Published:Updated:

உதவலாம் வாருங்கள்

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

நான் வராஹி தேவியை வழிபட்டு வருகிறேன். எனக்கு அஷ்ட வராஹியரின் படம் தேவைப்படுகிறது. ஆகவே, அஷ்ட வராஹியர் படம் கிடைக்கும் இடம், கோயில் குறித்த தகவல் அறிந்த அன்பர்கள் அதுபற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- இ. பிரகாஷ், கண்டிகை

தமிழகத்தில் துவிமுக, சதுர்முக பிள்ளையார்கள் எந்தக் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். ஹேரம்ப கணபதி அருளும் ஆலயங்கள் குறித்த தகவலும் தெவை.

- கே.வேணுகோபால், நெல்லை-3

கோபுர ஆகம விதிகள் குறித்த சரித்திரத் தகவல்களுடன் கூடிய புத்தகம் ஏதேனும் உண்டா. அதுபற்றிய விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங் களேன். கோபுரங்களில் விசேஷ சிற்பங்கள், கோபுரங்களின் வரலாறுகள் குறித் தும் தகவல் திரட்டி வருகிறேன். அவை பற்றியும் விவரம் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்- சி.சரவணன், கோவை-3

அண்மையில் விழா ஒன்றில் சிவ வாத்தியங்கள் இசைக்கப்படுவதைக் கேட்டு மகிழ்ந்தேன். ஆதிகாலத்தில் இருந்த சிவ வாத்தியங்களில் ஒருசில மட்டுமே இப்போது புழக்கத்தில் இருப்பதாக அறிகிறேன். திருக்கயிலாய வாத்தியக் கருவிகள் என்று சிறப்பிக்கப்படும் அவை எண்ணிக்கையில் எவ்வளவு, அவற்றின் பெயர் என்னென்ன என்ற தகவல் தேவை. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- கே.வீரகுமார், தேனி

சப்த மாதர்கள் - சப்த கன்னியர்கள் என்ன வேறுபாடு. சப்த மாதர் - சப்த கன்னியர் வழிபாடு, அவர்களுக்கான ஆலயங்கள் உள்ள இடங்கள், வரலாறு, திருக்கதைகள் பற்றிய தகவல்களுடன் கூடிய நூல் ஏதேனும் உள்ளதா; எங்கு கிடைக்கும்?

- எம்.மகேஷ், சென்னை-65

கேரளத்தில் தர்மசாலாவுக்கு அருகில் ஓரிடத்தில் திருவிளக்கே தெய்வமாக வழிபடப்படுவதாக புத்தகம் ஒன்றில் படித்தறிந்தேன். அது எந்தத் தலம். அங்குள்ளது சிவாலயமா, பகவதி ஆலயமா? அன்பர்கள் எவருக்கேனும் தகவல் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கா.உஷா, தூத்துக்குடி

ஈசனுக்கு வெந்நீர் அபிஷேகம்

`ஏதோ ஓர் ஊரில் சிவலிங்கத்துக்கு வெந்நீர் அபிஷேகம் நடக்குமாமே... அது எந்த ஊர்?’ என்று திண்டிவனம் வாசகர் பி.வேலுமணி கேட்டிருந்தார். அவருக்கு கீழ்க்காணும் விவரத்தை சேலம் வாசகர் திருமலை அளித்துள்ளார்:

போளூர் - சென்னை மார்க்கத்தில் போளூரிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைwவில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள சிவாலயத்தில் அருளும் கனககிரீஸ்வரருக்குத்தான் வெந்நீர் அபிஷேகம் நிகழ்கிறது.

தேவிகாபுரம் அருகில் மலைப்பகுதியில் வேடன் ஒருவன் கிழங்கு எடுக்க முயன்ற வேளையில் ஓரிடத்தில் ஆயுதம் பட்டு குருதி பீறிட்டது. பயந்து போன வேடன் ஊராரிடம் விஷயத்தைத் தெரிவித்தான். ஊர்க் காரர்கள் திரண்டு வந்து குறிப்பிட்ட இடத்தை அகழ்ந்தபோது, சிவலிங்கம் ஒன்றைக் கண்டார்கள். லிங்கத்தின் மீது வெட்டுப்பட்ட இடத்தை வெந்நீரால் கழுவி வழிபட ஆரம்பித்தார்கள். அப்போது இந்தப் பகுதியை ஆண்ட மன்னன், சிவலிங்கத்துக்குக் கோயில் எழுப்பி, பிரதிஷ்டை செய்ய முற்பட்டபோது லிங்கம் மறைந்துபோனது.

சிவபெருமான்
சிவபெருமான்

அதனால் மனம் வருந்திய மன்னன், காசிவிஸ்வநாதரை லிங்க உருவில் பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு செய்தான். ஆனால் அதே நாளில் பழைய சுயம்புலிங்கமும் மீண்டும் தோன்றிட மன்னன் மகிழ்ந்தான். அந்த லிங்க மூர்த்தத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என்கிறது ஸ்தல புராணம்!

ஏகபாதா தேவி

`வழிபாட்டுப் பாடல் ஒன்றில் `ஏகபாததேவியே ரேவதிமாதா போற்றி’ என்று ஒரு வரி இருந்தது. சிவவடிவங்களில் ஏகபாத மூர்த்தி உண்டு என்று அறிந்திருக்கிறேன். அதேபோல் அம்பிகை மூர்த்தங்களிலும் ஏகபாததேவி உண்டா. விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்’ என்று பட்டீஸ்வரம் வாசகர் எம்.சுவாமிநாதன் கேட்டிருந்தார். இவருக்கு கீழ்க்காணும் விவரத்தை தென்காசி வாசகர் எஸ்.முருகன் அளித்துள்ளார்.

சாக்த நுல்கள் அட்சர சக்திகளின் 51 ரூபங்கள் குறித்து விவரிக்கின்றன. அவற்றில் `ஏ’ எனும் அட்சரத்துக்கான ஏகார தேவியையே ஏகபாதா தேவி என்றும் ரேவதி தேவி என்றும் போற்றுகின்றன. இந்த அம்பிகை பத்து முகங்கள், இருபது திருக்கரங்களுடன் திகழ்கிறாள். கபால ஓடுகளையும் எலும்புகளையும் மாலையாக அணிந்துள்ளாள்.

மேற்குவங்க மாநிலத்தில் வடக்கில், ஜல்பைகுரி மாவட்டத்தில் பாயும் நதி தீஸ்தா. கடல் மட்டத்திலிருந்து 17,500 அடி உயரத்தில் உள்ள சோலமோ ஏரியே தீஸ்தா நதியின் உற்பத்தி ஸ்தானம். ஜல்பைகுரி மாவட்டத்தில் இந்த நதிக்கரையில், ஜல்பைகுரி நகரிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் - வைகுந்த்பூர் எனும் வனக்கோட்டத்தில் சக்தி பீடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே அருளும் அம்மன் ப்ராமரீ தேவி என்று அழைக்கப் படுகிறாள். இவள் அருளும் இந்தப் பீடத்தையே ஏகபாதா தேவி அருளும் பீடமாகச் சொல்வார்கள்.