Published:Updated:

துறையூர், வெங்கடாசலபுரம் ஶ்ரீஅனந்த நாராயணப் பெருமாள் மகா சம்ப்ரோக்ஷணம் நாளை நடக்கிறது!

ஶ்ரீஅனந்த நாராயணப் பெருமாள்
ஶ்ரீஅனந்த நாராயணப் பெருமாள்

டிசம்பர் 6 -ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை விஸ்வக்சேனர் ஆராதனைகளுடன் ஹோமம் வளர்க்கப்பட்டு இரண்டு நாள்களாக பூஜைகள் பாஞ்சராத்திர முறைப்படி நடைபெற்று வருகின்றன.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், வெங்கடாசலபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ அனந்த நாராயணப் பெருமாள் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நாளை 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்குத் தொடங்கி 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அனந்த நாராயணப் பெருமாளாகக் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கும் இந்தக்கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.

400 ஆண்டுகள் பழைமையான கோயிலாகும். பக்தர்கள் மற்றும் குடிபாட்டுக்காரர்கள் பலரின் பெருமுயற்சியாலும் எம்பெருமானின் அனுகிரகத்தாலும் பல நாள்களாக நடைபெற்று வந்த ஆலயத்திருப்பணிகள் நிறைவுபெற்றன.

Garaudazhvar
Garaudazhvar

இதைத்தொடர்ந்து டிசம்பர் 6 -ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை விஸ்வக்சேனர் ஆராதனைகளுடன் ஹோமம் வளர்க்கப்பட்டுக் இரண்டு நாள்களாக பூஜைகள் பாஞ்சராத்திர முறைப்படி நடைபெற்று வருகின்றன.

நாளை 8 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியில் சுபயோகம் கூடிய சுபதினத்தில் காலை 6.00 மணிக்குத் தொடங்கி, 10.30 மணி வரை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக அனந்த நாராயணப் பெருமாள் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. மகாசம்ப்ரோக்ஷணத்தை பாஞ்சராத்திர ஆகம விதிகளின்படி ரமேஷ் பட்டாச்சார்யார், ரவிச்சந்திரன் ஐயங்கார் ஆகியோர் நடத்தித் தருகின்றனர்.

Anandha Narayana Perumal
Anandha Narayana Perumal

வெங்கடாசலபுரம் கிராம மக்களும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வைணவ பக்தர்கள், திருச்சி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் பலரும் வருகை தந்து விழாவில் கலந்துகொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளைக் கிராம மக்கள், குடிபாட்டுக்காரர்கள், இந்து அற நிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, கோயில் தக்கார் ச.முத்துராமன் மற்றும் கோயில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு