Published:Updated:

உதவலாம் வாருங்கள்

வீரபத்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபத்திரர்

வீரபத்திரர்

உதவலாம் வாருங்கள்

வீரபத்திரர்

Published:Updated:
வீரபத்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீரபத்திரர்

யானை தந்த அலங்காரத்துடன் விநாயகர் காட்சி தரும் கோயில் கும்பகோணத்தில் இருப்பதாக அறிந்தேன். அது எந்தக் கோயில், எப்படிச் செல்வது? விவரம் பகிர்ந்தால் நேரில் சென்று தரிசிக்க வசதியாக இருக்கும்.

-கே.அருண்குமார், மதுரை-2

`வில்வ அஷ்டகம்’ பொருள் விளக்கத்துடன் (தமிழில்) கூடிய புத்தகம் எங்கு கிடைக்கும். அதேபோல், அகிலத் திரட்டு எனும் நூல் - விவரங்களுடன் கூடிய தொகுப்பு தேவை.

-கே.கலைச்செல்வன், நாகப்பட்டினம்

சித்திரக் கவிகளில் ஒன்று குக்குட பந்தனம் என்பார்கள். சமீபத்தில் ரதபந்தனம் - சித்திரக்கவியை கோயில் ஒன்றில் தரிசித்து வந்தேன். அதேபோல் குக்குட பந்தனம் சித்திரக்கவியாக ஏதெனும் திருக்கோயில்களில் உள்ளதா? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிருங்களேன்.

- பி.வேலம்மாள், கோபிச்செட்டிப்பாளையம்

ஓங்குறு நாதாந்தம் எனப் பெயரிய அக்கரையின்

உமிழ்வித்துச் சிவம் எனும் ஓர் தந்தையடும் கூட்டாய்

கோங்கமுகை கவற்றுமிளமு லைப்பரவை மகிழக்

குண்டையூர் நெல் மலை முற்கொண்ட அருட்கடலே

- இந்தப் பாடல் வரிகள் எந்த நூலில் உள்ளன? இதில் குண்டையூர் எனக் குறிப்பிடப்படும் தலம் எது இப்பாடல் உள்ள புத்தகம் கிடைக்கும் முகவரி கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- கீ.ஜெயராமன், சென்னை-5

காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் தனிச் சந்நிதியில் சியாமளா தேவியை தரிசிக்கலாம் என அறிந்தேன். இதேபோல், நம் தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்தில் சியாமளாதேவி சந்நிதி உள்ளது. நாங்கள் விருதுநகரில் வசிக்கிறோம். எங்கள் மாவட்டத்தில் சியாமளாதேவி சந்நிதியுள்ள கோயில் இருக்கிறதா?

- சி.கல்யாணி, விருதுநகர்

`சிவசக்தி எங்கே எங்கே... சிந்தனை செய் மனமே இங்கே சிந்தனை செய் மனமே...’ எனும் வரிகளைக் கொண்ட பாடல் ஒன்று உண்டு. இந்த வரிகள் எந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளன. முழுப் பாடலும் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

-ஆர்.சண்முக சுந்தரம், கோவை-11

வீரபத்திரர்
வீரபத்திரர்

`வீரபத்திரர் எங்கள் குலதெய்வம். சிவ அம்சமான வீரபத்ரசாமி சுயம்புமூர்த்தியாக அருளும் கோயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளதாக அறிகிறேன். அந்தக் கோயில் எது, செங்கல்பட்டு மாவட்டத்தில் எங்கு உள்ளது?’’ என்று சென்னை வாசகர் எம்.மகேஷ் சங்கரன் கேட்டிருந்தார்.

அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை சென்னை வாசகர் எம்.ஏ.ராஜசேகரன் பகிர்ந்துள்ளார்.

`செங்கல்பட்டு மாவட்டத்தில் அனுமந்தபுரம் எனும் ஊரில் வீரபத்திரர் ஆலயம் அமைந்துள்ளது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சிங்கபெருமாள் கோயிலிலிருந்து தென்கிழக்கில் சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்தக் கோயில் காலை 7 முதல் மாதியம் 1 மணி வரையும்; மாலை 4 முதல் இரவு 8:30 மணி வரைக்கும் திறந்திருக்கும். சிங்கபெருமாள் கோயிலிலிருந்து பேருந்து வசதி உண்டு.'

அனுமந்தபுரம் கோயில் குறித்த இதே விவரத்துடன் மேலும் சில வீரபத்திரர் ஆலயங்கள் குறித்த கீழ்க்காணும் விவரத்தை மதுரை வாசகர் பி.சண்முகம் பகிர்ந்துள்ளார்.

அஷ்ட வீரட்டத் தலங்களில், தட்சனை சம்ஹரித்த வீரபத்திரர் எழுந்தருளியுள்ள திருத்தலம் திருப்பறியலூர். திருக்கடவூர் மற்றும் செம்பொனார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள திருத்தலம் இது. இந்த ஊருக்கு தட்சபுரம் என்றும் பெயர் உண்டு. இங்கு, கருவறையில் வீரட்டேஸ்வரர் காட்சியளிக்கிறார். மகா மண்டபத்தில் வீரபத்திரர் சந்நிதி உள்ளது.

மதுரை மற்றும் தென்காசிக் கோயில்களிலும் குடந்தை கும்பேசர் கோயில், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களிலும் தூண் சிற்பமாக உள்ள வீரபத்திரர் வடிவங்கள் அற்புதமானவை.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள அக்னி வீரபத்திரர் மற்றும் அகோர வீரபத்திரர் வடிவங்கள் வெகு அழகு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள வீரபத்திரர் வடிவங்களில் கையில் வீணை ஏந்தி இருப்பதைக் காணலாம்.

சென்னை- மயிலாப்பூர், திருவண்ணாமலை, பெரும்பேறுகண்டிகை, செம்பிய மங்கலம், கும்பகோணம்- பெரிய மடம் (மகாமகக் குளம் அருகில்), கும்பகோணத்துக்கு அருகே தாராசுரம் ஆகிய தலங்களில் உள்ள வீரபத்திரர் ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவை.