Published:Updated:

திருப்பதி தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா: மறு பிறப்பைப் போக்கும் நீராடலின் சிறப்புகள்!

தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா

மார்ச் 18-ம் நாள் வெள்ளிக்கிழமை தும்புரு தீர்த்தத்தில் 'தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா' திருவிழா நடைபெற உள்ளது. பாபநாசத் தீர்த்தத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்துக்குச் செல்ல பல வசதிகளைச் செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதி தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா: மறு பிறப்பைப் போக்கும் நீராடலின் சிறப்புகள்!

மார்ச் 18-ம் நாள் வெள்ளிக்கிழமை தும்புரு தீர்த்தத்தில் 'தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா' திருவிழா நடைபெற உள்ளது. பாபநாசத் தீர்த்தத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்துக்குச் செல்ல பல வசதிகளைச் செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

Published:Updated:
தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா
திருமலை திருப்பதியில் மங்களகரமான 'தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா' வரும் மார்ச் 18 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கொரானாக் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் தளர்த்தியுள்ளதால், தும்புரு தீர்த்தத்திற்கு வரும் பக்தர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதிக்கும் என்று அதன் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தும்புரு தீர்த்தம்
தும்புரு தீர்த்தம்

ஸ்ரீவேங்கடநாதனாக திருமால் திருமலையில் எழுந்தருளிய பிறகு அங்கு ரிஷிகளால், தேவர்களால் பல தீர்த்தங்கள் உருவாகின என்று புராணங்கள் கூறுகின்றன. 'தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்பு’ என மகாதேசிக ஸ்வாமிகள் தனது 'அதிகார ஸங்க்ரஹம்’ என்ற நூலில் கூறியுள்ளார். இப்படி காணவும், காண இயலாதவாறும் 108 தீர்த்தங்கள் இருப்பதாக திருமலை புராணங்கள் விவரிக்கின்றன. பிரம்மாண்ட புராணத்தில் ஸ்ரீ வேங்கடேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தில் உள்ள பாடலில் (887வது திருநாமத்தில்) திருமலையில் 68 கோடி புண்ணிய தீர்த்தங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு எண்ணற்ற புண்ணிய தீர்த்தங்கள் இருப்பதால் புஷ்கராத்ரி என்ற ஒரு பெயரும் திருமலைக்கு உண்டு. பாபவிநாசம், ஆகாச கங்கை, வகுள தீர்த்தம், நாகதீர்த்தம், ஜபாலி தீர்த்தம், கனகசந்தன தீர்த்தம், தும்புரு தீர்த்தம், ராமகிருஷ்ணதீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், சேஷ தீர்த்தம், சுகஸந்தன தீர்த்தம், மொர தீர்த்தம், குமார தீர்த்தம் என பல தீர்த்தங்கள் இன்றும் திருமலையில் உள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருமலை திருப்பதிக்குச் செல்லும் பக்தர்கள் யாவரும் ஆலய முக்கியத் தீர்த்தமான சுவாமி புஷ்கரணியில் தீர்த்தமாடுவது வழக்கம். தீர்த்தமாடலில் மூன்று வகைகள் உண்டு. நித்தியம், நைமித்தியம், காமியம் எனப்படும். தினமும் அதிகாலையில் நீராடுவது நித்திய நீராடல். பௌர்ணமி, அமாவாசை, விசேஷ தினங்கள், கிரகண காலங்கள், சூரியன் மற்றொரு ராசியில் பிரவேசிக்கும் மாதப் பிறப்பு நாள், போன்ற காலங்களில் தீர்த்தங்களில் நீராடுவது நைமித்தியம். குறிப்பிட்ட பலனுக்காக குறிப்பிட்ட தீர்த்தங்களுக்குச் சென்று நீராடுவது காமியம். இதில் சுவாமி புஷ்கரணி மூன்று தீர்த்தமாடலுக்கும் உகந்தது. அதனால் இதுவே 'தீர்த்தங்களின் அரசி' எனப்படுகிறது. திருமலையில் உள்ள மற்ற தீர்த்தங்கள் நைமித்தியம், காமியம் என்ற நீராடலுக்கு உகந்தவை.

ஸ்ரீவேங்கடநாதனாக திருமால்
ஸ்ரீவேங்கடநாதனாக திருமால்

ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை அன்றாடம் உச்சரிப்பவர்கள் நாரதரும் தும்புருவும். ஒருமுறை நாரதர், தும்புரு கையில் இருந்த பொன் வீணையைக் கண்டு ஆச்சர்யப்பட்டு 'இது எது!' என்று வினவினார். தும்புருவும் பூமியில் ப்ராசீன பர்ஹி என்ற அரசன், அவனைப் புகழ்ந்து தாம் பாடியதாகவும், அப்போது தனது இசைக்குப் பரிசாகப் பெற்றதாகக் கூறினார். இது கேட்டு கோபம் கொண்ட நாரதர், நாராயணனை விட்டுவிட்டு ஒரு நரனைப் பாடினாயே என்று தும்புருவை சபித்தார். அதன்படி வானில் இருந்து தலைகீழாக பூமியில் விழுந்தார் தும்புரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் விழுந்த இடம் பகவான் நாராயணன் குடிகொண்ட திருவேங்கட மலை கோண தீர்த்தப் பகுதி. அங்கிருந்தே பெருமாளை நோக்கித் தவமிருந்தார் முனிவர். அவர் பக்திக்கு மனங்கனிந்த பெருமாள் காட்சி தந்து, பரமபதம் அளித்தார். அந்த நாள் பங்குனி மாத உத்திர நன்னாள். தும்புரு கேட்டுக்கொண்ட விதமே 'இந்த தீர்த்தத்தில் வந்து நீராடுபவர்கள் அனைவருக்கும் பரமபதம் அளிப்பதாக வரமளித்தார் பெருமாள். அன்று முதல் கோண தீர்த்தம், `தும்புரு தீர்த்தம்' என்றானது. மேலும் சர்வபத்ரன் என்கிற அசுரன் இங்கு நீராடி மோட்சம் அடைந்தான் என்கிறது புராணம். இந்தத் தீர்த்தக் கரையில் தான் வேங்கடவனின் பக்தர்களின் பசி தீர்த்த அன்னமிட்ட அன்னை 'ஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா' தவம் செய்தாள். அவளுக்கு பெருமான் இங்குதான் நற்கதி அளித்தார் என்றும் புராணங்கள் கூறுகிறது. இங்கு வந்து பங்குனி பௌர்ணமி மற்றும் உத்திர நன்னாளில் நீராடுபவர்களுக்கு மறு பிறப்பு இல்லை, பரமபதம் வேண்டாமலேயே கிட்டிவிடும் என்று வராஹ புராணம் கூறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம்

அதன்படி வரும் மார்ச் 18-ம் நாள் வெள்ளிக்கிழமை தும்புரு தீர்த்தத்தில் 'தும்புரு தீர்த்த முக்கோடி திருவிழா' திருவிழா நடைபெற உள்ளது. பாபநாசத் தீர்த்தத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள இந்த தீர்த்தத்துக்குச் செல்ல பல வசதிகளைச் செய்துள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம். காலை முதல் இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவெங்கும் இருந்து வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், நீர் மோர் போன்றவைகளை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் யாவரும் இந்த புனித நீராடலில் பங்கு கொண்டு வேங்கடவனின் திருவருளைப் பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism