Published:Updated:

நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் நவபைரவருக்கான மகாஹோமங்கள்! நீங்களும் பங்கு கொண்டு பயன்பெறுங்கள்!

நவபைரவருக்கான மகாஹோமங்கள்!

நவபைரவருக்கான மகாஹோமங்கள்!

நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் நவபைரவருக்கான மகாஹோமங்கள்! நீங்களும் பங்கு கொண்டு பயன்பெறுங்கள்!

நவபைரவருக்கான மகாஹோமங்கள்!

Published:Updated:
நவபைரவருக்கான மகாஹோமங்கள்!

வீடும் நாடும் நலமாக இருக்க தொன்றுதொட்ட காலம் முதலே பலவகை ஹோமங்கள் நடத்துவது நம் வழக்கம். குறிப்பிட்ட தெய்வங்களை ஆராதித்துச் செய்யப்படும் இந்த ஹோமங்களால் சிறப்பான பலன்களும் கிடக்கின்றன. அந்த வகையில் ஸ்ரீபைரவருக்காக நடத்தப்படும் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் ஆகிய மூன்றும் வெகு உன்னதமானவை. இந்த ஹோமங்களால் ஒரே நேரத்தில் சிக்கல்களிலிருந்து விடுபடலாம்,தடைகள் நீக்கலாம், ஆரோக்கியம், செல்வம் மேம்படும் என்பது உண்மை.

நவ பைரவர் ஹோமம்
நவ பைரவர் ஹோமம்

ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரை ஆராதிக்கும்போது செல்வவளமும் தொழில் - வியாபார விருத்தியும் உண்டாகும் என புனித நூல்கள் கூறுகின்றன. பைரவ காயத்ரி ஹோமம் செய்கையில் எல்லாவித அச்சங்களில் இருந்தும் விடுபட்டு தைரியமும் தெளிவும் பெறலாம். மேலும் காரியத்தடைகள் நீங்கி சுபீட்சமான வாழ்வைப் பெறலாம் என்பதும் திண்ணம். அதேபோல் நவ பைரவர் ஹோமம் செய்வதால் நவகிரகங்களின் தோஷங்கள் யாவும் நீங்கி நல்ல பலன்களை அடையலாம் என்பதும் சாஸ்திரங்கள் கூறும் செய்தி.

சூரிய பகவானுக்கு அதிபதியாக விளங்குபவர் ஸ்வர்ணா கர்ஷன பைரவர். இவரின் துணையாக விளங்கும் யோகினி பைரவி. அதேபோல் சந்திரன் - கபால பைரவர் - இந்திராணி; செவ்வாய் சண்ட பைரவர் - கௌமாரி; புதன் - உன்மத்த பைரவர் - வராகி, குரு - அசிதாங்க பைரவர் - பிராம்மி; சுக்கிரன் - ருரு பைரவர் - மகேஸ்வரி, சனி - க்ரோதனபைரவர் - வைஷ்ணவி; ராகு - சம்கார பைரவர் - சண்டிகை; கேது - பீஷ்ண பைரவர் - சாமுண்டி என்று குறிப்பிடுகின்றன சாஸ்திரங்கள். ஆகவே பைரவரை வணங்கினால் நவகிரக தொல்லைகள் யாவும் நீங்கும் என்பது உறுதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீகாலபைரவர்
ஸ்ரீகாலபைரவர்

வரும் இரண்டு மாதத்தில் ராகு-கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி போன்றவை நடைபெற உள்ளன. இதில் எந்த பாதிப்பும் உண்டாகாமல், நன்மைகள் பெற இந்த யாகம் உதவும் என்பதில் ஐயம் வேண்டாம். எனவே சக்தி விகடன் வாசகர்களாகிய உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் சகல நன்மைகளும் வேண்டி, அதேபோல் உலக அமைதிக்காகவும் இந்த வைபவத்தை நடத்த இருக்கிறோம். மார்ச் 25-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஹோமம், நவ பைரவர் ஹோமம், பைரவ காயத்ரி ஹோமம் என 3 ஹோமங்கள் நடைபெற உள்ளன. பிரத்தியேகமான ஹோம திரவியங்களும், அபூர்வமான ஆகுதிகளும் கொண்டு முறைப்படி இந்த ஹோமங்கள் நடைபெறவுள்ளது. முறைப்படி வேதம் பயின்ற சிரோன்மணிகளைக் கொண்டே இந்த ஹோமங்கள் நடக்கவிருக்கிறது. எனவே விருப்பமுள்ள வாசகர்கள் உங்கள் குடும்ப நலன் வேண்டி இதில் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம். 3 ஹோமங்களுடன் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற உள்ளன. இதில் கலந்து கொண்டு சகலவிதமான இன்னல்களில் இருந்தும் விடுபட்டு எல்லா நலன்களும் பெறுங்கள்.

இந்த பிரசித்தி பெற்ற ஹோமத்தை தென்னாட்டு காசி என்று போற்றப்படும் வைரவன் கோயில் ஸ்ரீகால பைரவர் ஆலயத்தில் நடத்த உள்ளோம். இங்கு ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி நாளிலும் நடைபெறும் பைரவ ஆராதனைகள் விசேஷமானவை. இரவில் 7 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொண்டால் வேண்டியவை யாவும் நிறைவேறும்; தடைகள் யாவும் தகரும் என்பது நம்பிக்கை. இதனால் வைரவன்கோயில் ஸ்ரீகாலபைரவர் ஆலய நிர்வாகமும் சக்தி விகடனும் இணைந்து இந்த மகாபைரவ ஆராதனையை நடத்த இருக்கிறோம். வெகு அபூர்வமான, துடியான இந்த ஹோமங்களில் நீங்களும் கலந்து கொண்டு பயனடையுங்கள்.

வைரவன் கோயில் ஸ்ரீகால பைரவர்
வைரவன் கோயில் ஸ்ரீகால பைரவர்

இந்த மகாஹோமத்தில் கலந்து கொண்டால், மங்கல நிகழ்வுகள் யாவும் உடனே நிறைவேறும். வெகுநாள் வரமால் இருந்த பணம் வந்து சேரும். கடன் தொல்லைகள் நீங்கும். நோய்கள் தீரும். முதியவர்களுக்கு உண்டாகும் அத்தனை உபாதைகளும் சரியாகும். சனியின் கஷ்டங்கள் நீங்கும். பதவி உயர்வு உண்டாகும். அரசியலில் வெற்றி உண்டாகும். எல்லா வழக்குகளும் சாதகமாகும். கர்ம வினைகள் நீங்கி காரிய ஸித்தி உண்டாகும் என்கிறார்கள் பெரியவர்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்+விபூதி) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியைக் குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism