Published:Updated:

உதவலாம் வாருங்கள்

உதவலாம் வாருங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
உதவலாம் வாருங்கள்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

எங்கள் சொந்த ஊர் திருவெண்காடு. இந்தக் கோயிலின் அகோர மூர்த்தி குறித்த தகவல்களை சக்திவிகடனில் படித்து மகிழ்ந்தேன். எங்களின் குலதெய்வம் திருவெண்காட்டுக்கு அருகிலுள்ள `எம்பாவி’ என்ற ஊரில் உள்ள ஓர் அம்பாள் (மாரியம்மன்) என்று என் அம்மா கூறக் கேட்டிருக்கிறேன். அந்த ஊர் எங்கிருக்கிறது.

திருவெண்காட்டிலிருந்து சென்று வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் உண்டா. அந்தக் கோயில் குறித்த விவரங்கள், அர்ச்சகர் போன் எண் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். இந்த ஊர் மற்றும் அம்மன் கோயில் குறித்த தகவல் அறிந்தவர்கள் பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- வி.மீனாக்ஷி, அகமதாபாத்

ல்லால இலையின் மகிமைகள் என்று வீடியோ தகவல் ஒன்றைப் பார்த்தோம். ஆல விருட்சத்தையே சிறப்பின் பொருட்டு கல்லாலம் என்று அழைக்கிறார்களா அல்லது கல்லாலம் என்றே தனி விருட்சம் உள்ளதா. இது எந்தக் கோயிலின் தல விருட்சமாகத் திகழ்கிறது? கல்லாலம் குறித்த விவரத் தொகுப்புகள் எவரிடமேனும் இருந்தால் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

- கோ.லட்சுமணப் பெருமாள், செட்டிக்குளம்

வீட்டில் சிவலிங்கம் வைத்து பூஜை செய்ய விரும்புகிறேன். அதற்கென தனிப்பட்ட நியதிகளை அறிய ஆசை. சிவலிங்க பூஜை செய்வதற்கு வழிகாட்டும் பிரத்யேக நூல்கள் ஏதேனும் உண்டா. இருந்தால், கிடைக்கும் இடம் குறித்து பகிருங்களேன்.

- வி.மணிகண்டன், சென்னை-46

ரலட்சுமி விரதத்தின்போது பாடும் பாடல்களில் சில ஆடியோவாகக் கிடைக்கின்றன. என் சிறுவயதில் தாய் மற்றும் பாட்டி பாடிய பாடல்களைக் கேட்டிருக்கிறேன். அவற்றின் வரிகள் நினைவில் இல்லை.

அதில் ஒரு பாடல், வீட்டில் இருக்கும் அனைவரின் பெயரையும் ஒவ்வொரு சரணத்திலும் சொல்லிப் பாடுவதாக இருக்கும். மற்றொன்று ஒவ்வொரு வேளையிலும் அன்னை என்ன நிற உடை அணிந்து வீட்டுக்கு வருவாள் என்னும் பொருளில் பாடப்படுவது. இது குறித்துத் தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் எழுதி அனுப்புங்களேன்.

- எஸ்.லலிதா, சென்னை-61

தி சங்கரர் எழுதிய சுப்ரமண்ய புஜங்கத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். விளக்கவுரையும் சேர்ந்தது. இந்த மொழிபெயர்ப்பு நூல் யாரிடமேனும் இருக்கிறதா? அல்லது எங்கு கிடைக்கும் என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

- கே.நிவாசன், பெங்களூரு

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்மிழகத்தில் உள்ள சித்தர்களின் ஜீவசமாதிகள், அவை அமைந் திருக்கும் இடங்கள், அவற்றின் மகிமைகள் குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன். நல்ல நூல்களைப் பரிந்துரை செய்யுங்களேன்.

- திரவியம், புன்னக்காயல்

உதவிக்கரம் நீட்டியவர்கள்

க்தி விகடன் 12.1.21 இதழில் சென்னை வாசகர் சாரதி, விநாயகி குறித்த தகவல்களைக் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களைக் காஞ்சிபுரம் வாசகி எஸ்.சத்யபாமா பகிர்ந்துள்ளார்.

மத்தியபிரதேசத்திலுள்ள ஜபல்பூரை அடுத்துள்ள `பேடாகாட்’ என்ற இடத்தில் விக்னேஸ்வரியை தரிசிக்கலாம். இந்தச் சிலை தொல்பொருள் ஆராய்ச்சிப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் மீனாட்சியம்மன் கோயிலிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும் புலிக்கால் விக்னேஸ்வரியை தரிசிக்கலாம்.

சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில் மற்றும் நாகர்கோவில் வடிவீஸ்வரர் ஆலயத்தில் வீணை தாங்கிய விநாயகியை தரிசிக்க இயலும்.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் கோவில் தேரில், போர்க் களத்தில் அருளும் கணேசினி அருள்வதாக தகவல் உண்டு. இவரை தரிசித்தால், சத்ருபயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இவை தவிர விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சிவாலயத்தில் தூண் சிற்பமாக விநாயகி அருள்கிறாள்.

உதவலாம் வாருங்கள்
உதவலாம் வாருங்கள்


`தமிழகத்தில் தன்வந்த்ரி பகவானுக்குத் தனிக்கோயில் உண்டா? அதுபற்றிய விவரம் தேவை’ என சக்திவிகடன் 15.12.2020 தேதியிட்ட இதழில், கோவில்பட்டி வாசகர் கோ.சுதர்சன் பெருமாள் கேட்டிருந் தார். அவருக்குக் கீழ்க்காணும் தகவல்களை கூந்தலூர் வி.சந்திரசேகரன் பகிர்ந்துள்ளார்.

பண்ருட்டியில் தன்வந்த்ரி பகவானுக்குத் தனிக்கோயில் உண்டு. பேருந்து நிலையம் அருகிலேயே உள்ளது. இங்கு அர்த்தஜாமப் பூஜையின்போது விசேஷமாக அளிக்கப்படும் வெற்றிலை பிரசாதம் குழந்தை பாக்கியம் அருளவல்லது.

வாலஜாபேட்டையில் தன்வந்த்ரி பீடம் உள்ளது. அதேபோல், கோவையில் தன்வந்த்ரி பகவானுக்கென ஆலயம் உண்டு.

ரங்கம் கோயிலில் தனிச் சந்நிதியில் தன்வந்த்ரி பகவான் அருள்பாலிக்கிறார். வைத்தீஸ்வரன்கோவில் முத்துக்குமார ஸ்வாமிக்கு எதிரில் சிறியளவிலான தன்வந்த்ரி சிலாரூபம் உள்ளது.

திருந்துதேவன்குடி அல்லது நண்டாங்கோவில் என அழைக்கப்படும் ஊரில் கற்கடேஸ்வரர் ஆலயத்தில் தன்வந்த்ரி பகவான் அருள்பாலிக்கிறார்.

அன்பார்ந்த வாசகர்களே...

ங்களில் பலருடைய விருப்பத்துக்கிணங்க, மீண்டும் வெளியாகிறது, `உதவலாம் வாருங்கள்' பகுதி. இது உங்களுக்கு மிகப் பரிச்சயமான - பிடித்தமான பகுதி என்பதை அறிவோம். எனினும், புதிய வாசகர்களுக்காக சில விளக்கங்கள்...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.