Published:Updated:

``நம்பியார் சாமி சொல்லிக்கொடுத்த ஐயப்ப விரத ரகசியங்களை உங்களுக்கும் சொல்றேன்" - வீரமணி ராஜூ

Veeramani Raju

``நம்முடைய கார், டூவீலர் இவை எல்லாம் பழுதானால், ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்து சரிசெய்ய விடுகிறோம். ஐயப்பன் எனும் மெக்கானிக், சபரிமலையில் நமக்காகக் காத்திருக்கிறார்" என்பார் நம்பியார்.

``நம்பியார் சாமி சொல்லிக்கொடுத்த ஐயப்ப விரத ரகசியங்களை உங்களுக்கும் சொல்றேன்" - வீரமணி ராஜூ

``நம்முடைய கார், டூவீலர் இவை எல்லாம் பழுதானால், ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்து சரிசெய்ய விடுகிறோம். ஐயப்பன் எனும் மெக்கானிக், சபரிமலையில் நமக்காகக் காத்திருக்கிறார்" என்பார் நம்பியார்.

Published:Updated:
Veeramani Raju

ஐயப்பன் பக்திப் பாடகர் வீரமணி ராஜூ, நம்பியார் சாமியுடன் பல முறை சபரிமலைக்குச் சென்றுவந்தவர். நம்பியார் சாமி கூறிய விரத மகிமைகள் பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.

Veeramani Raju
Veeramani Raju

``சுவாமியே சரணம் ஐயப்பா!

கார்த்திகை மாதம் வந்தாலே, எல்லோரின் நினைவுக்கும் வருவது சுவாமி ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலைக்குச் செல்வதுதான். அவ்வாறு மலைக்குச் செல்லும்போது, தமிழகத்திலிருந்து சபரிமலை யாத்திரைக்குச் செல்லும் அனுபவம் மிக்க பெரிய குருசாமிகள் பலருடனும் பழகி, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறியக்கூடிய அற்புதமான வாய்ப்பு ஐயப்பனின் அருளால் எனக்குக் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த விதத்தில், திரை உலகில் புகழ்பெற்று விளங்கிய நம்பியார் மிகப்பெரிய ஐயப்ப பக்தர். மூத்த குருசாமியான நம்பியாருடன் ஐந்தாறு முறை சபரிமலைக்குச் செல்லும் அரிய வாய்ப்பை அடியேன் பெற்றேன். அப்போது அவர்கள், சபரிமலை விரதம் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் எனக்குச் சொன்ன விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன்.

Veeramani Raju
Veeramani Raju

`நிறைய பேர், நான் சபரிமலைக்கு மாலை போட்டிருக்கேன், ஐயப்பனுக்கு மாலை போட்டிருக்கேன்'னு சொல்லுவாங்க. ஆனா, `ஐயப்பனுக்கெல்லாம் நீ மாலைபோடலை. உனக்குத்தான் நீ மாலை போட்டிருக்க. ஐயப்பன் எப்பவோ மாலை போட்டுக்கிட்டார். ஐயப்பனுக்கு மாலை போடுவதற்கு நாம் யார்? மாலை போட்டுக்கிட்டு வருகிற ஒவ்வொருவருக்காகவும் ஐயப்பன் ஒரு மண்டல காலம் விரதம் இருந்து காத்துக்கிட்டிருக்கான்'னு சொல்லுவார் நம்பியார் சாமி'. அது உண்மைதானே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`ஒருவர் மாலை அணிகிறார் என்றாலே, ஐயப்பனின் அருள் ஆசி இல்லாமல் மாலையை அணிய முடியாது என்பது நம்பியார் சாமிகளின் கருத்து.

நம்பியார்
நம்பியார்

`எவ்வளவோ பேர் பணம் காசு நிறைய வைச்சிருப்பாங்க. அவங்க சபரிமலைக்குப் போக ஆசையும் படுவாங்க. ஆனால், அவங்களால போக முடியாது. என்னுடைய பணக்கார நண்பர்கள் பலரும், `உனக்கென்னப்பா நீ நினைச்சா சபரிமலைக்குப் போற. எங்களால் போக முடியலையே'னு சொல்லுவாங்க. பணம், காசு இருக்கிறதால மட்டும் ஒருத்தர் சபரிமலைக்கு மாலை அணிந்து போய்விட முடியாது. ஐயப்பனிடமிருந்து உத்தரவு வராமல், யாராலும் சபரிமலைக்குப் போக முடியாது. உண்மையில், கடன் வாங்கிக்கொண்டு சபரிமலைக்குச் செல்பவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள்' என்பார் நம்பியார் சாமிகள்.

மேலும், `ஐயப்பன் வேறு எங்கோ இருக்கும் தெய்வம் இல்லை. உன்னோடு உன் வீட்டிலே இருக்கும் தெய்வம். சுத்தமாக விரதம் இருந்து பதினெட்டாம்படியை ஒருவன் மிதித்துவிட்டால், அதன் பிறகு அவன் வாழ்க்கையில் இறங்குமுகமே கிடையாது. எல்லாமே ஏறுமுகம்தான்.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

நம்முடைய கார், டூவீலர் இவை எல்லாம் பழுதானால், ஒரு மெக்கானிக்கிடம் கொடுத்து சரிசெய்ய விடுகிறோம். ஐயப்பன் எனும் மெக்கானிக், சபரிமலையில் நமக்காகக் காத்திருக்கிறார். அவருக்காக 41 நாள்கள் விரதம் இருந்து அவரைத் தரிசித்தால், நம் உடம்பு என்னும் வாகனத்தை எந்தவிதப் பழுதும் இல்லாமல் சீராக்கி, நம்மிடமே நமக்குத் தருவார்' என்று கூறுவார் நம்பியார்.

``சபரிமலைக்கு ஒருமுறை வந்து போனால், அடுத்த ஆண்டுவரை உனக்கு எந்தவித நோயும் வராது. அதேபோல, அடுத்த ஆண்டும் நீ மாலை அணிந்து, வண்டி எப்ஃசிக்கு வருவதுபோல் வரவேண்டும் என்பதே அதன் அர்த்தம்.

அவர் சொல்லும்போது, இது ஐயப்பனுக்காக இருக்கக்கூடிய விரதம் இல்லை. காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, இரண்டு வேளை உணவு மட்டுமே உண்டு, சதா சர்வகாலமும் மனத்தையும் உடலையும் ஐயப்பனின் மேல் வைத்து விரதம் இருப்பது ஐயப்பனுக்காக அல்ல. அது நமக்கு நாமே போட்டுக்கொள்கிற கவசம் என்பது அவரின் கருத்து.

மேலும், `காவி நிற வேஷ்டியோ கறுப்பு நிற வேஷ்டியோ அணிந்து கொண்டு நெற்றி நிறைய சந்தனத்தையும் மாலையும் அணிந்து கொள்வது மட்டும் விரதத்தின் நோக்கமல்ல. மனத்தில் சதா சர்வகாலமும் ஐயப்பனை இருத்தச் செய்வதுதான் சுத்தமான விரதமாகும். அப்படி சுத்தமான விரதம் இருப்பவர்களுக்கு அள்ளிக்கொடுக்கிற கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் சபரிமலை சாஸ்தா' என்று அவர் சொல்லுகிறபோதெல்லாம், அவர் கண்கள் கசிந்திருக்கும். கேட்கும் நமக்கும் மெய்சிலிர்க்கும்.

Veeramani Raju
Veeramani Raju

சபரிமலை விரதம் எத்தனை நாள்கள் இருக்க வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் வருகிறது. எனக்கும் வந்தது. அதையும் நான் நம்பியார் சாமியிடமே கேட்டிருக்கிறேன். அதற்கு, `இதில் சந்தேகமே தேவையில்லை. 41 நாள்கள் இருந்தாலே அது ஒரு மண்டல விரதம்தான். அதன் பிறகு நீங்கள் கோயிலுக்குச் சென்று, 48 நாள் வரை பூர்த்திசெய்வது உங்களின் விருப்பம். ஆனால், 41 நாள்களுக்குக் குறையாமல் விரதம் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம்.

பக்தர்களில் சிலர் பம்பையில் மாலை கழட்டுவது, பழநியில் மாலை கழட்டுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால், அவ்வாறு செய்யக்கூடாது என்று நம்பியார் சாமி கூறுவார். `எந்தக் கோயிலில் மாலை அணிந்து புறப்பட்டோமோ அந்தக் கோயிலுக்கு வந்துதான் மாலையைக் கழற்ற வேண்டும். முன்னதாக, அன்றைய தினம் ஐயப்பனுக்கு விரதமிருந்து அமுது படைத்து, ஐயப்பனை மலை ஏற்றிவிட்ட பிறகுதான் மாலையைக் கழற்ற வேண்டும்' என்றும் சொல்லித்தந்திருக்கிறார்.

Veeramani Raju
Veeramani Raju

நம்பியார் சாமிகள் எனக்குச் சொல்லித்தந்த இத்தகைய விரத ரகசியங்களை நான் எல்லா ஐயப்பன்மார்களுக்கும் சொல்கிறேன்" என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism