Published:Updated:

திருப்பதியில் 1,600 பேர் தங்கும் வகையில் 200 அறைகளைக் கொண்ட தங்கும்விடுதி!#Tirupati

திருப்பதி
திருப்பதி

75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் 200 அறைகள் உள்ளன. 135 வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது திருச்சானூர். இங்குதான் வரலாற்றுச் சிறப்புமிக்க பத்மாவதி தாயாரின் கோயில் அமைந்துள்ளது.

Tiruchchanur
Tiruchchanur

வைதீக முறைப்படி திருப்பதி வேங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் செல்வோர், அதற்கு முன்பாக கீழ்த்திருப்பதியில் இருக்கும் பத்மாவதி தாயாரை வணங்கிவிட்டுச் செல்வார்கள்.

திருச்சானூரிலும் மேல் திருப்பதியில் (திருமலை) நடப்பதுபோலவே பிரம்மோற்சவம், தெப்போற்சவம் போன்ற விழாக்கள் சீரும் சிறப்புமாக நடைபெறுவது வழக்கம்.

Tiruchchanur
Tiruchchanur

அத்தகைய விழாக்களை திருச்சானூரில் தங்கி தரிசிப்பதற்கு ஏற்ற வகையில் தங்கும் விடுதிகள் பலவற்றை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே அமைத்துள்ளது.

இருந்தபோதிலும் மிக பிரமாண்டமாகப் பெரிய அளவிலான வசதிகள் உள்ள விடுதி இல்லாமல் இருந்தது ஒரு குறையாகவே இருந்து வந்தது. திருச்சானூருக்கு வரும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவே இருந்து வந்தது.

Padmavathy Rest House
Padmavathy Rest House
TTD PHOTO

இதையொட்டி 75 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி ரெஸ்ட் ஹவுஸ் என்னும் மிகப்பெரிய தங்கும் விடுதி ஒன்று அங்கே கட்டப்பட்டுள்ளது.

4,26,000 சதுர அடியில் (5.35 ஏக்கர் அளவில்) இந்த விடுதி கட்டப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விடுதியில் 200 அறைகள் உள்ளன. 135 வாகனங்கள் நிறுத்தக்கூடிய அளவில் கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

Padmavathy
Padmavathy
JAISEKHARQ

ஒரே சமயத்தில் 1,600 பக்தர்கள் தங்கும் இடமாக இந்த விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. விடுதியின் முதல் தளத்தில் வரவேற்பறை, சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிய நேரம் ஒதுக்கீடு டிக்கெட் கொடுக்கும் இடம், ஏ.டி.எம், பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை வைப்பதற்கேற்ற லாக்கர்கள், உணவகம் எனப் பல்வேறு வசதிகளுடன் முதல் தளம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இந்தத் தங்கும் விடுதியை நேற்றைய தினம் டூரிஸம் கார்ப்பரேஷனுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் சுப்பா ரெட்டி வழங்கினார்.

Tirupaty
Tirupaty
JAISEKHARQ

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு