Published:Updated:

வைகை விழா!

வைகை
பிரீமியம் ஸ்டோரி
வைகை

சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலவும் இந்த நதிக்கரையில் நிகழ்ந்தவையே

வைகை விழா!

சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலவும் இந்த நதிக்கரையில் நிகழ்ந்தவையே

Published:Updated:
வைகை
பிரீமியம் ஸ்டோரி
வைகை

ருகாலத்தில் நதி தீரங்களில் தீர்த்தமாடல் புனித காரியமாகக் கருதப்பட்டு நடைபெற்று வந்தது. ஆனால் சமீப காலமாக நதிகள் குறித்த அலட்சியம் அதிகரித்துள்ளது. இதனால் புண்ணிய நதிகள் எல்லாம் வறண்டு போகும் நிலைக்குப் போய்விட்டன. இந்த நிலையை மாற்ற ஆன்மிகப் பெரியோர்கள் இணைந்து பெரும் முயற்சி எடுத்துவருகிறார்கள்.

144 வருடத்திற்குப் பிறகு கடந்த ஆண்டு தாமிரபரணி புஷ்கரம் நடத்தப்பட்டது. புஷ்கரம் என்றால் தீர்த்தமாடுதல் என்று பொருள். சுமார் ஒருகோடி பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தமாடி பாக்கியம் பெற்றனர். அதேபோன்று, தற்போது வைகைப் பெருவிழா கொண்டாடத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாக நிகழ்த்திவருகிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி’ என்றும் ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை’ என்றும் தமிழ் இலக்கியங்களில் போற்றப்படும் பெருமை வாய்ந்தது வைகை.

சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பலவும் இந்த நதிக்கரையில் நிகழ்ந்தவையே. ஏன், இந்த நதியே ஈசனின் கையிலிருந்து பிறந்தது என்கின்றன புராணங்கள். ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின்போது, ‘கள்ளழகர்’ ஆற்றில் இறங்குவதும் இந்த வைகை நதியில்தான்.

வைகை விழா!

இத்தகைய சிறப்புகள் இருந்தபோதும், அதைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். மணல் கொள்ளையால் ஆறு தன் அழகை இழந்துவிட்டது. ஆறு வறண்டதால் அதை நம்பியிருந்த விவசாயமும் குறைந்துவிட்டது. அதை மீண்டும் மீட்டெடுக்க அதன் புகழைப் பாடவேண்டியது அவசியம். அப்படி ஒரு முயற்சியாகவே , ‘வைகைப் பெருவிழா’ வைப் புரிந்துகொள்ளவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூலை 24 -ம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் வைகைப் பெருவிழாவை அகில பாரதிய சந்நியாசிகள் சங்கமும் மதுரை மக்களும் இணைந்து நடத்திவருகிறார்கள். ஆகஸ்ட் 4 -ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில், ஆன்மிகம் சார்ந்த பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, 108 கோ-பூஜை, தினசரி மாலைவேளைகளில் வைகையில் ஆரத்தி வழிபாடு, ஒருலட்சம்பேர் பங்குபெறவுள்ள ஆடிப்பெருக்கு நீராடல் ஆகியன நடைபெறவுள்ளன.

ஆடிப் பெருக்கு நாளில் நதிக்கரைக்குச் சென்று நதியை வழிபட்டு நீராடுவது மரபு. வைகைப் பெருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3 -ம் தேதி ஆடிப்பெருக்கு நீராடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு புண்ணிய பலன்களை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு, ஆன்மிக விழிப்புணர்வையும், நதி நீர்ப்பாதுகாப்பு தொடர்பான சமூக விழிப்புணர்வையும் ஒருங்கிணைத்து நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வது நம் அனைவரின் கடமையுமாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism