Published:Updated:

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 5

வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

பாபா மாமி ரமா சுப்ரமண்யம்

மகாயோகி காலக்ஞானி வீர பிரம்மேந்திரர் - 5

பாபா மாமி ரமா சுப்ரமண்யம்

Published:Updated:
வீர பிரம்மேந்திரர்
பிரீமியம் ஸ்டோரி
வீர பிரம்மேந்திரர்

த்ம புராணத்தில் சர்வேஸ்வரன், ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குச் சிவ கீதையைப் பற்றிக் கூறும்போது, ‘கர்ப உபநிஷத்’ என்று சொல்லக்கூடிய பிறப்பு ரகசியங்களைப் பற்றி எடுத்துரைத்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் இங்கோ வீரபிரமேந்திரர், கர்ப உபநிஷத்தில் சர்வேஸ்வரர் கூறியதைக் காட்டிலும் விரிவாக எடுத்துக்கூறத் திருவுளம் கொண்டார். அது நிறைவேறும் வண்ணம், அந்தத் தாய் ஆறு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையிடம் ‘பிண்டோபதி’ என்று சொல்லக்கூடிய பிண்ட உற்பத்தியைக் குறித்துக் கேட்டாள்.

தெய்வக் குழந்தையானது புன்முறுவல் பூத்தபடி இந்த உலகம் அனைத்துக்கும் விளங்கும் வண்ணம், மிக எளிமையாக எடுத்துரைக்கத் தொடங்கியது அந்த ரகசியத்தை.


“அன்னையே! மனிதர்கள் உண்ணும் உணவு, மூன்று வகையான வடிவங்களில் செயல்படத் தொடங்குகிறது. முதலில் உணவின் வடிவம் நமக்குத் தெரிகிறது. அது, ஸ்தூல வடிவில் நம் கண்களுக்குப் புலப்படும் ஒன்று. அடுத்து உணவை உண்ட பின், அதன் சுவை நமக்குப் புலப்படுகிறது. அது சூட்சும வடிவத்தில், நம் கண்களுக்குப் புலப்படாதது என்றாலும் உணரக்கூடிய ஒன்று. மூன்றாவதாக, உண்ட உணவின் மூலம் நமக்குக் கிடைக்கப் பெறும் சக்தி.

அதுவே அணுசக்தி என்று அழைக்கப்படுகிறது. உட்கொள்ளும் உணவு, திடப்பொருளாக இருந்தாலும் திரவப் பொருளாக இருந்தாலும், அந்த உணவே உடலுக்குச் சக்தியைத் தருகிறது; ஆத்மாவில் விருப்பத்தை ஏற்படுத்துகிறது. அவ்வாறு உட்கொள்ளும் உணவில் தேவைக்கும் அதிகமான சக்தி உருவாகும் நேரத்தில், பிண்ட உற்பத்தியில் பலவித மாற்றங்கள் நிகழ்கின்றன.

அந்த சக்தி ஆண் - பெண் இருவரில் எவருடைய உடலில் அதிகமாக இருக்கிறதோ, அதற்கேற்றவாறு குழந்தைகளின் பிறப்பும் அமைகிறது. ஒருவேளை, இவ்வகையில் சேரும் சக்தியின் அளவு சமமாக இருந்து விட்டால், கருப்பையில் உற்பத்தியாகும் பிண்டம், ஆண் பெண் இரண்டும் சேர்ந்த உருவைப் பெற்றுவிடுகிறது.

திருமணமான பெண், உயிரை உருவாக்கும் புனிதமான காரியத்தை வீட்டு விலக்காக இருக்கும் தருணத்தில் புரியக்கூடாது. அவள் வீட்டு விலக்காகி நான்கு நாள்கள் முடியும் வரை, உறுதியாகப் பொறுமை காக்க வேண்டும்.

பகற்பொழுது அல்லது பொழுது சாயும் மாலை நேரங் களில் யாரேனும் உறவில் ஈடுபட்டால், அப்போது உருவாகும் பிண்டத்தில் உயிர் பெற்றவர்கள், பெரும்பாலும் தம் வாழ்க்கையைத் தரித்திரத்தில் கழிப்பார்கள். கையேந்தி யாசகம் பெற்று உண்ணும் நிலையை அடை வார்கள். அவ்வாறு உயிர் பெற்றவர்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவும், பல்வேறு வியாதிகளுடனும், வேதனை தரக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.

வீரபிரமேந்திரர்
வீரபிரமேந்திரர்


பொதுவாகவே தம்பதியினர் பிண்ட உற்பத்தி காலத்தில் அமைதியாகவும், சாத்விக உணவுகளை மட்டுமே உண்டும், மகான்கள் மற்றும் தெய்வங் களை வழிபாடு செய்தும், அன்னதானம் முதலிய தர்ம காரியங்களைக் கடைப்பிடித்தும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சத்புத்திரர்களாகவும், குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்ற நற்குணங்கள் கொண்டும், அனைவரையும் வசீகரிக்கும் தோற்றத்துடனும், சகல ஐஸ்வர்யங் களுடன் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள்” என்ற சத்தியத்தை அறிவித்தார் சுவாமி.

இத்தகைய உண்மைகள், சுவாமி அறிவிக்கும் வரை ரகசியமாகவே ரிஷிகளால் காக்கப்பட்டு வந்தன. ஆனால் வருங்காலத்தில் மனித சமூகம் பல அபாயங்களைச் சந்திக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தன் ஞான திருஷ்டியால் உணர்ந்திருந்தார் சுவாமி. ஆகவே, நடக்க விருக்கும் விதியின் விளையாட்டைத் தவிர்க்க இயலாவிட்டாலும், தம்மால் இயன்ற வரை இவ்வுலக மக்களை ரட்சிப்பதற்காக, இத்தகைய ரகசியங்களை வெளிப்படுத்தி, இவற்றை எளிமையாக மனிதக் குலம் புரிந்துகொள்ளும் விதம் அறிவுறுத்தினார்.

அன்னையின் வயிற்றில் கரு உருவாகி, அதற்கு உடல் உறுப்புகள் வளர்வதற்கு முன்னரே, எண்ணங்களும் சிந்தனைகளும் தோன்றிவிடுகின்றன. அக்கருவின் விதியும், விதிப்பலன்களும் உடலின் உறுப்புகள் வளர்வதற்கு முன்னரே இறைவனால் நிச்சயிக் கப்பட்டு விடுகின்றன. அந்தப் பிண்டம் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து இறுதியில் மடியும் வரை நிகழும் அனைத்து நிகழ்வுகளும் அன்னையின் கருவிலேயே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன.

இவற்றை உணராமல், மாயை என்றும் இரும்புத் திரையால் சூழப்பட்ட மனிதர்கள், தாம் நிறைவேற்றும் தீர்மானங்களுக்குத் தம் அறிவுத் திறனே காரணம் என்று கர்வம் கொண்டுள்ளனர். நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே, ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்ட தீர்மானங்கள் ஆகும் என்ற சத்தியத்தை உணரத் தவறுகின்றனர். இதுவும் கர்மவினையின் விளைவே ஆகும்.

மிகச்சிறந்த குணமுடைய உயிர்கள், நமக்கும் இந்தச்சமூகத்திற்குத் தேவை என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் !

பிண்ட உற்பத்தி காலம் முதலாக, ஸ்வாமியால் அறிவுறுத் தப்பட்ட உபதேசங்களை முறையாகக் கடைப்பிடித்து வரும் தம்பதியினர், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளால் மிக உயர்வான நிலையை அடைவார்கள். பெற்றோர்களால் மட்டுமல்ல, உத்தம குணமுடைய குழந்தைகளாலும் இச்சமூகம் வருங்காலத்தில் உயர்வான நிலையை அடையும். இந்தக் காரணத்தால், இந்தச் சத்தியத்தைப் பகிரங்கமாக எல்லோருக்கும் அறிவித்தார் வீரபிரம்மேந்திர ஸ்வாமி.

மேலும், ஸ்வாமி அன்னை யிடம், “தாயே, பிண்ட உற்பத்திக்கு முன்னர், தம்பதியினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கூறினேன். இனி, உற்பத்தி செய்யப்பட்ட கரு வளரும் நிலைகளையும் கூறுகிறேன்’’ என்றவர், அதுகுறித்தும் விவரித்தார்.

``முதல் ஐந்து நாள்களுக்குக் கருமுட்டை நீர்க்குமிழியின் வடிவில் காணப்படும். பத்து நாள்களில் அவ்வடிவம் முட்டையைப் போன்ற தோற்றத்தைப் பெறும். ஒரு மாத காலத்தில் அது மேலும் இறுகி உறுதியான ஓட்டின் நிலையைப் பெறும். அதுதான் தலைப்பகுதி வெளிப்படும் தருணமாகும். தலைப்பகுதி உருவாகி இரண்டாவது மாதத்தில் கைகளும், கால்கள் உருவாகும்.

மூன்றாவது மாதத்தில் வயிற்றுப் பகுதி தெரியவரும். நான்காவது மாதத்தில் உடலின் மற்ற பாகங்களின் தோற்றம் வெளிப்படும். ஐந்தாவது மாதத்தில் பாதங்கள் உருவாகும். ஆறாவது மாதத்தில் மட்டுமே நவ துவாரங்கள் என்று சொல்லப்படும் கண்கள், காதுகள், மூக்கு மற்றும் ரகசிய பாகங்களின் துளைகளும் உயிர்ப்பெறும்.

உடம்பின் அனைத்துப் பாகங்களும் வெளிப்பட்ட பின்னர், ஏழாவது மாதத்தில் ஆத்மா கருவில் நுழைந்து நிலைபெறும். ஆத்மாவானது உடலில் நுழைந்தவுடன், அதனால் வெளிப்படும் வெப்பத்தைக் கருவால் தாங்க இயலாது. ஆகையால் இறைவன் ஏழாவது மாத்தில் ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கொண்டு கருவை மூடி உயிருடன் சேர்ந்த உடலைப் பாதுகாக்கிறார்.

எட்டாவது மாதம் முடிந்து ஒன்பதாவது மாதத்தில், கருவில் நுழைந்த ஆத்மா, தன் கடந்த கால கர்மவினையால், இப்பிறவியில் மீண்டும் உயிர்பெறுவதை உணர்ந்து கொள்ளும். அப்போதுதான் ஆத்மா வேதனையில் துடிதுடிக்கும்.

‘கடந்தகால வினைகளின் காரணமாக மீண்டும் கருவில் நுழைந்து பிறக்க நேர்ந்து விட்டதே... இதிலிருந்து நான் எப்படி மீண்டு வருவேன்?’ என்று அணுவணுவாய் அந்தக் கரு துடிக்கும். அக்காலத்தில்தான் அந்தக் கருவைச் சுமந்திருந்கும் தாயும் வலியால் மிகவும் வேதனை அடைவார்!

அதைக் கவனிக்கும் ஆத்மா, ‘நான் செய்த வினைப்பயனால் மீண்டும் ரத்தமும், சிறுநீரும், மலமும், என்னை இப்போது சூழ்ந்துகொண்டு வதைக்கின்றன. என்னால் என்னைச் சுமப்பவளும் வேதனையை அனுபவிக்கிறாள்.

ஹே பரமாத்மா! நான் இப்பிறவி யாலாவது நற்குணங்களுடன், பெற்றோருக்கும் இந்தச் சமுதாயத் திற்கும் ஒரு நல்ல குழந்தையாக இருக்கவேண்டும். தயைகூர்ந்து இந்த ஜன்மத்தில் நான் எவ்விதமான பாவச் செயலிலும் ஈடுபடாதவாறு என்னைக் காத்து ரட்சிப்பாயாக’ என்று வேதனையில் வருந்தி, இறைவனிடம் மன்றாடி வேண்டிக் கொள்ளும்.

ஒன்பது மாதங்கள் கடந்து பிரசவத்திற்கு சில நாள்கள் இருக்கும்போது, கொடூர இதயம் கொண்ட பெண்ணின் மனநிலையும் கூட, கருவிலிருக்கும் ஆத்மாவின் வேண்டுதலால் அன்பும் கருணையும் கொண்டதாக மாறிவிடும்.

ஆனால் அக்கரு குழந்தை வடிவில் இந்த உலகைக் காணும் நேரத்தில், அதுவரை பெற்ற ஞானம் அனைத்தையும் இழந்து பூர்வஜன்ம அறிவையும் இழந்து, ‘மாயா’ என்ற இரும்புத்திரையால் சூழப்பட்டு, அறியாமை எனும் இருளில் மூழ்கிவிடுகிறது.

அதனால்தான், கருப்பையிலிருந்து வெளியேறியவுடன், குழந்தைகள் வீறிட்டுக் கதறி அழுகின்றன. ‘இதுவரை பெற்ற ஞானத்தை இழந்து, இவ்வுலகின் பந்த பாசங்களினால் கட்டுண்டு, மீண்டும் நரக வாழ்க்கையை வாழப்போகிறேன்’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டு பரிதாபமாக அழத் தொடங்கும்.

இக்காட்சியைப் பார்ப்பவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள இயலாமல், ‘நம் குழந்தை உயிருடன் இருக்கிறது. அதன் அழுகையின் மூலம் இந்த உண்மையைப் புரிந்துகொண்டோம்’ என்று ஆனந்தமாக அனைவருக்கும் சுவை மிகுந்த உணவுப்பண்டங்களை அளித்து ஆடிப்பாடிக் கொண்டாடுகிறார்கள்!

இவ்வாறு ஞானத்தை மறந்த அந்தக் குழந்தையிடம், பூர்வ ஜன்ம நல்வினை இருக்குமானால், அது சிறப்பான விஷயம். அவன், வளர்ந்து வயதான நிலையை அடைவதற்குமுன், என்றாவது ஒரு நாள், ஒரு குருவின் கருணையால், முன்னர் இழந்த ஞானத்தைத் திரும்பப் பெற்று, மீண்டும் பிறவாத வரத்தைப் பெறுவான்.

பெற்றோர்கள் தம் குழந்தைகள் கருவில் உருவாகும் தருணத்தில், தர்மநெறியைக் கடைப்பிடித்து, பக்திமார்க்கத்தின் வழி நின்று, நற்சிந்தனை களையும் விதிமுறைகளையும் அனுசரிக்க வேண்டும். அவ்வகையில் பிறக்கும் குழந்தைகள் வருங்காலத்தில் அனைவராலும் போற்றப் படுவார்கள்!”

தெய்வக் குழந்தையின் ஞானமும் முதிர்ச்சி யும் வாக்கும் அந்தத் தாயையும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தின. குழந்தை தொடர்ந்து பேசலானது.

- தரிசிப்போம்...குழந்தைகள் கருவில் உருவாகும் தருணத்தில், பெற்றோர் தர்மநெறியைக் கடைப்பிடித்து, நற்சிந்தனை களையும் விதிமுறைகளையும் அனுசரிக்க வேண்டும்!

கங்கையும் தெய்வங்களும்!

பிள்ளையார்
பிள்ளையார்


கங்கை எனும் புண்ணிய நதிக்கு அனைத்துத் தெய்வங்களும் புனிதம் சேர்க்கின்றனர்.

திருவையாறு திருத்தலத்தில் பிள்ளையார் கங்கை விநாயகர் எனப் போற்றப்படுகிறார். பஞ்சரத காசியான இவ்வூரில், ஐயாறப்பர் சந்நிதியில் கங்கை விநாயகரை தரிசிக்கலாம்.

கங்கையின் மடியில் தோன்றியதால் முருகனுக்குக் காங்கேயன் எனும் திருப்பெயர் உண்டு. `கங்காநதி பாலக் கிருபாகரன் எனப் போற்று கிறார் அருணகிரியார்.

வீரபத்திரர் கங்கையின் காவலனாவார். உமாதேவி கங்கையின் சகோதரி. ஆகவே இருவரையும் இணைத்து கங்காகெளரி எனப் போற்றுவர்.

பெருமான் பால பைரவராக கங்கையில் மடியில் திகழ்ந்தார் என ஞானநூல்கள் சிறப்பிக்கின்றன.

- பி.சந்திரன், மதுரை-3