Published:Updated:

வழித்துணை பாபா

பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

ஶ்ரீசாயி சிறப்புக் கட்டுரைப்போட்டி - வாசகர் அனுபவம்

வழித்துணை பாபா

ஶ்ரீசாயி சிறப்புக் கட்டுரைப்போட்டி - வாசகர் அனுபவம்

Published:Updated:
பாபா
பிரீமியம் ஸ்டோரி
பாபா

வழித்துணை பாபா

நானும் என் நண்பர்களும் சேர்ந்து குடும்ப சகிதமாக ஷீர்டி பயணம் சென்றோம். ஷீர்டியில் அற்புத தரிசனம். அதன்பின் அங்கிருந்து பல கோயில்களுக்குச் செல்வதாகத் திட்டம். நள்ளிரவில் எங்கள் ரயில். ஏறிப்படுத்து விட்டோம். நண்பர்கள் வேறு பெட்டியில் இருந்தார்கள்.

நாங்கள் ஒரு ஸ்டேஷனில் இறங்க வேண்டும். ஆனால் அந்த ஸ்டேஷன் வரும்போது நானும் என் மனைவியும் உறங்கிவிட்டோம். இறங்கிய நண்பர்களும் நாங்கள் இறங்கியிருப்போம் என்று முடிவு செய்துவிட்டனர். சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டுவிட அவர்கள் எங்களைக் காணாமல் திகைத்தினர்.

நாங்கள் காலை கண்விழித்துப் பார்த்தபோது ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அது எங்கே போகிறது என்றுகூட எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. எல்லோரும் ஹிந்தியில் அல்லது மராத்தியில் பேசினார்கள். எங்களுக்கு அழுகையே வந்துவிட்டது. நண்பர்கள் போன் செய்தோம். அவர்களோ, 'எப்படியாவது ஷோலாப்பூர் வந்துவிடு அங்கே நாங்கள் காத்திருக்கிறோம்' என்று சொல்லிவிட்டனர்.

சாயிபாபா
சாயிபாபா



'சாயிநாதா எங்களுக்கு உதவப்பா' என்று மனதுக்குள் வேண்டிக்கொண்டாம். அடுத்த சில நிமிடங்களில் அங்கு ஒரு பெரியவர் வந்தார். அவர் எங்களிடம் 'என்ன பிரச்னை' என்று தமிழில் விசாரித்தார். நாங்கள் அதிசயித்துப் போனோம்.

பிறகு, 'தான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கப் போவதாகவும் நீங்களும் என்னோடு வாருங்கள்' என்றார். அவரின் பேச்சில் நம்பிக்கை ஏற்பட்டது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கினோம்.

பெரியவர் எங்களை ஒரு சிறுவனோடு அனுப்பினார். அந்தச் சிறுவன் எங்களை ஒரு பேருந்தில் ஏற்றிவிட்டு நடத்துனரிடம் ஷோலாப்பூரில் இறங்கிவிடுமாறு சொன்னான். அதேபோன்று நாங்கள் ஷோலாப்பூரில் இறங்கி நண்பர்களைக் கண்டுபிடித்து எங்கள் குழுவோடு இணைந்துகொண்டோம். 'தெய்வம் மனுஷ ரூபேனா' என்பார்கள். அன்று எங்களுக்கு அந்தப் பெரியவர் ரூபத்தில் வந்து வழித்துணையாய் இருந்தவர் சாயிநாதன் தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

சாயி சரணம்

- அயன்புரம் சத்திய நாராயணன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism