Published:Updated:

மூன்று தலைமுறைகளாக வற்றாத புனித நீரூற்று கொண்ட ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயச் சிறப்புகள்!

ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தொட்டில் கட்டி, வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மூன்று தலைமுறைகளாக வற்றாத புனித நீரூற்று கொண்ட ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயச் சிறப்புகள்!

குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டி தொட்டில் கட்டி, வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும்.

Published:Updated:
ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

வேலூர் மாவட்டம், மேல்வல்லம் கிராமத்தில் பல தலைமுறைகளைக் கண்ட திருத்தலமாக விளங்குகிறது ஸ்ரீ ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் ஆலயம்.

புனித நீர் ஊற்று
புனித நீர் ஊற்று

இலகிய மலையின் மேல் அமைந்துள்ள அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் சிவபெருமான் கால்பதித்து லிங்கமாகக் காட்சி அருள்பாலிக்கிறார். பஞ்சத்தால் வாடிய மக்களுக்குப் படியளந்து விட்டு பார்வதியும் பரமசிவனும் சென்றபோது ஓய்வெடுக்க இம்மலையில் கால் பதித்த பொழுது மலை அதிர்ந்ததால் இலகிய மலை எனப் பெயர் பெற்றது.

இந்தத் திருத்தலத்தில் சந்நிதிக்கு வடக்குப் புறமாக புனித நீரூற்று ஒன்று உள்ளது. பல தலைமுறைகளாக வற்றாமல் மக்களுக்கும், அனைத்து ஜீவராசிகளுக்கும் தாகம் தீர்த்துத் தன்னிகரற்று விளங்குகிறாள் ஜலகண்ட ஈஸ்வரி அம்மன். உலக்கைச் சத்தம் கேட்காத அம்மனாகவும் 13 மலைகளின் உச்சிகள் ஒன்றுசேர தரிசனம் தரும் தேவியாகவும் அம்மன் விளங்குகிறாள். இந்த ஆலயத்திற்கு நாடி வரும் மக்களுக்கு எண்ணிலடங்கா நன்மைகள் புரிந்துவருகிறாள் இந்த அம்மன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் கோயில்
ஜலகண்ட ஈஸ்வரி அம்மன் கோயில்

திருமணமாகி வெகு நாள்களாகியும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்கள் இத்திருத்தலத்திற்கு வந்து அம்மனை மனமுருக வேண்டித் தொட்டில் கட்டி வழிபட சில மாதங்களிலேயே குழந்தை பாக்கியம் உண்டாகும். இந்த ஆலயத்தைப் பற்றியும் புனித நீரூற்று பற்றியும் இங்கு இருக்கும் பெரியவர்களிடம் கேட்டபோது, "அம்மனோட சந்நிதிக்கு வந்து மனமுருக வேண்டிட்டுப் போனா நமக்கு இருக்கும் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி, குடும்பம் செழிக்கும். எங்களுக்கு நினைவு தெரிஞ்சு, இந்தப் புனித நீர் ஊற்று வற்றியதே கிடையாது‌ இந்தப் புனித நீரை நாம் பருகலாம். பூஜை அறையில் வைத்தும் பூஜை செய்யலாம்" என்கிறார்கள்.

ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்
ஜலகண்ட ஈஸ்வரி அம்மன்

மேலும், இந்தக் கோயில் அமைந்திருக்கும் மலை, வனத்துறைக் கட்டுப்பாட்டில் இருப்பதால் உடனடியாக இந்து சமய அறநிலையத் துறை தலையிட்டு சாலை வசதியும், மின் விளக்கு வசதியும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

இந்த அம்மன் கோயிலுக்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கீழ்க்காணும் எண்ணை அழைக்கலாம். வேலூரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

தொடர்புக்கு - திரு. சிவா, 96264 56925.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism