Published:Updated:

கார்த்திகை இரண்டாம் சோமவாராம் - சிவனை வழிபட்டால் என்ன பலன் கிட்டும்?

சிவன்
News
சிவன்

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவ தலங்களைத் தரிசிப்பது நல்லது. சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது. அன்னதான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது நன்று.

சோம வாரம் சிவனுக்கு உகந்த நாள் என்பதாலும், அதிலும் கார்த்திகை மாத சோம வாரங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்பதாலும் சிவாலயங்களில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். சில சிவாலயங்களில் 'சங்காபிஷேகம்' நடைபெறும்.

108 அல்லது 1008 சங்குகளில் நீரை நிரப்பி, யாகசாலைகளில் வைத்து, வேள்வி செய்து, அந்நீரால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டுகின்றனர். 

சிவபெருமான் அபிஷேகப்பிரியர். சிவபெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும் விட, சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சங்காபிஷேகத்தை நேரில் கண்டு இறைவனை வழிபடுவதால் சகல செல்வமும் கைகூடும்.

யாக பூஜை
யாக பூஜை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கார்த்திகை சோம வார தினத்தில் சிவனை வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இம்மாதத்தில் விடியற்காலையிலும், அந்திப்பொழுதிலும் வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

சிவபெருமான் குடிகொண்டிருக்கும் சிவ தலங்களைத் தரிசிப்பது நல்லது. சந்திரனின் பெயரோடு விளங்கும் சிவாலயங்களுக்கு செல்வது நல்லது. அன்னதான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது நன்று.

இவ்வாறு வழிபாடு செய்வதால் திருமணம் கைகூடும். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். கணவன், மனைவி ஒற்றுமை கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். ஆயுள் விருத்தி அடையும்.

ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளிலாவது அனுஷ்டிப்பது நலம் தரும்.

சிவன்
சிவன்

திருமணமாகாதவர்கள் நல்ல கணவன் வேண்டியும், திருமணமானவர்கள் கணவன் நோயில்லாமல் நீண்ட காலம் வாழவும், இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். கணவன், மனைவி இருவருமாக இந்த விரதத்தை மேற்கொண்டு வந்தால் வாழ்வில் அனைத்து வளங்களும் கிட்டும். விரதமிருப்பவர்கள் மாலை வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபடலாம்

திருமணமான பெண்கள் வீட்டிலோ அல்லது சிவாலயம் சென்றோ முழு நெல்லிக்கனியில் சிறிய துளையிட்டு அதில், நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால் செல்வம் பெருகும். அன்று முழுவதும் "ஓம் நமசிவாய" என்ற மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்துக்கொண்டே இருந்தால் வாழ்வில் அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

எனவே கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சிவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டு சிவனின் அருளை பெறலாமே!