Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

சிவபிரானும் உமையவளும் கல்யாணத் திருக்கோலத்தில் அருளும் தலங்கள் பல உண்டு. கல்யாணக் கோலங்களில் கைத்தலம் பற்றிய கோலத்தில் இருவரும் அருளும் கோயில் எந்த ஊரில் உள்ளது, அங்கு எப்படிச் செல்லவேண்டும். விவரம் பகிருங்களேன்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்


-கே.கல்பனா, மதுரை-3

கணவரின் பணி நிமித்தம் வடஇந்தியாவில் சில வருடங்கள் வசித்தோம். அங்கே சில பகுதிகளில் திருமணத்தின்போது பெண்ணைக் கொடுக்கும் சடங்கில், மந்திரம் ஒன்று சொல்வார்கள். ராமர்-சீதா திருமணத்தின்போது சொல்லப்பட்ட மந்திரம் என்று பெரியவர் ஒருவர் கூறக் கேட்டிருக்கிறேன்.

கன்னிப்பெண்கள் அந்த மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், விரைவில் மனதுக்கினிய மணமகன் அமைவான் என்றும் கூறிய அந்த வடநாட்டுப் பெரியவர், அந்த மந்திரத்தை பொருள் விளக்கத்துடன் காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அது தொலைந்துவிட்டது. பல வருடங்கள் ஓடி விட்டன. எனக்கு அந்த மந்திர ஸ்லோகம் தேவை. எந்தப் புத்தகத்தில் இருக்கும். எவரிடமேனும் இருந்தால் தகவல் பகிர்ந்து உதவுங்களேன்.

- பி.சிவசங்கரி, திருநெல்வேலி-4

கிராம தெய்வங்கள் குறித்த தகவல்களைப் படிப்பதும், சேகரிப்பதும், குறிப்பிட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்து வருவ தும் வழக்கம். அந்த வகையில், காரைக்குடி அருகில் விளாறிமார்கொண்டு செய்யப்பட்ட குடிசையில் அருளும் அம்மன் கோயில் குறித்த தகவல் படித்தேன். ஆனால் விரிவான விவரங்கள் இல்லை. இந்தக் கோயில் பற்றி அறிந்தவர்கள், தகவல்கள் பகிர்ந்தால் பயனுள்ள தாக இருக்கும்.

-என்.கணேசன், சென்னை-5

திருவிசநல்லூரில் மகான் தரஐயாவாளின் மகிமையைச் சொல்லும் விதம், வருடம்தோறும் கார்த்திகை அமாவாசை அன்று கங்கை நீர் கிணற்றில் பெருகும் என்று படித்திருக்கிறேன். இதேபோல் காசிக்கு இணையான மகிமைகொண்ட தலங்கள் பல தமிழகத்தில் உண்டு. அவற்றில் ஓர் ஊரில் காசிக்கிணறு இருப்பதாக அறிந்தேன். அது எந்த ஊர். ஸ்தல புராணத்துடன் தகவல் பகிர்ந்தால் மகிழ்வேன்.

-எஸ்.பாண்டியன், சென்னை-67

`லக்ஷ்மி ஹ்ருதய ஸ்தோத்திரம்’ எனும் அபூர்வ ஸ்துதிப்பாடல் தமிழ் விளக்கத்துடன் தேவை. வெள்ளிக்கிழமைகளில் இரவில் இந்த ஸ்தோத்திரத்தை ஐந்து முறை பாடி வந்தால் அதீத செல்வபோகம் கிடைக்கும் என்பார்கள். எவரிடமேனும் இந்த ஸ்தோத்திரம் இருந்தால் நகல் எடுத்து அனுப்புங் களேன்.

-எல்.வேணுகோபாலன், கரூர்

வாயிலாரும் பூசலாரும்!

சக்திவிகடன் 17.5.22 தேதியிட்ட இதழில், `நாயன்மார்களில் வாயிலார் நாயனார் மற்றும் பூசலார் நாயனார் ஆகியோர் முக்திபெற்ற தலங்கள் எவை. அங்கு இவர்களுக்கென்று தனியே திருக்கோயில்கள் அல்லது சந்நிதிகள் உண்டா?’ என்று சிவகங்கை வாசகர் எம்.முருகானந்தம் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை கிழக்குத் தாம்பரம் வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் கீழ்க்காணும் விவரத்தை அளித்துள்ளார்.

வாயிலார் நாயனார் சென்னை மயிலாப்பூரில் முக்தி பெற்றார். மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது.

சென்னையிலிருந்து ஆவடி மார்க்கமாகப் பயணித்தால் சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது திருநின்றவூர். பூசலார் நாயனார் முக்தி பெற்ற தலம் இது. இங்குள்ள அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயிலில் பூசலார் நாயனாரை தரிசிக்கலாம்.

பூசலார் நாயனார் குறித்த கேள்விக்கு சென்னை வாசகர் வி.பரமன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்:

பூசலார் நாயனார் அருள்பாலிக்கும் திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில், இதயம் சம்பந்தமான நோய் தீர்க்கும் தலம் ஆகும். அம்பிகையின் திருப்பெயர் மரகதாம்பிகை. இங்கே கருவறையிலேயே பூசலார் நாயனார் அருள்பாலிப்பது சிறப்பம்சம்.

மச்ச அவதார நாயகன்!

சக்தி விகடன் 17.5.22 சக்தி விகடன் இதழில் ` தசாவதார கோலங் களில் மச்ச அவதார மூர்த்திக்குத் தனிக்கோயில் உண்டா, எங்குள்ளது?’ என்று கரூர் வாசகர் கே.பத்மநாபன் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை கிழக்குத் தாம்பரம் வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் கீழ்க்காணும் விவரத்தை அளித்துள்ளார்.

மச்சாவதாரத்துக்கான தனிக்கோயில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் நாகலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது. வேத நாராயண பெருமாள் ஆலயம் என்று திருப்பெயர். இந்தக் கோயிலில் பங்குனி மாதம் சுக்லபட்ச துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி ஆகிய நாள்களில் சூரியன் தன் கிரணங்களை மூலவர் பெருமாளின் திருமேனியில் படியச்செய்து பூஜிப்பது சிறப்பம்சமாகும்.

கூடலழகர் திருக்கோயில்
கூடலழகர் திருக்கோயில்


மச்ச அவதாரப் பெருமாள் கோயில் குறித்த கேள்விக்கு திருநெல்வேலி வாசகர் மாதவன் கூடுதல் தகவல் தருகிறார்:

மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ளது கூடலழகர் திருக்கோயில். முற்காலத்தில் வைகையின் கிளைநதியாக கிருதமால் நதி பாய்ந்தது. வைகையும் கிருதமால் நதியும் ஓர் ஆரம் போன்று பிரிந்து கூடலழகர் கோயிலைச் சுற்றி பாய்ந்தன. இவற்றில் கிருதமால் நதியில் சத்தியவிரதன் என்ற மன்னன் நீராடிக் கொண்டிருந்த போது பெருமாள் மச்சமாக அவதரித்து அவன் கைகளில் சேர்ந்தார் என்கின்றன புராணங்கள்.

சென்னையிலிருந்து மாமல்லபுரம் செல்லும் வழியில் திருவான்மீயூரிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் நயினார்குப்பம் என்ற இடம் வரும். இங்கே கடற்கரையில் மச்சப்பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இங்கே அருளும் மச்சவதார பெருமாளுக்கு குறிப்பிட்ட தினங்களில் மீனவர்களே அபிஷேக ஆராதனை செய்வதும், ஞாயிற்றுக்கிழமைகளில் சமுத்திர ஆரத்தி நிகழ்வதும் விசேஷ அம்சங்களாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism