Published:Updated:

திருமலை திருப்பதியில் ஜனவரி 6, 7 வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சிகள் விவரம்! #Tirupaty

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே வைணவ ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். பரமபத வாசல் திறந்தவுடன் அந்த வழியாகச் சென்று பகவானை வழிபடுவது சிறப்பு.

திருப்பதி
திருப்பதி

திருப்பதியில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. வைணவர்கள் மட்டுமல்லாமல் இந்துக்கள் அனைவருமே வைகுண்ட ஏகாதசி விரதத்தை அனுசரிப்பார்கள்.

திருப்பதி
திருப்பதி

வைகுண்ட ஏகாதசி ஜனவரி மாதம் 6 -ம் தேதி அதிகாலை தொடங்கி, 7 -ம் தேதி இரவு முடிகிறது. மாதத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசியன்று விரதமிருக்க முடியாதவர்கள்கூட வைகுண்ட ஏகாதசியை நிச்சயம் கடைப்பிடிப்பார்கள்.

ஏகாதசி அன்று அதிகாலையிலேயே வைணவ ஆலயங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். பரமபத வாசல் திறந்தவுடன் அந்த வழியாகச் சென்று பகவானை வழிபடுவது சிறப்பு.

திருப்பதி
திருப்பதி
PN Jaya Sekhar

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதிக் கோயில் வண்ணக் கோலங்களாலும் மலர்களாலும் அலங்கரிப்பட்டு வருகிறது. ஜனவரி இரவு 6 -ம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் விடியற்காலை 2.30 மணிவரை 'திருப்பாவை பாராயண' நிகழ்ச்சி நடைபெறும்.

காலை 9 மணி தொடங்கி ஸ்வர்ண ரத ஊர்வலம் நடைபெறுகின்றது. மாலை 5 மணிக்கு சகஸ்ர தீப அலங்கார சேவையும் நடக்கிறது. இந்த இரண்டு நாள் விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். 7 -ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சக்கர ஸ்நானம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருப்பதி
திருப்பதி

இதையொட்டி ஜனவரி 6, 7 ஆகிய இரண்டு நாள்களும் திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கேற்ப தங்களின் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.