Published:Updated:

உதவலாம் வாருங்கள்!

தசாவதார தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தசாவதார தரிசனம்

வாசகர்களின் ஆன்மிகத் தகவல் பகிர்வுகள்

உதவலாம் வாருங்கள்!

வாசகர்களின் ஆன்மிகத் தகவல் பகிர்வுகள்

Published:Updated:
தசாவதார தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தசாவதார தரிசனம்

ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த ஆன்மிகத் தகவல்கள் மற்றும் வாசகர்களின் சந்தேகங்களுக்கு வாசகர்களே தகவல் பகிரும் பகுதி இது. ஆன்மிகம் தொடர்பான உங்களின் சந்தேகங்கள், தேவைப்படும் தகவல்களை நீங்கள் கேள்வியாகக் கேட்கலாம். அத்துடன் இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு, துல்லிய விவரங்களை - பதில்களை நீங்கள் அறிந்திருந்தால் அவற்றையும் பகிரலாம்.

உதவலாம் வாருங்கள்!

ஶ்ரீபாலா திரிபுரசுந்தரி வழிபாடு குறித்த பூஜா நியதிகள் புத்தகம் எங்கு கிடைக்கும். பாலாம்பிகையின் அவதாரக் கதை பற்றிய விவரமும் தேவை. சரிதம், துதிகள் அடங்கிய தொகுப்பு நூல் எங்கு கிடைக்கும். விவரம் அறிந்தவர்கள் பகிருங்களேன்.

- கே.ரமணி, சாத்தூர்

விபூதியை வீட்டிலேயே தயார் செய்யலாமா? அதுபற்றி வழிகாட்டும் ஆகம நூல்கள் ஏதேனும் உண்டா. சில இடங்களில் அடியார்களே விபூதி தயாரித்து வழங்குவதாக அறிந்தேன். அதுபற்றிய விவரம் தெரிந்தவர்கள் விவரம் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- திருமலை, முசிறி

ரவில் ஒளிரும் ஒருவகையான ஜோதிர் விருட்சங்கள் உண்டு. இவை வெள்ளியங்கிரி, சிவன் மலை போன்ற இடங்களில் உண்டு என்கிறார்களே, உண்மையா? தெய்வ விருட்சங்களில், முள்ளிச்செடிக்கும் மோட்சம் கிடைத்தாக ஒருவரித் தகவல் ஒன்று படித்தேன். அதுபற்றிய விரிவான கதையும் தேவை. அன்பர்கள் எவருக்கேனும் தெரிந்திருந்தால் பகிருங்களேன்.

- அ.லக்ஷ்மி, சென்னை-77

திருமந்திரத்தில் நவ தீர்த்தங்களைப் போற்றும் பாடல் ஒன்று உண்டு என்று அறிகிறேன். அது எந்தப் பாடல். திருமந்திரம் போற்றும் நவதீர்த்தங்கள் யாவை எனப்போன்ற விவரங்கள் தேவை.

- கோவிந்தராஜன், தூத்துக்குடி

றைவனுக்கான பணிவிடைகளில் குறிப்பிடத்தக்கது தீபாராதனை. கோயில்கள் மற்றும் இல்லங்களில் தீபத்தால் ஆராதிப்பது குறித்த வழி காட்டல்கள், ஆகம நெறிமுறைகள், தீப தத்துவங்கள் குறித்து விளக்கங்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதுபற்றி விரிவான தகவல்கள் இருப்பின் பகிரலாமே... எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- பா.உலகம்மாள், திருநெல்வேலி-3

த்தரட்டாதி நட்சத்திரத்துக்கான சித்தர் வழிபாடு பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறேன். அந்த நட்சத்திரத்துக்கான சித்தர்களின் ஜீவசமாதி குறித்தும் தகவல் சொல்லவும்.

- பரணிகுமார், சிதம்பரம்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`தசாவதார தரிசனம்!’

க்தி விகடன் 24.8.21 தேதியிட்ட இதழில், `சென்னையிலேயே சதாபி ஷேகம் செய்ய ஏதேனும் சிறப்பு திருத்தலம் உள்ளதா?’ என்று சென்னை வாசகர் எம்.எஸ்.சுந்தரம் கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரத்தை சென்னை வாசகர் `சிம்மவாஹினி’ டி.ஜி.நாராயணராவ் அளித்துள்ளார்.

சென்னை, கொளத்தூரில் வட திருக்கடவூர் எனச் சிறப்பிக்கப்படும் அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. ஜி.கே.எம் காலனிக்குச் செல்லும் வழியில் - பெரம்பூர் லோகோ ரயிலடி அருகில் இந்தக்கோயில் அமைந்துள்ளது. இங்கே உக்கிர சாந்தி, சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் ஆகம விதிப்படி நடத்தப்படுகின்றன. முன்பதிவு அவசியம். இந்தக் கோயில் காலை 7:30 முதல் 10: 30 மணி வரை; மாலை 5:30 முதல் 8:30 மணி வரை நடை திறந்திருக்கும்.

`மகா விஷ்ணுவின் தசாவதாரங்களும் தூண் சிற்பங்களாக ஓர் ஆலயத்தில் இருப்பதாக அறிகிறேன். அது எந்தக் கோயில்’ என்று சக்தி விகடன் 7. 9.21 தேதியிட்ட இதழில் கள்ளிடைக்குறிச்சி வாசகர் சோ.ராமு கேட்டிருந்தார். அவருக்குக் கீழ்க்காணும் விவரங்களைப் பகிர்ந்துள்ளார் சென்னை கிழக்குத் தாம்பரம் வாசகர் வி.கிருஷ்ணமூர்த்தி.

மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களும் ஒரே கல்லில் அமைந்துள்ள இடம் அகரம் கிராமம். தனிச் சந்நிதியாகவும் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ள ஊர் வல்லநாடு. இங்கிருந்து ஆட்டோ மூலம் அகரம் கிராமத்துக்குச் செல்லலாம். தாமிரபரணிக் கரையில் உள்ளது இந்தக் கோயில். சனிக்கிழமை விசேஷம்.

முத்துசுவாமி தீட்சிதர் அருளிய நவகிரக கீர்த்தனைகள் தேவை என்று சக்தி விகடன் 7. 9.21 தேதியிட்ட இதழில், வள்ளியூர் வாசகி கி.ராஜலட்சுமி கேட்டிருந்தார். குறிப்பிட்ட கீர்த்தனைகள் அடங்கிய நூல் (நகல்) சென்னை ராயப்பேட்டை வாசகி எல்.ஜெயந்தி அனுப்பியுள்ளார். அது, சம்பந்தப்பட்ட வாசகிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.