Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்

Published:Updated:
உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்

சிவ வடிவங்களில் ஒருவர் பைரவ மூர்த்தி. இவர் யோக கோலத்தில் அருளும் தலம் ஒன்று உண்டு என்று அறிந்தேன். இந்த ஸ்வாமி திருக்கரத்தில் இடியை ஆயுதமாகக் கொண்டவராம். இந்த யோக பைரவர் அருளும் ஊர் எது? எப்படிச் செல்வது? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிர்ந்தால், நேரில் சென்று தரிசித்து வருவோம்.

- ஆர்.திருமலை, தேனி

சிவபெருமான்
சிவபெருமான்


சிவபெருமான் ஏழுவகை தாண்டவங்களை ஆடுவதாகப் புராணங்கள் சொல்கின்றன. ஆனந்த தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், சம்ஹார தாண்டவம் ஆகியவற்றை அறிவேன். மற்ற 4 தாண்டவ கோலங்கள் என்னென்ன. இந்தக் கோலத்தில் அருளும் நடராஜர் அருளும் ஆலயங்கள் எங்குள்ளன?

- சி.கெளசல்யா, தூத்துக்குடி

சாக்தம் போற்றும் சக்தி தேவியரில் ஒருவள் அன்னை லுதும்பரா தேவி. மாத்ருகா நிகண்டு எனும் நூலில் இந்த அம்பாளைப் பற்றிய விவரங்கள் உள்ளதாகவும் இந்த அன்னைக்கு இமாலயப் பகுதியில் கோயில் உண்டு என்றும் பெரியவர் ஒருவர் மூலம் அறிந்தேன். `மாத்ருகா நிகண்டு’ எனும் அந்த நூல் தமிழ் விளக்கத்துடன் எங்கு கிடைக் கும். இந்த அன்னையின் ஆலயம் இருக்கும் இடம் குறித்த தகவலும் தேவை.

- எம்.முருகன், திருச்சி-4

புண்ணியம் அருளும் ஹோமங்கள் பல உண்டு. எனக்கு சரஸ்வதி ஹோமம் மகிமைகள், அந்த ஹோமத்தைச் செய்வ தற்கான நியதிகள், வழிபாட்டு முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் வேண்டும். இதுபற்றிய விவரங்கள் வேறு ஏதேனும் நூலில் உள்ளதா? விவரம் அறிந்த நண்பர்கள் வழிகாட்டி உதவுங்களேன்.

- வீ.சரவணன், செங்கல்பட்டு

மகாவிஷ்ணுவைத் தாங்கும் பாக்கியம் பெற்ற ஆதிசேஷன் சிவபிரானின் தாண்ட வத்தைக் காண ஆவல் கொண்டார். அதன் விளைவாக பூவுலகில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார் எனும் திருக்கதையை நாமறிவோம்.

அதேபோல், சிவனாரின் வாகனமான நந்திதேவர் மகாவிஷ்ணுவை தரிசிக்க ஆவல் கொண்டார். ஜம்பகாரண்யம் எனும் இடத்தில் அவருக்குப் பெருமாளின் தரிசனம் கிடைத்தது எனும் தகவலைப் படித்தேன். இங்ஙனம் நந்திதேவருக்குப் பெருமாள் காட்சிகொடுத்த ஊர் எது? அது பாடல்பெற்ற தலமா? விவரம் பகிருங்களேன்!

- கே.உஷா, சேலம்

சிவனும் அம்பிகையும்!

`திருவீழிமிழலை தலம் போல, கருவறையில் லிங்கத்துடன் சிவனும் அம்பிகையும் உருவ வடிவில் இருக்கும் தலங்கள் என்னென்ன?’ என்று 19.4.22 தேதியிட்ட சக்தி விகடன் இதழில், மேலூர் வாசகர் நாகராஜன் கேட்டிருந்தார். அவருக்கு, கூடலூர் வாசகர் மு.ஆதவன் கீழ்க்காணும் விவரத்தைப் பகிர்ந்துள்ளார்,

மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கிறது ‘இம்மையிலும் நன்மை தருவார்’ கோயில். மீனாட்சியைத் திருமணம் செய்து மதுரையின் மருமகனாகி, முடி சூட்டிக்கொண்ட சிவபெருமான் ‘தன்னைத் தானே பூஜித்துக் கொண்ட சிவத்தலம் இது. எனவே, கருவறையில் லிங்கமும் அதன் பின்புறம் லிங்க பூஜை செய்யும் சிவன், அம்பாள் திருமேனி வடிவமும் உள்ளன.

இதேபோன்ற அமைப்பை தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள முனியாண்டி ஈஸ்வரர் கோயிலிலும் தரிசிக்கலாம்.

வேதாரண்யம் சிவாலயத்தின் கருவறையில் திருமணக்கோலத்தில் திருமறைக்காடர் அருள்கிறார்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று என்றாலும் அது சிவத்தலம்தான். இங்குள்ள மூலவர் சத்திய கிரீஸ்வரர், ‘பரங்குன்ற நாதர்’ என்று அழைக்கப்படுகிறார். இங்கு சந்நிதியில் சிவலிங்கத்திற்குப் பின்புறம் சத்தியகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism