Published:Updated:

எதிர்பாராத ஆபத்துக்களைத் தடுக்கும் ஸ்ரீமகா வாராஹி ஹோமம்! நீங்களும் சங்கல்பிக்கலாம்!

வாராஹி ஹோமம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வெற்றிகளின் நாயகியாகப் போற்றப்படுவாள் ஸ்ரீவாராஹி அம்மன். அதே வேளை எதிர்பாராத ஆபத்துக்கள், விபத்துக்கள், தொல்லைகள், நோய்கள் என சகல துன்பங்களில் இருந்தும் நம்மை காப்பவளும் அவளே. மேலும் வராக மூர்த்தியின் அம்சமானவள் என்பதால் இவளை வணங்கி வேண்டிட, நிலப் பிரச்னை, சொந்த வீடு வாங்க முடியாத நிலை, நிலம் தொடர்பான வில்லங்கள், வீடு கட்ட முடியாமல் தவித்தல், பாகம் பிரிப்பதில் இழுபறி போன்ற பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் பெரும் கருணை கொண்ட தாய் இவள் என்கின்றன சாஸ்திரங்கள்.

வாராஹி
வாராஹி

வராஹ முகமும் அம்பாளின் உடலும் கொண்டவள் வாராஹி. ஞான சக்தியை வெளிப்படுத்த இவளுக்கு மூன்றாவது கண் உள்ளது. எட்டு திருக்கரங்களில் ஆயுதங்களுடன் நீல நிறத்தில் காணப்படுவாள். செந்நிற ஆடையுடுத்தி, நவரத்தின மகுடம் சூட்டிக் கொண்டு சிம்ம வாகனத்தில் எழுந்தருள்வாள். மண்ணைக் காக்கும் இந்த தேவி கலப்பையும் உலக்கையும் கொண்டிருப்பாள். ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகான பஞ்சமி திதியில் அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியான ஸ்ரீவித்யாவின் கையில் இருந்த புஷ்ப பாணங்கள் வாராஹியாக உருவாயின என்று புராணங்கள் கூறுகின்றன.

ஆதிசக்தியின் படைத் தலைவியாகவும், அசுரர் சக்திகளுக்கு எதிரானப் போரை முன் நின்று முடிப்பவளாகவும், தீயவர்களின் தவறுக்கு ஏற்ற தண்டனையை வழங்குபவளாகவும் அமைந்தவள் இருப்பவள் வாராஹி. தேவி மாகாத்மியம் என்ற நூல் மதுகைட வதம், சும்ப நிசும்ப வதம், சண்ட முண்டர் வதம், மகிஷாசுர வதம் போன்ற சம்ஹாரங்களில் அன்னை சக்திக்கு வெற்றியைத் தேடித் தந்தவள் வாராஹி என்கிறது. சோழ, சாளுக்கிய மன்னர்களுக்கு வெற்றி தேவியாக இருந்து போர்க்காலங்களில் பெரிதும் வழிபடப்பட்டவள் என்றும் வரலாறு கூறுகின்றது. சோழர்கள் ஒவ்வொரு முறையும் போருக்குச் செல்லும் போதெல்லாம் வாராஹியை வணங்கி விட்டுத்தான் செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

வராஹி ஸ்வரூபம்
வராஹி ஸ்வரூபம்

வாராஹி வழிபாட்டிற்கும் நவராத்திரிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாராஹி ஸ்ரீராஜராஜேஸ்வரியின் படைத்தலைவி. இதனால் நவராத்திரியின் 9 நாள்களும் ஸ்ரீவாராஹி தேவிக்கு ஹோமம், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். நவராத்திரி நாளில் வாராஹி தேவிக்கு, தினமும் ஓர் அலங்காரம் என்று பூமியில் விளையும் பொருள்களைக் கொண்டே அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். விஜய தசமி நாளில் பல்வேறு காய், கனிகள் கொண்டு ஸ்ரீவாராஹியை அலங்காரம் செய்வார்கள். அப்போது இந்த அன்னையை தரிசித்தால் குடும்பப் பிரச்னைகள், வழக்குகள், அச்சங்கள் போன்றவை நீங்கும் என்பார்கள். திருவானைக்காவின் அகிலாண்டேஸ்வரி அம்பாள் வராஹி ஸ்வரூபம் எனப்படுகிறாள். ஈசனின் மாணவியாக அங்கு வீற்றிருக்கும் அன்னைக்கு அங்கு திருமண வைபவம் நடைபெறுவதில்லை. காரணம் அவள் ஞான சொரூபியாக, வாராஹியின் அம்சமாக இருப்பதுதான் என்கிறார்கள். அதனால் திருவானைக்கா தண்டநாத பீடம் எனப்படுகிறது.

ஸ்ரீவாராஹி அம்மன்
ஸ்ரீவாராஹி அம்மன்

தேவாதிதேவர்களும் தொழும் அம்பிகையாம் ஸ்ரீவாராஹி அம்மனின் அருளைப்பெற இந்த நவராத்திரி நன்னாளில், விஜய தசமி அன்று சென்னை கோடம்பாக்கம் ஸ்ரீதேவி கருமாரியம்மன் மகா பிரத்யங்கிரா தேவி திருக்கோயில் மற்றும் சக்தி விகடன் இணைந்து வாசகர்களுக்காக ஸ்ரீமகா வாராஹி ஹோமம் நடத்த உள்ளனர். இது வரும் 15-10-21 அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்து வழிபட்டால் சகல உபாதைகளும் நீங்கும். சத்ரு பயம் போகும். ஆயுள் விருத்தி; ஆரோக்கிய வாழ்வும் கிடைக்கும். சுப காரியத் தடைகள் விலகும். தோஷங்கள் நீங்கும். அம்பிகையின் பரிபூரண ஆசி பெற்று சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும் என ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த நவராத்திரி நன்னாள் முழுக்க ஸ்ரீமகா வாராஹி ஹோமத்துடன் ஸ்ரீமகா வாராஹியின் மூல மந்த்ர கோடி பாராயணமும் சரபேஸ்வர, சூலினி, பிரத்யங்கிரா நாமார்ச்சனைகளும் நடைபெற உள்ளன. இதனால் இந்த வைபவத்தில் இணைந்து சங்கல்பம் செய்து கொள்வது விசேஷம் எனலாம்.

ஸ்ரீமகா வாராஹி
ஸ்ரீமகா வாராஹி

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (மஞ்சள் + குங்குமம் + ஹோம பஸ்மம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு