Published:Updated:

பொன்னியின் செல்வன் பயணம்-5: ராஜ ராஜ சோழனை மட்டும் ஏன் அதிகம் கொண்டாடுகிறோம் அறிந்துகொள்ள வாருங்கள்!

பொன்னியின் செல்வன்

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை விகடன் பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

பொன்னியின் செல்வன் பயணம்-5: ராஜ ராஜ சோழனை மட்டும் ஏன் அதிகம் கொண்டாடுகிறோம் அறிந்துகொள்ள வாருங்கள்!

4 முறை பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணத்தை விகடன் பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது

Published:Updated:
பொன்னியின் செல்வன்

3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற பொன்னியின் செல்வன் பயணத்தை விகடன் தொடங்கியது. 4 முறை வெற்றிகரமாக தனது வாசகர்களோடு பயணித்து இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்

வரலாற்றில் அதிகமாக ராஜராஜனை மட்டுமே ஏன் கொண்டாடுகிறோம், இந்த கேள்வி உங்களில் அதிகம் எழுந்து இருக்கலாம். இதற்கு ஒரே பதில் அவனுடைய சாதனைகள் மட்டுமே எனலாம். தமிழர்கள் ஒவ்வொருவரும் எண்ணி எண்ணி வியக்கும் அவனுடைய சாதனைகளுக்கு கட்டியம் கூறிக் கொண்டே இருக்கிறது ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த தஞ்சை பெரிய கோயில். அதுமட்டும் தானா...இல்லை இல்லை என்று தகவல்கள் குவிந்து கொண்டே வருகின்றன.

ராஜராஜன்
ராஜராஜன்
ம.அரவிந்த்

ராஜராஜன் (கி. பி 985 – கி. பி 1014) தமிழக வரலாற்றில் மிக மிக முக்கியமான பேரரசனின் திருப்பெயர். அறிவுத் தெளிவும், நிர்வாகத் திறமையும், போர் அனுபவம் பெற்றிருந்த அருண்மொழிவர்மன் என்கிற ராஜராஜனின் ஆட்சிக்காலம் சோழர் வரலாற்றில் புதிய பரிமாணங்களுடன் பிரகாசித்தது. பிற்கால சோழர்களின் நீடித்த ஆட்சிக்கு அடித்தளமிட்ட விஜயாலயச் சோழர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆட்சி புரிந்தார். அந்த ஆட்சியை கடல் கடந்தும் பரவச் செய்து சோழர்களின் ஆட்சிக்கு நிலைத்தன்மையை கொடுத்தவர் ராஜராஜனே. அரசாங்க அமைப்பு, நிதி நிர்வாகம், படை அமைப்புகள் வழியாக வலிமைமிக்கப் பேரரசை உருவாக்கிய பெருமை ராஜராஜனையேச் சேரும்.

ராஜராஜனது ஆட்சியில் கட்டடக்கலை, ஓவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் போன்ற அனைத்துக் கலைகளும் சிறந்து வீங்கின. இவன் காலத்திலேயே தேவாரத் திருமுறைகள் நாடு முழுவதும் திரட்டப்பட்டு அவை வேகமாகப் பரவின. வேளாண்மை விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, நீர் ஆதாரங்களை வளப்படுத்துவது, வாணிப வளர்ச்சி போன்ற பல சமூகப் பணிகள் விரைவாக நடைபெற்றன. கிராம அளவில் கூட ஜனநாயக முறைப்படி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டதால் குற்றங்கள் குறைந்தன. நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் பெருகியது. இவன் காலத்தில் வடக்கே கிருஷ்ணா நதி, மேற்கே அரபிக்கடல் வரை, தெற்கே இலங்கை, மாலத்தீவுகள் வரை சோழர் ஆட்சி பரவியது.

கல்வெட்டுக்களில் மெய்க்கீர்த்தி எனும் வரலாறு எழுதும் வழக்கம் இவர் காலத்தில் இருந்துதான் தொடங்கப்பட்டது. சமயங்களுக்கிடையே வேறுபாடு இன்றி அனைத்து சமயங்களும் மதிக்கப்பட்டு வந்தது. சுமத்திராவின் மன்னர் சைலேந்திரர் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரம் கட்டிக் கொள்வதற்கு அனுமதித்து, அதற்கு தேவையான நிதி உள்ளிட்ட முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். சமூக நீதியிலும் இவனது ஆட்சி சிறந்து விளங்கியது. மன்னருக்கு முன்பு ஆடல் மகளிர் ஆடுவது வழக்கம். ஆனால் ராஜராஜன் மக்கள் முன்னிலையில் தனது மகளையே ஆடப்பணிக்கும் அளவுக்கு எளியவனாகவும் பரந்த சிந்தனையோடும் இருந்தான் என வரலாறு சொல்கிறது.

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

இத்தகைய பெருமைகள் பல கொண்ட ராஜராஜனின் புகழ் பேசும் காவியமாக எழுந்ததே பொன்னியின் செல்வன் எனும் புதினம். ராஜராஜனின் வீரத்தையும் தியாகத்தையும் வந்தியத்தேவனின் வழியே விவரித்த அந்த புதினம் தமிழுக்கு அப்போது புதுமையானது என்று வரலாற்று அறிஞர்கள் இன்றும் சிலிர்க்கிறார்கள். பொன்னியின் செல்வன் புதினத்தில் கதை மாந்தர்களுக்கு எத்தனை புகழ் உள்ளதோ, அதே அளவுக்கு கதை நடைபெற்ற இடங்களைக் காண்பதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கு ஒரு ஈர்ப்பும் ஆவலும் இருந்தே வருகிறது.

வீராணம் ஏரி தொடங்கி, காட்டுமன்னார்கோவில் பெருமாள் கோயில், அனந்தேஸ்வரர் கோயில், மேலக் கடம்பூர், கீழக்கடம்பூர் கோயில்கள், பழையாறை கைலாசநாதர் கோயில், ராஜராஜனின் பள்ளிப்படை, நந்திபுர விண்ணகரம், சோமநாதேஸ்வரர் கோயில், பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை, திருப்புறம்பியம் பள்ளிப்படைகள், தஞ்சை பெரிய கோயில், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் என பொன்னியின் செல்வனில் வரும் இடங்கள் தமிழர்கள் வாழ்வில் மறக்க முடியாத சரித்திர சாட்சிகளாக விளங்கி வருகின்றன. இந்த இடங்களை ஒரு புனிதப் பயணம் போல சென்றுவர இன்றும் பலரும் விருப்பம் கொண்டுள்ளார்கள். இவர்களின் விருப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும், உண்மையான வரலாற்றை உரிய ஆய்வாளர்கள் கொண்டு சொல்லவும் உங்கள் விகடன் குழுமம் விரும்பியது. அதன் விளைவாக 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்தியத்தேவன் வழியில் வரலாற்றுப் பயணம் என்ற சிறப்புமிக்க வரலாற்றுப் பயணத்தைக் தொடங்கியது. 4 முறைகள் வெற்றிகரமாக நூற்றுக்கும் மேற்பட்ட வாசகர்களோடு பயணித்து சிறப்பும் கொண்டது. இப்போது 5-ம் முறையாக வரும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

வரலாற்றுப் பயணம்
வரலாற்றுப் பயணம்

3 பகல், 2 இரவுகள் என நடக்கவிருக்கும் இந்தப் பயணத்தில் சோழர்கள் உலாவிய இடங்களில் தகுந்த வரலாற்று ஆய்வாளர்களோடு பயணித்து சோழர்களின் பெருமைகளை அறிந்துகொள்ள இருக்கிறோம். அதோடு அற்புதமான கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்யமிக்க கலை அழகு கொண்ட தங்கும் விடுதிகள், அறுசுவை உணவு வசதி, சிறப்புப் பரிசுகள் என அனைத்து அம்சங்களோடும் திகழும் சரித்திர யாத்திரை இது.

ஏற்கெனவே 4 முறை வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த யாத்திரை தற்போது மீண்டும் அக்டோபர் 8,9,10 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.

பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்
பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பயணம்

நிகழ்ச்சி விவரங்கள்:

அக்டோபர் 8 (சனிக்கிழமை) - அதிகாலை 5.30 மணிக்கு சென்னை விகடன் அலுவலகத்தில் இருந்து சொகுசுப் பேருந்துப் பயணம். மதியம் 3 மணிக்கு மேல் வீராணம் ஏரி, காட்டுமன்னார்கோவிலில் உள்ள கல்வெட்டுகள், பெருமைகள், மேலைக் கடம்பூர், கீழைக்கடம்பூர் கோயில்கள்...

இரவு தங்கல் - லக்ஷ்மி விலாஸ் காட்டேஜ் (காட்டுமன்னார்கோவில் அருகே) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 9 (ஞாயிறு) - பழையாறை கோயில்கள், கல்வெட்டுகள், திருப்புறம்பியம், கலை நிகழ்வுகள்.

இரவு தங்கல் - இண்டிகோ ஹெரிடேஜ் காட்டேஜ் (சுவாமி மலை அருகில்) + சிறப்பு கலை நிகழ்ச்சிகள்.

அக்டோபர் 10 (திங்கள்) - தஞ்சைக் கோயில், கல்வெட்டுகள், கோடியக்கரை கடற்கரை, குழகர் கோயில் + கலை நிகழ்வுகள்.

இரவு சென்னை திரும்பல்...

அக்டோபர் 11 - அதிகாலை 6 மணிக்கு சென்னை அடைதல்.

குறிப்பு: நேரம் பொறுத்து பார்க்கும் இடங்களும் சற்றே மாறலாம்.

திருப்புறம்பியம்
திருப்புறம்பியம்

எவ்வளவு கட்டணம்?

நபர் ஒருவருக்கு சிறப்பு சலுகைக் கட்டணம் ரூபாய் 18,000 (ஜி.எஸ்.டி. உள்பட).

வீராணம் ஏரியும், காட்டுமன்னார்கோவில் கல்வெட்டுகளும், கடம்பூர் ரகசியங்களும், பழையாறைப் பெருமைகளும், தஞ்சை பெரியகோயில் பிரமாண்டமும், கோடியக்கரை கடற்கரையும், குழகர் கோயில் அற்புதங்களும் ஆயிரம் ஆயிரம் கதைகளைச் சொல்ல உங்களுக்காகக் காத்திருக்கின்றன. வாருங்கள், விகடன் நடத்தும் வந்தியத்தேவனின் வழியில் வரலாற்றுப் பயணம் நிகழ்வில் கலந்துகொள்ளுங்கள்!

முன்பதிவு விவரங்களுக்கு 97909 90404

முன்பதிவுக்கு கிளிக் செய்யவும்.