந்த விவசாயி அவனைக் கடிந்துகொண்டார்.

திருப்பதி
திருப்பதி


``தேவ பூஜை ஆகும் முன்பாக எப்படி நீ சாப்பிடலாம்'' என்று அவனை அடிக்கக் கை ஓங்கினான். அப்போது, `தேவபூஜை ஆகிவிட்டது'' என்று ஓர் அசரீரி கேட்டது.

அந்த வாக்கு எங்கிருந்து கேட்டது என்று சுற்றி முற்றும் பார்த்தான் விவசாயி. ஆனால் யாரும் இல்லை. ஆனால் வயலின் நடுவே ஒரு வராகம் மேய்ந்து கொண்டிருந்தது. அதைக் கண்டதும் அவனுக்கு இன்னும் வியப்பும் கோபமும் அதிகமாயின. ஒரு தடியை எடுத்துக் கொண்டு வராகத்தை அடிக்கப் பாய்ந்தான். ஆனால் அந்த வராகம் அவன் கையில் சிக்காமல் ஓடிக்கொண்டே இருந்தது. கடைசியில் ஒரு புற்றின் அருகே சென்று அதனுள் மறைந்துவிட்டது.

விவசாயி அந்தப் புற்றின் அருகே சென்று பார்த்தான். மிகச் சிறிய துளை இருந்தது. அந்தத் துளைக்குள் வராகம் எப்படிச் சென்றிருக்கும் என்று வியந்தான். இது ஏதோ தேவ ரகசியம்தான் என்று நினைத்தவன், இதுகுறித்து மன்னனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினான்.

இப்போது மன்னன் இதுகுறித்துச் சிந்திக்க ஆரம்பித்தான். ஏற்கெனவே அதே புற்றில்தான் பசுக்கள் பால் சொரிந்தன என்று தகவல் வந்திருந்தது. இப்போது அதே புற்றுக்குள் வராகம் புகுந்துள்ளது என்றால் அதில் என்ன ரகசியம் இருக்கிறது என்று அறிந்துகொள்ள ஆவல் வந்தது. அந்த ஆவலோடு அந்த நாளில் உறங்கப்போனான். சொப்பனத்தில் அழகான சுந்தர ரூபன் ஒருவன் தோன்றினான். தொண்டைமான் அந்த மகாபுருஷனை ``சுவாமி, நீங்கள் யார்?'' என்று விசாரித்தான். அதற்கு அந்த சுந்தரபுருஷனோ, ``தான் சேஷாசலத்தில் ஒரு புற்றில் இருக்கிறேன். நீ என்னை அங்கே வந்து பார்'' என்று சொல்லவும் மன்னனுக்கு உறக்கம் கலைந்தது.

காலையிலே எழுந்து தயாராகி தன் படைகளோடு திருமலைப் பயணத்தை மேற்கொண்டான். மலையில் வாழும் ஆயர்குல மக்கள் எல்லாம் முன்னால் சென்று அந்தப் புற்று இருக்கும் இடத்தைக் காட்டினார்கள்.

அப்படி ஒரு பிரமாண்டப் புற்றைப் பார்த்ததும் தொண்டைமான் கைக்கூப்பித் தொழுது ஆயிரம் கலசம் பால் எடுத்துவரச் செய்து அந்தப் புற்றுக்கு அபிஷேகம் செய்து அந்தப் புற்றைக் கரைத்தான். அப்போது அனைவரும் வியந்து போகும்படி புற்றுக்குள் அந்த தரிசனம் கிடைத்தது!

- தரிசனம் தொடரும்...

கொலுவு தர்பார்!
கொலுவு தர்பார்!

கொலுவு தர்பார்


ஏழுமலையான் கோயிலில் நாள் முழுவதும் பெருமாளுக்குப் பல்வேறு சேவைகள் நடைபெறும் அதிகாலையிலேயே சுப்ரபாத சேவை, நவநீத ஹாரத்தி, தோமாலா சேவா என்று பல்வேறு சேவைகள் தொடர்ந்து நடைபெறும்.

அவற்றில்... காலை 4.30 மணிக்கு தோமாலை சேவை நிறைவு பெற்றதும் கொலுவு தர்பார் நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக உள்ள `கொலுவு நிவாச மூர்த்தி' என்னும் சுவாமியின் உற்சவத்திருமேனி ஏழுமலையான் சந்நிதிக்குள் இருக்கும். இந்தத் திருமேனியை வெள்ளிப் பல்லக்கில் வைத்து, வெள்ளிக் குடை பிடித்து சந்நிதியில் இருந்து வெளியில் எடுத்து வருவார்கள்.

ஒரு மறைவிடத்தில் வைத்து அந்த மூர்த்திக்கு எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத் தியம் செய்து அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் அந்த நாளுக்கான பஞ்சாங்கத்தை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் வாரி உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி ஆகியன எவ்வளவு கிடைத்தது என்னும் கணக்கை சுவாமியிடம் படித்துக் காட்டுவார்கள்.

மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியாக வெளியே எழுந்தருள்வதாக ஐதிகம் உண்டு. எனவே கோயில் தொடர்பான கணக்கு வழக்கு களைப் பெருமாளிடம் நேரடியாகச் சொல்வதாக நம்பிக்கை. இந்த வைபவத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

அஸ்வத்த விருட்சம்!

மும்மூர்த்திகளது வடிவமாகக் கருதப்படும் அரசமரத்தை காலை வேளையில் வலம் வந்து வழிபடுவது விசேஷம். கீதையில் கண்ணன், ‘‘மரங்களில் நான் அரச மரம்!’’ என்கிறார்.

அரச மரம் சர்வ தேவதா ஸ்வரூபம். இது திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதி நிலையம் ஆகிய சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி போன்ற திருமால் தலங்களிலும் தல விருட்ச மாக விளங்குகிறது. இந்த மரத்துக்கு வட மொழியில் ‘அஸ்வத்த விருட்சம்’ என்று பெயர். அரச மரத்தை வழிபடுவோரின் பாவம் மறுநாளுக்குள் அழிந்துவிடும். அரச மர நிழல் படும் நீர் நிலைகளில் வியாழன், அமாவாசை நாட்களில் நீராடுவது பிரயாகை- திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்குச் சமம்!

- சி.செந்தில், கரூர்