‘முருகா’ என்று நினைத்தாலே போதும்; முருகனுக்கு முந்தி வந்து அருள்புரியும் அவனது ‘கைவேல்’. ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி ஆகிய முச்சக்திகளின் சங்கமமாக விளங்குகிறது வேல். இந்த மூன்று சக்திகளையும் ஒருங்கே கொண்ட வேலின் அருளைப்பெற நமக்கு வாய்த்திருக்கும் எளிய வழிபாடே ‘வேல்மாறல் பாராயணம்’.

வேல்மாறல் பாராயணத்தின் மகத்துவத்தை `சக்தி விகடன்' வாசகர்களும் பெற வேண்டும் எனும் நோக்கில் திருப்பூர் அருகில் உள்ள கொங்கணகிரி முருகன் கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி ‘வேல்மாறல் பாராயணம்’ நடைபெற்றது.
.வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்! .
காலை 9 மணியிலிருந்தே திருப்பூர், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சக்தி விகடன் வாசகர்களும் முருக பக்தர்களும் கூடத்தொடங்கினார்கள். வேல்மாறல் பூஜைக்கான ஏற்பாடுகளைத் திருப்பூர் குன்றுதோறாடல் கூட்டு வழிபாட்டுக் குழுவினர் சிறப்பாக செய்து வைத்திருந்தார்கள்.

கொங்கணகிரி முருகனுக்கும் வேலுக்கும் ஷோடக அபிஷேகத்துடன் தொடங்கியது வழிபாட்டு வைபவம். வாசகர்களும் பக்தர்களும் பக்திப் பரவசத்துடன் அபிஷேகத்தைக் கண்டு மெய்சிலிர்த்தார்கள்.

தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சூழ திருப்புகழ் அமுதன் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் மற்றும் பவ்யா ஹரி சங்கர் வேல்மாறல் பாராயணத்தை வெகு சிறப்பாக நடத்திவைத்தனர். நேரில் வரமுடியாத பக்தர்கள் தங்களது நட்சத்திரம், ராசி மற்றும் வேண்டுதல்களைத் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலம் நம்முடன் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்காகவும் சிறப்புச் சங்கல்பம் செய்யப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட சக்தி விகடனின் வாசகியான திருப்பூரைச் சேர்ந்த ஶ்ரீதேவி, “சக்தி விகடன் மூலம் வேல்மாறல் பாராயணத்தின் மகத்துவத்தை அறிந்து, தினமும் எங்கள் வீட்டில் பூஜையறையில் வேல் வைத்து, எனக்குத் தெரிந்த அளவுக்குத் தினமும் வேல்மாறல் பாராயணம் செய்து வந்தேன். இந்த வைபவத்தின் மூலம் வேல்மாறல் பாராயண வழிபாட்டின் முழு தாத்பரியத்தையும் அறிந்துகொண்டேன். சக்தி விகடனுக்கு நன்றி.

வேல்மாறல் பாராயணம் செய்வதால் எப்போதும் என்னுடன் வேலாயுதம் காவலாய் இருப்பதுபோன்று ஓர் உணர்வு. மனத்தில் ஒரு தெளிவும் நம்பிக்கையும். எங்கள் குடும்பக் கவலைகள் இனி விலகும் என்று திடமான நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது'' என்றார் சிலிர்ப்புடன்.

சென்னை வாசகர் சங்கரும் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்: “நீண்ட நாள்களாகவே சக்தி விகடனில் வேல்மாறல் பாராயணம் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்திருந்தேன். அறிவிப்பைக் கண்டதும் முன்பதிவு செய்து கொங்கணகிரிக்கு வந்துவிட்டேன்.

திருமண வயதைக் கடந்த பிறகும் என் மகனுக்கு இன்னும் வரன் கிட்டவில்லை. குடும்பத்தில் யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டுவிடுகிறார்கள். துன்பம் வாட்டி வதைக்கிறது. இந்தப் பிரச்னைகள் யாவும் கந்தன் அருளால் விலகவேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டேன். இனி, தினமும் வீட்டில் வாரம் ஒரு நாள் எல்லோருடனும் சேர்ந்து வேல்மாறல் பாராயணம் செய்யலாம் என்றிருக்கிறேன். முருகனின் அருளால் அனைத்தும் விலகி ஓடும் என்று நம்புகிறேன்” என்றார்.

இவர்கள் மட்டுமல்ல, இந்த வைபவத்தில் கலந்துகொண்ட அனைவரின் முகங்களிலும் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் நம்மால் காண முடிந்தது. அவர்களது இந்த மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகவும் வாழ்க்கை செழிக்கவும் கொங்கணகிரி முருகன் நிச்சயம் அருள்பாலிப்பார்.