Published:Updated:

வைஷ்ணவ ஏகாதசி: எல்லாமுமாக நிலைத்திருக்கும் திருமாலின் ஐந்து நிலைகள் என்னென்ன தெரியுமா?!

வைஷ்ணவ ஏகாதசி
வைஷ்ணவ ஏகாதசி

வைஷ்ணவ ஏகாதசி: எல்லாமுமாக ஸ்ரீவிஷ்ணு விளங்கி, ஐந்து நிலைகளில் அண்ட சராசரங்கள் யாவும் நிறைந்துள்ளார் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவை என்னென்ன தெரியுமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனிதர்களிடம் வழிபாடு என்னும் வழக்கம் தொடங்கிய காலத்திலேயே திருமால் வழிபாடு உலகெங்கும் பரவி இருந்ததை வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக சங்க காலம் தொட்டே தமிழர்களிடம் திருமால் வழிபாடு இருந்ததை பரிபாடல் சொல்லும். கண்டுபிடிக்கப்பட்ட 22 பரிபாடல் பாடல்களில் 6 பாடல்களில் திருமால் பெருமைகளைக் கூறுகிறது.

'ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை...' எனத் தொடங்கும் பரிபாடலில் முதல் பாடலே திருமாலே நீ பலதேவனாகவும் இருக்கிறாய் உன்னை வணங்குகிறோம் என்று குறிப்பிடுகிறது. திருமால் அதாவது விஷ்ணு என்றால் 'எங்கும் நிறைந்திருப்பவர்' என்று பொருள். பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாக, பரப்பிரம்மமாக, பரமாத்மாவாக ஸ்ரீமன் நாராயணன் விளங்குகிறார் என்கின்றன புராணங்கள்.

ஸ்ரீமன் நாராயணன்
ஸ்ரீமன் நாராயணன்
ஸ்ரீஜெயவிஜய ஹோமம்: நிறைந்த ஆயுள், நீங்காத செல்வம்! ஹோமத்தில் நீங்களும் பங்கேற்பது எப்படி?
எல்லாமுமாக ஸ்ரீவிஷ்ணு விளங்கி, ஐந்து நிலைகளில் அண்ட சராசரங்கள் யாவும் நிறைந்துள்ளார் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவை பர நிலை, வியூஹ நிலை, விபவ நிலை, அந்தர்யாமி நிலை, அர்ச்ச நிலை.

பர நிலை: பைகுண்டத்தின் பரமபதத்தில் பாற்கடலில் பரவாசுதேவன் என்ற திருநாமத்தில் ஸ்ரீவிஷ்ணு ஆனந்த சயனனாக ஆதிசேஷன் மீது அறிதுயில் கொண்டிருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி என்ற மூன்று தாயாருடன், நித்யசூரிகள் எனும் அமரத்வம் கொண்ட அடியார்களுடன் விளங்குகிறார். ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, கருணை, வீரியம், தேஜஸ் ஆகிய ஆறு குணங்களைக் கொண்டவர் இவர். சதாசர்வ காலமும் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் இந்த பெருமானையே சகல ஜீவன்களும் புண்ணியம் பெற்று இருப்பின் வாழ்நாளுக்குப் பிறகு அடையும் என்பது ஐதீகம்.

பரவாசுதேவன்
பரவாசுதேவன்

வியூஹ நிலை: இதில் வாசுதேவன், சங்கர்ஷணன், ப்ரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு திருநாமங்களுடன் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளை நோக்கி உள்ளார். இவர்களே எல்லா உலகங்களையும் உருவாக்கி, அறநெறிகளையும், உண்மைகளையும் போதித்து தர்மம் நிலைபெறச் செய்கின்றனர். சாஸ்திரங்களை உருவாக்குகின்றனர். பிரளயத்தில் உலகின் அழிவுக்கு வழி வகுக்கின்றனர்.

திருச்சி கோயில்கள் - 10: வாழையடி வாழையாகக் குலம் தளைக்கும்... திருப்பைஞ்ஞீலி மகாதேவர் மகிமைகள்!

விபவ நிலை: விபவம் என்றால் பகவானின் அவதாரங்களைக் குறிக்கும். புண்ணியம் செய்தவர்கள் முக்தி அடைந்தால் காணக்கூடியது பர நிலை. தேவாதி தேவர்கள் மட்டுமே காணக் கூடியது வியூஹ நிலை. ஆனால் மண்ணுலகில் சகலரும் காணக்கூடிய நிலை என்றால் அது இதுதான். திருமால் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலைநாட்ட ஒவ்வொரு காலத்திலும் ஒன்பது அவதாரங்களை எடுத்தார். 'அவதாரம்' என்றாலே 'இறங்கி வருதல்' என்று பொருள். எளியவர்களான நம்மால் பரம்பொருளை அணுக முடியாது என்பதால் கருணை வடிவான திருமால் மண்ணுலகில் இறங்கி வந்து அவதரித்த வடிவங்களே விபவ நிலை. மச்ச, கூர்ம, வராஹ, வாமன, நரஸிம்ஹ, ராம, பரசுராம, பலராம, கிருஷ்ண அவதாரங்களே அவை. இனி எடுக்கவிருப்பது கல்கி.

அர்ச்ச நிலை
அர்ச்ச நிலை

அந்தர்யாமி நிலை: பிறப்பெடுத்த ஜீவன்கள் ஒவ்வொருவரிலும் திருமால் நிலைத்திருக்கும் தன்மையே அந்தர்யாமி என்ற நிலை.அதாவது நாமெல்லாம் ஜீவாத்மா, ஜீவாத்மாவின் மூலம் பரமாத்மா. ஒவ்வொருவருக்குள்ளும் அந்தர்யாமியாக திருமால் இருப்பதை உணர்ந்து கொண்டால் வாழ்வும் இறுதியும் ஆனந்த மயமாக மாறி விடும் என்பது சூட்சுமம்.

அர்ச்ச நிலை: ஆயிரமாயிரம் அர்ச்சாவதாரங்களை திருமால் பக்தர்களின் நலனுக்காக எடுத்துள்ளார். ஆம் ஆலயங்களில் நாம் தரிசிக்கும் மூர்த்தங்கள் யாவும் அர்ச்சாவதாரம் எனும் திருமாலின் வடிவங்களே. இவை தானாகவே விக்கிரக வடிவில் ஓர் இடத்தில் தோன்றினால், அதை ஸ்வயம் வியக்தம் என்றும், தேவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருந்தால் அது தைவிக அர்ச்சம் என்றும், முனிவர்கள், ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தால் ஆர்ஷம் என்றும், அரசர்கள், மனிதர்கள் பிரதிஷ்டை செய்திருந்தால் அவை மானுஷ அர்ச்சம் என்றும் வணங்கப்படும்.

இப்படி ஐந்து நிலைகளில், வடிவங்களில் எங்கும் எப்போதும் அருள்பாலிக்கும் திருமாலை பக்தி கொண்டு தொழுதால் மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறையும் என்பது நம்பிக்கை. குறை ஒன்றும் வைக்காத கோவிந்தனை வைஷ்ணவ ஏகாதசி நாளில் வழிபடுவது ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பார்கள். நாளை (3-9-2021) வைஷ்ணவ ஏகாதசி தினம்.

'செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு