Published:Updated:

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர் கோயிலில் சந்தனம் எறிந்து வழிபடும் விநோத வழிபாடு; அபூர்வக் கதை!

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்: உருண்டு வந்த கல் குழந்தைகளை மோதாதவாறு தடுக்க சப்த கன்னியர் ஏழு பேரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்தி அந்த குழந்தைகளைக் காப்பாற்றினார்.

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர் கோயிலில் சந்தனம் எறிந்து வழிபடும் விநோத வழிபாடு; அபூர்வக் கதை!

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்: உருண்டு வந்த கல் குழந்தைகளை மோதாதவாறு தடுக்க சப்த கன்னியர் ஏழு பேரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்தி அந்த குழந்தைகளைக் காப்பாற்றினார்.

Published:Updated:
திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்

சந்தனத்தை வாங்கி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி ஏறியப்படும் குளிர்ச்சி பொருந்திய சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்
திருமூர்த்திமலை அமணலிங்கேஷ்வரர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இம்மலையின் அடிவாரத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ தொலைவில் தோணி ஓடிக் கொண்டிருக்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் தோணி நதிக்கரையில் அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அமணம் என்றால் குற்றமற்றவர் என்று பொருள். மலைகளைக் குடைந்து வடிக்கப்படும் கோயில் குடவரைக் கோயில் ஆகும். அங்ஙனம், இக்கோவிலும் சிறந்ததொரு குடைவரைக் கோயிலாகத் திகழ்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில், இத்தலத்தில் தான் இறைவன் முதன் முதலில் மழலை வடிவில் எழுந்தருளினார் என்பது ஐதீகம். இத்திருத்திருத்தலம் உருவான சுவாரஸ்யமானத் திருகதையைக் காண்போம்.

வேத கால முனிவர்களில் ஒருவரான அத்திரி முனிவர், மும்மூர்த்திகளே தனக்கு குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார். இவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு இவரது மனைவி அனுசூயாவின் முன்பு பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் தோன்றினர். அனுசூயாவிடம் தங்களுக்கு அன்னமிடும்படிக் கேட்டனர். அனுசூயாதேவி ஒரு செம்பில் தீர்த்தத்தை எடுத்து வந்து அவர்கள் மீது தெளிக்க அம்மூவரும் குழந்தைகளாக மாறினர். அக்குழந்தைகள் அங்குள்ள எட்டுக்கால் மண்டபத்தில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை நோக்கி ஒரு கல் உருண்டு வந்தது. உருண்டு வந்த கல் குழந்தைகளை மோதாதவாறுத் தடுக்க சப்த கன்னியர் ஏழு பேரும் ஏழு விரளி மஞ்சளை வைத்து கல்லைத் தடுத்து நிறுத்தி அந்த குழந்தைகளைக் காப்பாற்றினார்.

சப்த கன்னியர்
சப்த கன்னியர்

அவ்வாறு உருண்டு வந்த கல்லில் மும்மூர்த்திகளும் ஐக்கியமாகி விட்டனர். விரளி மஞ்சள்களில் சப்தகன்னியரும் ஐக்கியமாகி விட்டனர் என்கிறது தலவரலாறு. மேலும், இது அகத்தியர் வழிபட்ட தலம் என்றும் ஒரு வரலாறு உள்ளது. சகல ஜீவன்களும் சங்கமிக்க சிவபெருமான்-பார்வதி திருமணம் கயிலையில் நடைபெற்றது. பரம்பொருளின் திருமணத்தை கண்ணால் கண்டு தரிசிக்கும் பொருட்டு, முனிவர்களும், தேவர்களும், ஞானிகளும் கயிலையை நாடிச் சென்றனர். அதன் காரணமாக வடதிசை உயர்ந்து தெற்கு தாழ்ந்து காணப்பட்டது. எனவே, இவ்விரு திசைகளையும் சமன் செய்தற்பொருட்டு ஈசனின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கி வந்தார் என்பது கந்த புராணம் கூறும் செய்தி. சிவசக்தியரின் திருமணத்தைக் காண முடியவில்லை என்ற ஏக்கம் அகத்தியரின் அகத்திடையே படர்ந்தது. இதனால், அகத்தியர் மனம் மகிழ்வு பெறும் வண்ணம் பொதிகை மலையிலும் இத்திருமூர்த்தி மலையிலும் இறைவன் திருமணக்கோலத்தில் காட்சி அளித்தார் என்பது ஐதீகம். ஈசனின் திருமணக் கோலத்தையும்,கயிலாயக் காட்சியையும் இறைவன் இங்கும் காட்டியதால் இத்தலம் “தென் கைலாயம்” என்றும் அழைக்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெருமைகள் பல கொண்ட இத்திருத்தலத்தில் சந்தன வழிபாடு என்னும் சிறப்பான வழிபாடு இன்றும் நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் மணமணக்கும் சந்தனத்தை வாங்கி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி ஏறியப்படும் குளிர்ச்சி பொருந்திய சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேறு எந்த கோயிலிலும் இல்லாத விநோத வழிபாடு இங்கு மட்டுமே காணப்படுகிறது.

அமணலிங்கேஷ்வரர் கோயில்
அமணலிங்கேஷ்வரர் கோயில்

மேலும்,கோயிலின் அருகில் உள்ள மலையேற்றத்தில் பஞ்சலிங்கமும் அதனை ஒட்டி அருவியும் காணப்படுகிறது. பஞ்சலிங்கங்களை இன்றும் அத்திரி முனிவரும் அவரது மனைவி அனுசுயாவும் வழிபட்டு வருவதாக நம்பிக்கை. இந்த அருவி சிறந்ததொரு சுற்றுலா தலத்தளமாகத் திகழ்கிறது. நீண்ட ஆண்டுகளாக குழந்தைப் பேறு இன்றித் தவிக்கும் தம்பதியினர் இந்த அருவியில் நீராடி சப்த கன்னிமார்களை முறையாக வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகம். இத்தலத்தில் உள்ள சுந்தர விநாயகரை வழிபட்டு வரடிக்கல்லைப் பிடித்து வேண்டினாலும் குழந்தை பாக்கியம் கிட்டுமாம். பாலசுப்பிரமணியன் என்ற திருப்பெயரில் இங்கு முருகப்பெருமானும் எழுந்தருளி இருக்கிறார். மேலும் இங்கு ஞானகுருவான தட்சிணாமூர்த்தி வழிபாடும் சிறப்பானது என்கிறார்கள். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக 30 அடி உயர தீபகம்பம் அமைந்துள்ளது. இந்த தீபகம்பத்தின் அடியில் எண்திசைகளை நோக்கியவாறு பத்ரகாளி, வனதுர்கை, விசாலாட்சி, ஊர்த்துவத் தாண்டவர், அகோர வீரபத்திரர், ஸ்ரீராமர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீவேணு கோபாலர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இத்துணை வரலாற்றுச் சிறப்பு மிக்க திருத்தலத்தை வழிபடாது இருக்கலாமா?.. அமணலிங்கேஷ்வரர் அருள் பெற உடனே சென்று வாருங்கள்!