Published:Updated:

வையகத்தில் வளமான வாழ்க்கைப் பெற வைகாசி விசாக மஹாஸ்கந்த ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

மஹாஸ்கந்த ஹோமம்

வைகாசி விசாக நாள், அர்ஜுனன் ஈசனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள் என்றும் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ளது பிரம்மரந்தீஸ்வரர் கோயில்.

வையகத்தில் வளமான வாழ்க்கைப் பெற வைகாசி விசாக மஹாஸ்கந்த ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வைகாசி விசாக நாள், அர்ஜுனன் ஈசனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள் என்றும் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ளது பிரம்மரந்தீஸ்வரர் கோயில்.

Published:Updated:
மஹாஸ்கந்த ஹோமம்

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடத்த உள்ளோம்.

பிரம்மரந்தீஸ்வரர்
பிரம்மரந்தீஸ்வரர்

சரண் அடைந்தோருக்கு எல்லாம் நன்மைகள் அருளும் சண்முகப்பெருமான் வைகாசி விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு விசாகன் என்றும் பெயர் உண்டு. 'வி' என்றால் மயில், 'சாகன்' என்றால் பயணம், அதாவது மயில் மீது பயணம் செய்யக் கூடியவர் என்றும் பொருள் உண்டு. முருகப்பெருமான் அவதரித்த வைகாசி மாத பௌர்ணமியுடன் கூடி வரக்கூடிய விசாக நட்சத்திரம் தனித்த பெருமை கொண்டது. இந்த அற்புதமான வைகாசி விசாக நாளில் ஆறுமுகன் அவதரித்த அற்புத நாளில் அவரை வழிபட எண்ணியது யாவும் கைகூடும். ஏற்றங்கள் யாவும் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் முருகனின் அருளும், ஆசியும் கிடைக்கும். கந்தனின் கருணை இருந்தால் வேறெந்த வேதனையும் வந்திடுமா என்ன!

வைகாசி விசாக நாள், அர்ஜுனன் ஈசனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள் என்றும் கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம், வடபாதி மங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த உச்சுவாடி கிராமத்தில் உள்ளது பிரம்மரந்தீஸ்வரர் கோயில். இங்கு அர்ஜுனனும் சகாதேவனும் வழிபட்ட ஈசன், பிரம்மரந்தீஸ்வரர் என்ற பெயரில் தலையில் வடுவோடு காட்சி தருகிறார். இங்குதான் அர்ஜுனன் பாசுபத ஆயுதம் பெற்றான் என்கிறது தலவரலாறு. வெண்ணாற்றங்கரையில் உள்ள இந்த திருத்தலம் யோக மார்க்கத்தில் அற்புதமான ஊராகவும் போற்றப்படுகிறது. யோகக்கலையில் பிரம்மரந்திரம் என்றால் சகஸ்ராரம், அதற்கு மேல் துவாதசந்தம் ஆகிய பகுதிகளைக் குறிக்கும். இங்குள்ள ஈசன் தலையில் வடுவுடன் யோகக்கலைகளை ஸித்திக்கும் ஆதிகுருவாக அமர்ந்துள்ளார். அவருக்குத் துணையாக அம்பிகை யோகசக்தியாகவும் எழுந்தருளி இருக்கிறாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீமுருகப்பெருமான்
ஸ்ரீமுருகப்பெருமான்

இதே ஆலயத்தில் இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமுருகப்பெருமான், மிக மிகப் பழைமையான திருமேனியராக, சித்தர்கள் ஸ்தாபித்த மூலிகை மூர்த்தியாக எழுந்தருளி இருக்கிறார். இந்த தலத்தில் ஈசனிடம் மாணவராக இருந்து முருகப்பெருமான், யோகக்கலைகளை கற்றுக் கொண்டார் என்கிறது தலவரலாறு. இதனால் இந்த ஆலயமும் இங்குள்ள தீர்த்தங்களும் யோகம் பயில்பவருக்கு முக்கியமாக உள்ளன. இங்குள்ள ஏழு கிணறுகள் எக்காலத்திலும் வற்றுவதில்லை. இதுவே இங்கு தல தீர்த்தமாக உள்ளன. இது ஏழு ஆதார சக்திகளின் வடிவாக உள்ளன. மேலும் இங்கு சூட்சுமமான பல அதிசயங்கள் தென்படுகின்றன. தலையில் வடுவோடும் சுழியோடும் அதிசயமாகக் காணப்படும் ஈசன், நம் தலை எழுத்தை மாற்றக்கூடியவன் என்றும் போற்றப்படுகிறார். இத்தனை அற்புதங்களும் மகிமைகளும் கொண்ட தலத்தில்தான் வைகாசி விசாகத்தை நாம் கொண்டாடப்போகிறோம்.

இந்த ஆண்டு வைகாசி விசாக நாளான ஜூன் -12 ம் தேதி (2022) ஞாயிற்றுக் கிழமை அன்று (வளர்பிறை, விசாக நட்சத்திரம்) மாலை 6- 8 மணி வரை, நம் வாசகர்கள் நலம் பெற, ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம் நடத்த உள்ளோம். இந்த ஹோமத்தை பிரம்மரந்தீஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். மேலும் வைகாசி விசாக நாள் முழுவதும் பால் குட ஊர்வலம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு யாகங்கள், அர்ச்சனைகள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.

ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம்
ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமம்

அன்பர்கள் எல்லோரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். வீண் விரயம், காரியத்தடைகள், கடன் பிரச்னைகள் நீங்க வேண்டும் அன்பர்களுக்கு இந்த ஹோமம் ஒரு வரப்பிரசாதம். இந்த ஸ்ரீமஹாஸ்கந்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் தோஷங்கள் அகன்ற, அச்சமற்ற ஆரோக்கிய வாழ்வை அடைவர் என்பது நிச்சயம்.

அபூர்வ சமித்துக்கள், மலர்கள், மூலிகைகள் கொண்டு நடைபெறும் இந்த ஹோமத்தால் உங்கள் வீட்டில் வளங்கள் யாவும் பெருகும். செவ்வாயின் அதிபதி என்பதால் முருகனின் அருளால் விரயச் செலவுகள் குறையும். கடன் தொல்லை நீங்கும். வியாபார-தொழில் அபிவிருத்தி உண்டாகும். வெற்றி வசமாகும். தீராத நோய்கள் தீரும். மாங்கல்ய பலம், மகப்பேறு, சௌபாக்கிய வாழ்வு, அதிகாரம், பதவி உயர்வு, சொந்த வீடு, வேலை வாய்ப்பு, உறவு சமூகம், செல்வாக்கு, சொல்வாக்கு, வெளிநாட்டு யோகம் என சகல நன்மைகளும் உண்டாகும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+ரட்சை) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism