சோழிகளைக் குலுக்கிப்போட்டது போல உலக நாடுகளைத் தாறுமாறாக உலுக்கி, உருக்குலைத்துப் போட்டிருக்கிறது ‘கோவிட் 19’ தொற்று.

இந்தக் கோரத் தொற்றுநோயின் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற அரசாங்கம் போட்ட ஊரடங்குச் சட்டத்தால், சிரமங்கள் பல என்றாலும், அதனால் கிடைத்திருக்கும் நன்மைகளும் பல.

சென்னை கெருகம்பாக்கத்தைச் சேர்ந்த நம் வாசகி, கயிலைமணி சிவ.ஜெயஜோதி ஜெயகுமாருக்கு இந்த ஊரடங்கு காலம் அவருடைய ஆன்மிகத் தேடலுக்கான விடை தரும் காலமாக இருந்திருக்கிறது.

ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் வசந்த நவராத்திரியை, பிரமாண்டமான கொலுவுடன் கணவர் ஜெயகுமார் மற்றும் மகன் ஹரீஸ்வருடன் பிரமாதமாகக் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் ஜெயஜோதி. அந்த அனுபவத்தை அவரே விவரிக்கிறார்.

‘‘நம்ம புராணங்களின்படி, நான்கு நவராத்திரிகள் முக்கியமானவை. அவை: ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, மாசி மாதம் சியாமளா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி.

ஆஷாட நவராத்திரியில் வாராஹிதேவியை பூஜிப்பார்கள். சாரதா நவராத்திரி பற்றி நம் எல்லோருக்குமே நன்கு தெரியும். துர்கை, லட்சுமி, சரஸ்வதியை பூஜிக்கும் ஒன்பது நாள்கள் அவை. சியாமளா நவராத்திரியில் சியாமளை என்கிற ராஜமாதங்கியை பிரதான மாக வைத்துக் கொண்டாடு வார்கள். வசந்த நவராத்திரியின் நாயகி ஶ்ரீலலிதாம்பிகை.

எங்கள் வீட்டில் 23 வருடங்களாக புரட்டாசி -சாரதா நவராத்திரியைக் கொண்டாடி வருகிறோம். அதேநேரம், நான், என் கணவர், மகன் மூணு பேருமே ஶ்ரீவித்யா உபாசகர்கள். லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் பல நூறு முறை செய்திருக்கிறோம். வீட்டிலேயே லலிதாம்பிகைக்குக் கோடி அர்ச்சனை செய்யும் பாக்கியமும் எங்களுக்குக் கிடைச்சிருக்கு. ஆகவே, ஶ்ரீலலிதாம்பிகையை பிரதானமாக வைத்து பூஜிக்கும் வசந்த நவராத்திரியை ஒரு வருஷமாவது கொண்டாடணும்னு எனக்கு நீண்டநாள் ஆசை. அது இந்த வருஷம் நிறைவேறியது.

சாரதா நவராத்திரியில் சின்ன அளவில் ‘ஸ்வர்ண கொலு’ வைத்து, நவாவர்ண பூஜை செய்து சிம்பிளாகப் பண்ணிட்டு, வசந்த நவராத்தியை கிராண்டா பண்ணலாம்னு திட்டமிட்டேன். பொதுவாக வசந்த நவராத்திரி, யுகாதியில் தொடங்கி ராம நவமி வரையிலுமான ஒன்பது நாள்கள்தான். தசமியில் நிறைவு பெறும். ஆனால், சிலர் ஒருபட்சம் (15 நாள்கள்) அல்லது 45 நாள்கள் என்று வைப்பாங்க. `45 நாள்கள் வைக்கிறேன்' என்று வேண்டிக்கொண்டு பூஜித்தால், நாம் எண்ணியது நிறைவேறுமாம்.

என் கணவரும் மகனும் வீட்டில் இருந்ததால் என் எண்ணம் ஈடேற ரொம்பவே ஒத்தாசையாக இருந்தாங்க. முதலில் 15 நாள்கள் வைப்பதாக முடிவுசெய்து, பரண்மேலிருக்கும் பெட்டிகளை எல்லாம் இறக்கி, பொம்மைகளை எல்லாம் துடைத்து படியில் அழகாக அடுக்கி முடித்தேன். எல்லா ஏற்பாடுகளையும் முடித்து, எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் அழைப்பு அனுப்பலாம் என்றிருந்தேன். சரியாக அன்றுதான் ஊரடங்கு உத்தரவு வந்தது. முதலில் 21 நாள்கள் என்றிருந்த ஊரடங்கு அடுத்த 20 நாள்களுக்குத் தொடர்வதாக அறிவிப்பு வந்ததும், மறு யோசனையே இல்லாமல் நான் என் முடிவை மாற்றி 45 நாள்கள் அம்பாளை பூஜிக்க முடிவு செய்தேன்.

தாமிரபரணி புஷ்கரத்துக்குப் போய்விட்டு வந்த போது, மதுரையில் பெரிய பெரிய பொம்மைகள் வாங்கினோம். எப்போதுமே கொலுவுக்கு பொம்மை வாங்கும்போது, ஒவ்வோர் ஊரிலும் பொம்மைகள் செய்யும் இடத்துக்கே போய் வாங்குவது எங்கள் வழக்கம்.

அம்பாளும் நானும் மட்டுமே இருந்த இந்த தினங்கள் அழகானவை. அவளில் லயிச்சு உருகி வழிபட்ட காலத்தை மறக்கவே முடியாது!

புதுச்சேரியில் வில்லியனூர், கடலூரில் வண்டிப்பாளையம், மதுரையில் விளாச்சேரி... இப்படித்தான் போய் தேடித்தேடி வாங்குவோம். எங்கே சுற்றுலா போனாலும் பொம்மைகள் வாங்கிடுவேன். கேரளாவில் பகவதி, கொல்லூரில் மூகாம்பிகை, இலங்கையில் சங்கரி, கொல்ஹாபூரில் மகாலட்சுமி என்று அம்பாளின் வெரைட்டியான கலெக்ஷன் என்னுடையது. இந்த முறை மதுரையில் ‘தசமகா வித்யா’ பொம்மைகள் வாங்கினேன்.

வீட்டு ஹாலில் வட்ட வடிவில் 45 படிகளை அமைத்து பொம்மைகளை அடுக்கினோம். நடுவே ‘சாக்தம்’ என்ற தீமில் அம்பாளின் அத்தனை வடிவங்களையும் அடுக்கினோம். அவற்றுள் தசமகா வித்யாதான் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். யார் வீட்டிலுமே இருக்காதுன்னு நினைக்கிறேன். லட்சத்தில் ஒரு வீட்டில் இருக்கலாம். ஊஞ்சலில் இருக்கும் சிந்தாமணி மண்டபத்தில் ஶ்ரீலலிதை பரிவாரங்களுடன் இருக்க, அதோடு துர்கா, லட்சுமி, சரஸ்வதி பொம்மைகளும் ரொம்ப ஸ்பெஷலா நான் பாதுகாத்து வரும் பொம்மைகள். கயிலை யாத்திரையின்போது என்னிடம் மிக நட்பும் அன்பும் காட்டிய அனந்தலக்ஷ்மி ஆன்ட்டி கொடுத்தவை. அவங்க வீட்டில் பல காலங்களாக பூஜிக்கப்பட்டவை.

கொலு வெச்சதும் ‘லாக் டெளன்’ ஆயிடுச் சேன்னு நான் கொஞ்சம்கூட வருத்தப்படவே இல்லை. ரொம்ப நாளாக என் மனசுக்குள்ள ஒரு குறை நெருடிக்கிட்டே இருந்தது.

‘நவராத்திரி நேரத்தில் அம்பாளை நாம ஒழுங்கா பூஜிக்கிறதே இல்லை... ஓடிக்கிட்டே இருக்கிறோம்... அமைதியா உட்கார்ந்து அரை மணி நேரம் ஸ்லோகம் சொல்லக்கூட முடியாமல் ஒரே டென்ஷன்லயே நவராத்திரி போயிடுதே!’ என்று உள்ளூர உறுத்தல் இருந்தது. அதைப் போக்குறதுக்குத்தான் அம்பாளே இப்படி ஒரு வழி காட்டியிருக்கான்னு நினைக்கிறேன்.

இப்போ எனக்குத் தினசரி சமையல் தவிர வேறு எந்த வெளிவேலையும் இல்லை. தினமும் காலையில் என் கணவர் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டத்தில் எல்லாப் பூக்களையும் பறிச்சுட்டு வந்து கொடுத்திடுவார். லலிதா சகஸ்ரநாமம் சொல்லிக்கிட்டே அந்தப் பூக்களை வைத்து அலங்காரம் பண்ணிடுவேன். பிறகு நிம்மதியா உட்கார்ந்து எல்லா ஸ்லோகங்களையும் சொல்றேன்.

லலிதாம்பிகை விளக்கு பூஜையுடன், தினமும் அந்தந்த நாளுக்கான கடவுளுக்கும் பூஜை பண்றேன். பிரதோஷம் என்றால் சிவன், கிருத்திகை என்றால் முருகன், சதுர்த்தி என்றால் விநாயகர் என்று அந்தந்தக் கடவுள்களுக்கான அத்தனை ஸ்லோகங்களையும் பாடல்களையும் பாடி, பூஜை செய்றேன். போன வளர்பிறை அஷ்டமியில் தேவி மகாத்மியம் முழுவதும் பாராயணம் செய்து, அத்தியாயத்துக்கு ஒன்று வீதம் 13 நைவேத்தியம் செய்து படைச்சு, ஆத்மார்த்தமாக வழிபட்டேன். மனசுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது.

தினமும் கிட்டத்தட்ட நாலு மணி நேரம் பூஜையில் செலவிட முடியுது. எந்த டென்ஷனும் இல்லை. எங்கேயும் ஓட வேண்டிய நிர்பந்தமும் இல்லை. கொலுவுக்கு யாரும் வர முடியாத குறையைப் போக்க, நானே தினமும் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் எல்லாருக்கும் அனுப்பிடறேன்.

முதல் நாள் முதல் தாம்பூலம் அம்பாளுக்குக் கொடுத்துட்டேன். அப்புறம் ஒன்பது பேருக்கு தாம்பூலம் கொடுத்தேன். யாருக்கும் நம்மால பிரச்னை வந்துடக் கூடாது என்பதால் அக்கம் பக்கம் இருக்கிறவங்களைக்கூட கூப்பிடல.

23 வருஷம் சாரதா நவராத்திரிக்கு அப்புறம் இந்த வருஷம் 24-ம் வருஷம்... இந்த வசந்த நவராத்திரி பூஜை, எனக்கும் அம்பாளுக்குமானதாக பிரத்யேகமாக அமைஞ்சிடுச்சு. அவளும் நானும் மட்டுமே இருந்த இந்த தினங்கள் அழகானவை. லோகமாதாவான அவளில் லயிச்சு, உருகி உருகிப் பாடி வழிபட்ட இந்த ‘லாக் டெளன்’ காலகட்ட நவராத்திரியை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

உலக க்ஷேமத்துக்காக மட்டுமே வேண்டிக் கிட்டு, உலக மக்களை மிரட்டும் கொரோனா அரக்கனை விரட்டுறதுக்கான பூஜையாகத்தான் இது அமைஞ்சுது. இந்த வசந்த நவராத்திரி பூஜை, அனைவரின் வாழ்விலும் வசந்தத்தைக் கொண்டுவரப் பிரார்த்திக்கிறேன்!’’ என்று கண்களில் பக்தியும் குரலில் பரவசமும் இழையோட கூறுகிறார் ஜெயஜோதி.