Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

உதவலாம் வாருங்கள்!

Published:Updated:
உதவலாம் வாருங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
உதவலாம் வாருங்கள்!

திரிசூல விரத நியதிகள் குறித்த விளக்கங்களுடன் தனிப் புத்தகம் ஏதேனும் உண்டா? அதேபோல் ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு செய்வதன் தாத்பரியம் என்ன. இதுபற்றிய புராணக் கதைகள் ஏதேனும் உண்டா?

- சி.கீர்த்தனா, வள்ளியூர்

கோயில்களின் நகரமாம் காஞ்சியில், சிவனார் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோயில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று மாவடி தரிசனம். இதேபோல் மகிழமர தரிசனம் ஒரு சிவாலயத்தில் உண்டு என்கிறார் என் பாட்டி. ஆனால் எந்தத் தலம் என்பதை மறந்துபோனார். அது எந்தத் தலம், அங்கே மகிழமர தரிசனத்துக்கான சிறப்பென்ன என்று விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.

- வ.வேம்புலிநாதன், கடலூர்

சென்னைக்கு அருகில் திருநீர்மலையில்... நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்று ஞான நூல்கள் சிறப்பிக்கும் வகையில் நான்கு திருக்கோலங்களில் பெருமாளை தரிசிக்கலாம். அதேபோல் ஒரே ஆலயத்தில் ஒன்பது பெருமாள்கள் அருளும் திருத்தலம் ஒன்று உண்டாமே, அது எங்குள்ளது?

-பி.பத்மப்ரியா, சென்னை-5

கோனார்க் சூரியனார் ஆலயம், சென்னைக்கு அருகில் ஞாயிறு திருத்தலம், கும்பகோணம் அருகிலுள்ள சூரியனார் கோயில்... இதுபோன்று கேரளத்திலும் சூரியனுக்கு ஒரு கோயில் உண்டு. கோட்டயம் அருகிலுள்ள ஆதித்யபுரத்தில் அமைந்திருக்கிறது அந்த ஆலயம். அதுகுறித்த தலபுராண விவரம் தேவை. எவரிடமேனும் இருந்தால் பகிருங்களேன். நகல் எடுத்து அனுப்பினா லும் பயனுள்ளதாக இருக்கும்.

- ஜே.விஸ்வநாதன், திருச்சி

செல்வச் சேர்க்கை, அதிகாரப் பதவிகள், இல்லற நன்மைகள் ஆகியவற்றைத் தருவதும் தோஷங்களைப் போக்கக் கூடியதுமான அற்புத மான ஸ்தோத்திரம் - சுக்ர கவசம். பரத்வாஜ முனிவர் உபதேசித்து அருளிய இந்த சுக்ர கவசம் தமிழ் விளக்கத்துடன் தொகுப்பாகத் தேவைப்படுகிறது. இது எங்கு கிடைக்கும்; விவரம் அறிந்தவர்கள் தகவல் பகிருங்களேன்.

- கே.மகேஷ், சென்னை-44

உதவிக் கரம் நீட்டியோர்...

சிவ வாத்தியங்கள்
சிவ வாத்தியங்கள்

`சிவ வாத்தியங்கள்’

`திருக்கயிலாய சிவவாத்தியக் கருவிகள் என்னென்ன, அவை குறித்த விவரங்கள் தேவை’ என்று 6.9.22 தேதியிட்ட சக்தி விகடன் இதழில் தேனி வாசகர் கே.வீரகுமார் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களை செங்கல்பட்டு வாசகர் சிவா பகிர்ந்துள்ளார்:

சிவபெருமானுக்குரிய வழிபாட்டில் இடம்பெறும் வாத்தியங்களில் ஐந்து வகை வாத்தியங்கள் சிறப்புப் பெறுகின்றன.

தோல் கருவிகள்: டமருகம், மேளம், உடுக்கு, நகார், சுத்தமத்தளம்.

துளைக் கருவிகள்: நாகஸ்வரம், முகவீணை

நரம்புக் கருவிகள்: யாழ், வீணை, துந்தணா

உலோகக் கருவிகள்: மணி, சேகண்டி, பிரம்மதாளம், தாளம்

இயற்கைக் கருவிகள்: சங்கு, மிடற்றுக் கருவி.

குரல் இசையையும் இயற்கைக் கருவி என்பர். இதையே மிடற்றுக் கருவி எனப் போற்றுகின்றன ஞானநூல்கள்.

வாத்தியங்களில் அபூர்வமானது பஞ்சமுக வாத்தியம். குடமுழா எனச் சிறப்பிப்பார்கள். இது ஐந்து முகங்களைக் கொண்ட ஒருவகை தோல் இசைக் கருவியாகும். இதன் அடிப்பாகம் தகுந்த சீரிசை உருவாக்கும் வண்ணம் தாமிரம் மற்றும் வெண்கலம் கலந்த கலவை யால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முகமும் வெவ்வேறு ஒலியெழுப்புவது இதன் தனிச் சிறப்பாகும்.

கோயில்களில் சிவபெருமானின் நிருத்த சிற்பங்களுக்கு கீழ் அமர்ந் திருக்கும் பூத கணங்களில் ஒன்று குடமுழா வாசித்துக் கொண்டிருக்கும். ஐந்திணைகளில் மருத நிலத்துக்குரிய கருப்பொருளாக குடமுழா உள்ளது. பஞ்சமுக வாத்திய கருவி பற்றிய குறிப்புகள் சங்ககாலம் தொட்டே இலக்கியங்களில் காணப்படுகின்றன. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் மாதவியின் நடனத்தின்போது யாழ், குடமுழா, மத்தளம் ஆகியவை இசைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புமிக்க பஞ்சமுக வாத்தியக் கருவி, திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் கோயிலில் காணப்படுகிறது.

மேலும் சில விவரங்கள்...

கொக்கறை, எக்காளம், தவண்டை, கொடுகொட்டி, நகரா போன்றவை ஒருகாலத்தில் சிவாலயங்களில் சிவ நாதமாக ஒலித்துக் கொண்டிருந்தவை. யாழ், உயிர்த்தூம்பு, குறும்பரந்தூம்பு போன்றனவும் அற்புதமான இசைக் கருவிகளாகும்.

இதுபோன்று 70-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் உண்டு என்பார்கள். காரைக்கால் அம்மையார் 11-ம் திருமுறையில் இசைக் கருவிகள் பற்றிப் பாடியுள்ளார்.

துத்தம் கைக்கிள்ளை விளரி தாரம்,

உழை இளி ஓசைபண் கெழுமப் பாடிச்

சச்சரி கொக்கரை தக்கை யோடு

தகுணிதம் துந்துபி தாளம் வீணை

மத்தளம் கரடிகை வன்கை மென்தோல்

தமருகம் குடமுழா மொந்தை வாசித்

தத்தனை விரவினோ டாடும் எங்கள்

அப்ப னிடம்திரு ஆலங் காடே

என்று விவரிக்கிறார் காரைக்கால் அம்மையார். அபூர்வமான இந்தக் கருவிகளில் சிலவை மட்டுமே தற்போது சிவவாத்தியங்களாக இசைக்கப்படுகின்றன.