Published:Updated:

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்: திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

சூரிய - சந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
சூரிய - சந்திரர்

நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வருவோம். காவிரிக்கு வழிகாட்டிய பெருமாள், நம் நல்வாழ்வுக்கும் வழிகாட்டுவார்.

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்: திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வருவோம். காவிரிக்கு வழிகாட்டிய பெருமாள், நம் நல்வாழ்வுக்கும் வழிகாட்டுவார்.

Published:Updated:
சூரிய - சந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
சூரிய - சந்திரர்

ர்நாடக மாநிலம் குடகு மலையில் தோன்றி வங்கக் கடலில் சங்கமிக்க கிழக்குநோக்கி பாய்ந்து வரும் காவிரித் தாய், வழியில் ஓரிடத்தில் மட்டும் தனது ஆர்ப்பரிப்பை அடக்கிக்கொண்டு, சற்றுத் தயக்கத்துடன் மேற்கே திரும்புவதாகத் தோன்றும்!

அந்த இடம், நாகை மாவட்டம் பூம்புகார் அருகே அமைந்துள்ள வலத்தான்பட்டினம். இவ்வூரில் காவிரிக்கரையோரம் அமைந்துள்ளது, ஸ்ரீவரதராஜரின் ஆலயம்.

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்:  திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

குடகு மலையிலிருந்து பாய்ந்துவந்த காவிரித் தாய், `சமுத்திரராஜன் இருக்குமிடம் இன்னும் ரொம்ப தூரமோ' எனத் திகைத்து, வந்த வழியில் திரும்பினாள். அப்போது அவளுக்குக் காட்சி தந்த பெருமாள், `‘தூரம் அதிகமில்லை. இங்கிருந்து வலமாக சென்றால், ஒரு காத தூரத்தில் சமுத்திரம் உள்ளது'’ என வழிக்காட்டினாராம். இங்கு மட்டுமே காவிரி மேற்கே திரும்பி சற்று தூரம் பாய்ந்து, பிறகு கிழக்கு நோக்கிச் செல்கிறாள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த இடத்தில் கன்னிமா ரிஷிகள் பூஜை செய்து தவமிருந்ததால், தற்போது `கன்னிமாந்துறை' என்றழைக்கப்படுகிறது. காவிரி வலம்வந்து செல்வதால் இவ்வூர் வலத்தான்பட்டினம் எனப் பெயர் பெற்றுள்ளது. காலப்போக்கில் இங்குள்ள பெருமாள் விக்கிரகம் மண்மூடிக் கிடக்க, அருகிலுள்ள நடராஜபிள்ளைச்சாவடி என்ற ஊரில் வசித்த செட்டியார் ஒருவரின் கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தைக் காட்டி அருளினாராம் பெருமாள். அதன்படி வெளியே எடுக்கப்பட்ட பெருமாளுக்கு, துளசி மகாராஜன் கோயில் கட்டினார்; வலத்தான்பட்டின ஜமீன்தார் நிலங்களை வழங்கியிருக்கிறார்.

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்:  திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

ஆலயத்தின் உள்ளே தன் சந்நிதிக்கு இடப்புறம் ஸ்ரீதும்பிக்கை ஆழ்வாரும் ஸ்ரீமகா மாரியம்மனும் அருள்பாலிக்க, வலப்புறத்தில் ஸ்ரீகம்பத்தாழ்வார், ஸ்ரீவசிஷ்ட மகரிஷி ஆகியோர் அமர்ந்திருக்க, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார், ஸ்ரீவரதராஜப்பெருமாள். பால் அபிஷேகத்தின்போது, பெருமாளின் இடது திருக் கண்ணில் சூரியனும் வலது கண்ணில் சந்திரனும் காட்சி தருவது, வேறெங்கும் காண்பதற்கரிய அற்புதமாகும்.

ஸ்ரீசீதா, ஸ்ரீலட்சுமணர் சகிதம் ஸ்ரீராமர் தெற்கு நோக்கி தனிச்சந்நிதியில் அருள்கிறார். இங்கு இரண்டு ஆஞ்சநேயர்கள். ஒருவர் வீர ஆஞ்சநேயர், மற்றவர் இலங்கையிலிருந்து பக்தர் ஒருவர் மூலம் வந்துசேர்ந்தவர் என்கிறார்கள். இருவருமே சிறந்த வரப்பிரசாதி! ஸ்ரீசக்ரத்தாழ்வார், கொடிமரமாக ஓங்கி நிற்பது இத்தலத்தின் சிறப்பம்சம். கோயிலின் பின்புறம் ஆதிஷேசன் அருள்பாலிக்கிறார்.

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்:  திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

இந்தக் கோயிலில் 60 ஆண்டுகளாக சேவை செய்து மறைந்த பள்ளக்கொல்லை கலியபெருமாளுக்குப் பிறகு, கடந்த 40 ஆண்டு களாய் பூஜைப் பணிகளை செய்துவருகிறார் ராஜூ என்கிற கலிராஜ். அவரிடம் பேசினோம்...

``குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தொடர்ந்து மூன்று சனிக் கிழமைகள் இங்கு வந்து, 48 முறை பெருமாளை வலம்வந்து வணங்கினால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அதேபோல், கன்னிப்பெண்கள் தொடர்ந்து ஐந்து சனிக்கிழமைகள் ஆதிசேஷனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டால், திருமண வரம் கைகூடும். இப்படி இங்கு வந்து வழிபடுவதால், பில்லி, சூன்யம், ஏவல், மாந்திரீகம் போன்ற தீவினைகள் அனைத்தும் விலகும்; எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஐப்பசி - துலா மாத துலாப்பார விழாவின்போது, கன்னிமாந்துறையில் நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் வாய்க்கும்'' என்றார்.

காவிரிக்கு வழிகாட்டிய வரதராஜர்:  திருக்கண்களில் சூரிய - சந்திரர்!

நாமும் ஒருமுறை இந்தத் தலத்துக்குச் சென்று வருவோம். காவிரிக்கு வழிகாட்டிய பெருமாள், நம் நல்வாழ்வுக்கும் வழிகாட்டுவார்.

எப்படிச் செல்வது? : மயிலாடுதுறை - பூம்புகார் பிரதான சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது, கிடாரங் கொண்டான் மின்நிலைய பேருந்து நிறுத்தம். இதன் அருகிலேயே ஆலயம் உள்ளது (தொடர்புக்கு: கலிராஜ் - 73736 57515).