Published:Updated:

புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் அருள் செய்தார்!

வி.ஐ.பி. ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி. ஆன்மிகம்

வி.ஐ.பி. ஆன்மிகம்

புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் அருள் செய்தார்!

வி.ஐ.பி. ஆன்மிகம்

Published:Updated:
வி.ஐ.பி. ஆன்மிகம்
பிரீமியம் ஸ்டோரி
வி.ஐ.பி. ஆன்மிகம்

``என்னைப் பொறுத்தவரையிலும் நம்பிக்கைதான் கடவுள். நம்மை மிஞ்சின ஒரு சக்தி இருக்கு. அந்தச் சக்தியை நான் ரொம்பவே நம்புறேன். நல்லது நினைக்கவேண்டும்... நல்லதையே சொல்ல வேண்டும்... நல்லன செய்யவேண்டும்... அப்போது எல்லாமே நல்லதாகவே நடக்கும்.

அதேபோல், எப்போதும் பாசிட்டிவான சிந்தனை நம்மகிட்ட இருக்கணும். இமயமலை அளவிற்கு பெரியதாக நினைத்தால் அதில் கொஞ்சமாவது நம் வாழ்க்கையில் நடக்கும்’’ தத்துவார்த்தமாகவும் நம்பிக்கையோடும் பேசுகிறார் சுஜாதாபாபு.

செய்தி வாசிப்பாளராக நம்மிடையே பரிச்சயமானவர், சுஜாதா பாபு. தற்போது, திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். வீட்டுப் பூஜையறை பொக்கிஷங்கள் முதல் பிடித்த ஆலயங்கள் வரை ஆன்மிக அனுபவங்களை சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார்...

``காலையில் எழுந்ததும் குளிச்சிமுடிச்சி விளக்கேற்றி சாமி கும்பிட்டால்தான் என் மனசு அந்த நாள் முழுக்க நிம்மதியா இருக்கும். எனக்கு தசாங்க வாசனை ரொம்பப் பிடிக்கும். அந்த வாசனை நம் கோபத்தைக் குறைத்து நம்மை சாத்விக மன நிலையில் வைத்திருக்கும். தினமும் பூஜையறையைத் துடைத்து, சின்னதா கோலம் போட்டு, தசாங்கம் ஏற்றுவேன். மனதார சாமி கும்பிடுவேன். அவ்ளோதான்... அந்த நாள் முழுக்க மனசு நிறைவா இருக்கும்.

சுஜாதா பாபு
சுஜாதா பாபு


எனக்கு நிறைய பரிசுப் பொருள்கள் வரும். அவற்றில் பெரும்பாலும் தெய்வச் சிலைகள் படங்கள்தான். என் கணவருக்குப் பல ஊர்களுக்கு டிரான்ஸ்பர் போடுவாங்க. அதனால ஒவ்வோர் ஊரிலிருந்தும் ஏதேனும் தனித்துவமான பூஜையறை பொருள்களை வாங்கிட்டு வருவார். அப்படித்தான் `கேங்டாக்’ போயிருந்தப்ப, வித்தியாசமான தோரணம் வாங்கிட்டு வந்திருந்தார். அதேபோல், ஒடிசாவிலிருந்து தேங்காயில் செய்யப்பட்ட பூரி ஜகந்நாதர் சிலை வாங்கிட்டு வந்தார்.

எனக்குப் பிள்ளையாருன்னா பிடிக்கும். சந்தனம், ரோஸ்வுட், கல்லால் ஆன பிள்ளையார் என விதவிதமா நிறைய பிள்ளையார்கள் எங்க வீட்டில் இருக்காங்க. நாங்க வீடு கிரகப்பிரவேசம் பண்ணும் போது, வீட்டில் காமதேனு சிலை இருந்தா நல்லா இருக்குமேன்னு ஆசைப்பட்டோம். என் கணவரோட நண்பர்கள் காமதேனு சிலையை கிஃப்ட் பண்ணினாங்க. காமதேனுவும் எங்கள் வீட்டுப் பூஜையறையில் தரிசனம் தருகிறாள்.

என் மகன் அவன் சம்பளத்தில் என் பிறந்தநாளுக்கு வெள்ளி விளக்கு பரிசு கொடுத்தான். அதை அணையா விளக்காகப் பயன்படுத்தணும்னு நினைச்சேன். அதனால, ஒரு கூண்டுக்குள்ளே அந்த விளக்கை வைச்சு வழிபடுகிறோம். நான் ஷூட்டிங் போகிற நாள்களிலும் அந்த விளக்கை அணையாம பார்த்துக்கும்படி வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்வேன். அந்த அளவுக்கு அணையா விளக்கு எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்!’’

பூஜையறைப் பொக்கிஷங்கள் குறித்து பேசியவர், `எங்க வீட்டிலேயே வாழைமரம், வெற்றிலைக் கொடி, தேங்காய், பூ என சாமி பூஜைக்கு - அர்ச்சனைக்குத் தேவையான எல்லாமும் இருக்கு. நானே என் கையால பூக்களைப் பறிச்சு, கோயிலுக்குக் கொண்டு போவேன். பூ கட்டுறதே ஒரு யோகா மாதிரிதான். மனசுல சாமியை நினைச்சிக்கிட்டு, சாமிக்காக பூ கட்டிக்கொண்டு போய் சாமிக்குச் சாத்தி வழிபடும்போது கிடைக்கிற திருப்தியும் நிறைவும் இருக்கே... ஆஹா... மனசு முழுக்க பரவசமா இருக்கும்!’’

புதுப்பாக்கம் ஆஞ்சநேயர்
புதுப்பாக்கம் ஆஞ்சநேயர்


``எனக்குப் பிடிச்ச பிள்ளையார் கோயில் எங்க வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கு. எவ்ளோ பிசியா இருந்தாலும் நேரம் ஒதுக்கி அந்தப் பிள்ளையாரை தரிசிக்க தவறாம போய்டுவேன். ராஜ அலங்காரம், பூ அலங்காரம்னு விதவிதமான கோலத்தில் இருக்கும் அந்தப் பிள்ளையாரை நாள்முழுதும் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாம்.

அதேபோல், புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் எனக்கு ரொம்ப ஃபேவரைட். அவர் சந்நிதிக்குப் போய் அந்த ஆஞ்சநேயரை மனதார வேண்டிக்கிட்டு தேங்காய் கட்டிவிட்டு வந்தால், விரைவில் வேண்டுதல் பலிச்சுடும். ரொம்ப வரப்பிரசாதி அந்த ஆஞ்சநேயர்.

அப்படித்தான்... `ஓ மை கடவுளே’ படத்தில் நடிச்சேன். அதன் பிறகு கொரொனா லாக்டவுன். சீக்கிரமா நல்ல வாய்ப்புகள் தேடி வரணும்னு அந்த ஆஞ்சநேயரை வேண்டிக்கிட்டு, தேங்காய் கட்டிட்டு வரலாம்னு தீர்மானிச்சேன். நான் வேண்டிகிட்ட மாதிரியே, ஒரு மிகப்பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு.

தாம்பரம் சானிடோரியம் பக்கத்தில் சிவா- விஷ்ணு கோயில் இருக்கு. அங்கேயும் தேங்காய் கட்டி வழிபட்டால் நாம் வேண்டியது வேண்டியபடி நடக்கும். எனக்கும் நடந்திருக்கு!’’ என்று சிலிர்ப்புடன் கூறுகிறார் சுஜாதா பாபு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism