Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

அறுபத்துமூன்று நாயன்மார்களில் கோட்செங்சோழன் கட்டிய மாடக் கோயில் மொத்தம் எத்தனை, அவை எங்குள்ளன? இதுபற்றிய விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிருங்களேன்.

-கி. பன்னீர்செல்வம் காட்டாங்கொளத்தூர்

உத்குடி ஆசனத்தில் தட்சிணாமூர்த்தி அருளும் ஆலயம், திருவடியில் முயலகன் இல்லாமல் அவர் அருளும் ஆலயங்கள் எங்குள்ளன. அதேபோல் அரம்பையர் வழிபட்ட சிவாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. தகவல் அறிந்த அன்பர்கள் விவரம் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

-ஆர்.முருகன், கடலூர்

திருவீழிமிழலை ஆலயத்தில், மூலவர் கருவறையில் லிங்கத் திருமேனியுடன் உருவத் திருமேனியாகவும் அம்பாளையும் ஸ்வாமியையும் தரிசிக்கலாம். இதேபோன்ற அமைப்பிலான தரிசனத்தை வேறு எந்த தலங்களில் தரிசிக்க இயலும்?

-பி.நாகராஜன், மேலூர்

`ஜகன்மாதாவான அம்பிகையும் ஈஸ்வரனும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் ஆலயங்களை தரிசிப்பதால், கல்யாண வரம் கைகூடும்; மாங்கல்ய பலம் பெருகும்’ என்று ஆன்மிகச் சொற்பொழிவில் கேட்டறிந்தேன்.

திருமணச் சடங்குகளை விவரிக்கும் விதமாக சிவனாரும் பார்வதியாளும் கன்னிகாதான திருமணக் கோலம், கைத்தலம் பற்றும் திருமணக்கோலம், வேள்வித் தீயை வலம்வரும் கோலம் முதலான கோலங்களில் காட்சி தரும் தனித் தனி ஆலயங்கள் உண்டு என்றும் அறிந்தேன். இதுபற்றிய தகவல் எந்த நூலில் உள்ளது? விவரம் தேவை.

- ரமேஷ் கிருஷ்ணன், சென்னை-65

எனக்கு பிள்ளையாரைப் போற்றித் துதிக்கும் அற்புதமான நூல் ஒன்று தேவை. மகா கணபதி மங்களமாலிகா ஸ்தோத்திரம் என்று பெயர். இதன் ஒவ்வொரு ஸ்லோகமும் கணேசாய மங்களம் என்று முடியும். இந்த தோத்திரப் பாடல் எந்த நூலில் உள்ளது, எங்கு கிடைக்கும். எவரிடமேனும் இருந்தால் நகல் எடுத்து அனுப்பிவையுங்களேன்.

- கே.அன்னபூர்ணி, சென்னை-44

`வில்வ அஷ்டகம்’ துதிப்பாடல் பொருள் விளக்கத்துடன் தேவை’ என்று 22.3.22 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் நாகப்பட்டினம் வாசகர் கே.கலைச்செல்வன் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தைவாசகர் எம்.ஏ.ராஜசேகரன் பகிர்ந்துள்ளார்.

எனக்கு வில்வ மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதம் கூறுகிறது. வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன.

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன. பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக்கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தஞ்சைக்கு அருகில் உள்ள திருவைகாவூரில் வில்வவனநாதர் என்ற திருப்பெயரிலேயே அருள்கிறார் ஈஸ்வரன்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜன்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். வில்வாஷ்டகத்தின் ஒரு ஸ்லோகம் இங்கே. (பில்வாஷ்டகம் முழுமையும் வாசகருக்கு அனுப்பிவைக்கப்படுகிறது).

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிணேத்ரஞ்ச த்ரியாயுஷம்

த்ரிஜன்மபாபஸம்ஹாரம் ஏகபில்வம் சிவார்ப்பணம்

கருத்து: மூன்று தளங்களுடன் கூடியதும் சத்வ, ரஜோ, தமோ குணங்களின் உருவாக இருப்பதும், பரமசிவனின் மூன்று கண்களாக இருப்பதும் பால்யம், யெளவனம், வார்தக்யம் இந்த மூன்றையும் அளிப்பதும், மூன்று ஜன்மங்களில் செய்யும் பாவத்தைப் போக்குவதுமான வில்வத்தை சிவபிரானுக்குச் சமர்ப்பிக்கிறேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism