Published:Updated:

வீணை யோகம்!

வீணை யோகம்
பிரீமியம் ஸ்டோரி
வீணை யோகம்

ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

வீணை யோகம்!

ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன்

Published:Updated:
வீணை யோகம்
பிரீமியம் ஸ்டோரி
வீணை யோகம்

`வீணைக்கு வாணி’ என்ற சிறப்பு சரஸ்வதிதேவிக்கு உண்டு. ராவணன் வீணைக் கொடியை உடையவன். வீணை இசைப்பதில் வல்லவனான ராவணனனை இசைப் போட்டியில் அகத்தியர் வென்றார் என்ற தகவல் புராணத்தில் உண்டு. குரு ராகவேந்திரரும் வீணை இசைப்பதில் வல்லமை பெற்றவர்.

வீணை யோகம்!
LEOcrafts

கத்துவம் பெற்ற - மங்கல இசை வாத்தியமான வீணைக்கும் ஜோதிடத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. ஆம், `வீணை யோகம்’ என்ற யோகம் குறித்து விவரிக்கின்றன ஜோதிட நூல்கள். கிரகங்களின் கூட்டுச் சேர்க்கையானது பலவிதமான யோகங்களை ஏற்படுத்தும். அந்த ஜாதகர் பலவிதமான பாக்கியங்களை அடைவார். அவருக்குப் பெரும் புகழும் பெருமையும் வந்து சேரும். அதேநேரம் கிரகங்களின் சேர்க்கை விபரீதமாக அமைந்துவிட்டால், விபரீத விளைவுகளை அளித்துச் சிரமப்படுத்திவிடும்.

ஜோதிடம் குறிப்பிடும் யோகங்களில் ஒன்று வீணை யோகம். இதை வல்லகி யோகம், உபயசாரி யோகம் என்றும் குறிப்பிடுவார்கள். எப்படியான கிரக நிலைகளால் இந்த யோகம் அமைகிறது, இதன் சிறப்பென்ன? விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

ஜாதகத்தில் 12 ராசிகளில் 9 கிரகங்கள் தனித்து இடைவெளி நின்றால் வீணை யோகம் உண்டாகும் என்பர். `கிரகங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளாமல் தனித்தனியே இருப்பது’ என்று அர்த்தம் செய்து கொள்ளலாம். இப்படி நவகிரகங்களும் தனித்தனியே இடைவெளிவிட்டு அமையப்பெற்றால் அது வீணையோகம். குறைந்தபட்சம் 7 கிரகங்களேனும் இப்படி அமைந்தாலே வீணை யோகம் அமையும் என்றும் சொல்வார்கள். கிரகங்களுக்கு இடையேயான இடைவெளியைப் பொறுத்து வீணை யோகத்தின் தன்மை வெளிப்படும்.

சூரியனும் செவ்வாயும் நெருப்புக்கும் உஷ்ணத்துக்கும் காரணம் ஆவார்கள். சந்திரன் நீருக்கும் குளுமைக்கும் காரணமாவார். குரு மற்றும் சுக்கிரன் வாழும் தன்மை, குடும்பம், பொருளாதாரம் ஆகியவற்றுக்குக் காரகத்துவம் பெறுவர்.

சனி பகவான் மிதமான கிரகம். இவர், ஜாதகர் செய்த வினைகளைத் தீர்த்துவைப்பவர், ஆயுள், தொழில் போன்றவற்றுக்குப் பொறுப்பாவார். ராகு பேராசை, பிரமாண்டம், கற்பனைத் திறனுக்கு வித்திடுபவர். கேது பகவான், நிதானத்தையும் ஞானத்தையும் குறிப்பிடுபவர். புதன் பகவான் கல்வியறிவு, பேச்சு ஆகியவற்றுக்குக் காரணமானவர் என்று கூறலாம்.

இங்ஙனம் வெவ்வேறு தன்மை கொண்ட கிரகங்கள் சில இடங்களில் ஒன்றிணையும்போது, காரகத்துவங்கள் மாறுபடும். இந்த மாற்றமானது முன்னேற்றத்தையும் தரலாம்; ஏமாற்றத்தையும் தரலாம்.

ஆனால் வீணை யோகம் அமையும்போது, கிரகங்கள் பஞ்சபூதத்தின் அமைப்புடன் வேதங்களின் அம்சத்துடன் தனித்தனியே இடைவெளி விட்டு அமர்வதால், அந்தந்த கிரககத்துக்கு உரிய தனித்தன்மை முழுமையாக வெளிப்படும்.

வீணை யோகம்!
Jun Zhang

வீணை யோகம் ஒரு ஜாதகனுக்குக் குடும்பம், நல்ல மனைவி, குழந்தைப் பேறு, நிம்மதியான பொருளாதாரம், நல்ல வேலை, வீடு-மனை, கால்நடைச் செல்வங்கள், நிலபுலன்கள் மற்றும் அசையா சொத்துகளைக் கொடுக்கும்.

வீணை யோக அமைப்பில் சூரிய, சந்திர கிரகங்கள் அமைந்திருந்தால், ஜாதகருக்கு தந்தை வழியில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் உரிமை தானாகக் கிடைத்துவிடும். அரசு மற்றும் அரசாங்க வழி ஆணைகள், உதவிகள் அனைத்தும் கிடைக்கும்.

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி வீணை யோகத்தில் அமைந்திருந்தால், குறிப்பிட்ட கிரகத்துக்குரிய காரகத்துவப்படி அந்தந்த வழிகள் உயர்ந்த பலன்கள் கிடைக்கும். இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று வக்கிர கதியுடன் வீணையோக அமைப்பில் இருந்தால், பலன்கள் கிடைப்பதில் சற்று காலதாமதம் உண்டாகும். இப்படியான கிரக அமைப்புள்ள ஜாதகர்கள் பலன்களைத் தாமதமின்றி பெற, வீணை இசைக் கச்சேரிகளை முன்னின்று நடத்தலாம்; வீணை நாதத்தைச் செவி மடுத்து மகிழலாம்.

ராகுவும் கேதுவும் வீணையோகத்தில் அமையப்பெற்றிருந்தால், அந்த ஜாதகர், சங்கராபரண ராகத்தை வீணையில் இசைக்கவைத்துக் கேட்டு மகிழ்வது சிறப்பு. இதனால் உயர்ந்த நற்பலன்கள் உண்டாகும். வாழ்வில் பல நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஒரு ஜாதகத்தில் இந்த வீணை யோகம் பலம் பெற்று இருக்கவேண்டும் எனில், வீணையின் நாதத்தில் மகாவிஷ்ணுவின் பாசுரங்கள் மற்றும் மகாலட்சுமியின் துதிப்பாடல்களை வாசிக்கச் செய்து கேட்டு மகிழலாம்.

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது காம்போதி ராகம். இந்த ராகத்தை வீணையில் மீட்டச் செய்து, செவிகுளரக் கேட்டு மகிழுங்கள். இதன் மூலம் சிவனருள் ஸித்திக்கும். அதன் பலனாக உடல்நலக் குறைவுகள், உறவுகளுக்கு இடையேயான பிரச்னைகள் நீங்கும்.