Published:Updated:

`இவனும் புறகு; சிவனும் புறகு’ - விறன்மிண்ட நாயனாரின் அடியார் பக்தி!

சிவனும் தைப்பொங்கலும்
சிவனும் தைப்பொங்கலும்

அடியார் திருக்கூட்டத்துக்கு முதல் வணக்கம் செலுத்தியபிறகே கோயிலுக்குள் இறையைக் கண்டு வணங்குதலை வழக்கமாகக் கொண்டிருந்தவர் விறன்மிண்டர்; பெருமை நிறைந்தவர்.

டியார்கள், இறையருளின் தன்மையை உலகுக்கே எடுத்துக்காட்டுகிற சிறப்பு பொருந்தியவர்கள். அப்பேர்பட்ட அடியார் திருக்கூட்டத்துக்கு முதல் வணக்கம் செலுத்தியபிறகே கோயிலுக்குள் இறையைக் கண்டு வணங்குதலை வழக்கமாகக் கொண்டிருந்தவர் விறன்மிண்டர். பெருமை நிறைந்தவர் என்பது இந்தத் திருநாமத்தின் பொருள்.

சிவன்
சிவன்

விறன்மிண்டர் சேரநாட்டுச் செங்குன்றத்தூரில் பிறந்தவர். செங்குன்றம் என்பது தற்போது திருச்செங்கோடு என்ற பெயரில் விளங்குகிற அர்த்தநாரீஸ்வரர் திருத்தலம் அமைந்த ஊர்தான். சிவன்பால் பெரும் பக்தியும், சிவனடியார்கள்பால் பேரன்பும் மிகுதியாய்க் கொண்டவர் விறன்மிண்டர். தன் உள்ளம் நிறைந்த சிவபிரானைத் தலங்கள்தோறும் சென்று தரிசித்திட விரும்பினார் அப்பெருமகனார். அவ்வாறே சேரநாட்டு சிவத்தலங்கள் முழுமையும் சென்று இறையுருவை தரிசித்து உளம் களித்தார்.

சிலிர்ப்பூட்டும் சிறுதொண்டரின் தியாகத்தை நினைவுகூரும் குருபூஜை தினம் இன்று!

சேரநாட்டுத் தலங்களை வழிபட்டதில் இன்னும் சிவபக்தி மேலோங்கவும், சோழநாட்டுத் திருத்தலங்கள் தரிசிக்கப் பயணம் தொடங்கினார் விறன்மிண்டர். அதன்படி திருவாரூர்த்தலம் வந்தடைந்தார். இறை வழிபாடு செய்து அங்கேயே தங்கியிருந்தார். அப்போது ஒருநாள், சிவத்தொண்டாற்றும் அடியார் திருக்கூட்டம் திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் நிரம்பியிருந்தது. அங்கே, தேவார நால்வருள் ஒருவராக விளங்கும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் வருகை புரிந்தார்.

சிவன்
சிவன்

அடியார்களைக் கைத்தொழாது கடந்துசென்ற சுந்தரமூர்த்திகளை, `இவன் அடியவர்களுக்குப் புறகு’ என்றும், `இவனையாண்ட சிவனும் புறகு’ என்றும் பாடினார். புறகு என்பது புறமானது எனப் பொருள். இதுகேட்ட சுந்தரமூர்த்திகள் சிவனார்முன் விழுந்து `அடியார்க்கெல்லாம் அடியாராகும் நாள் எந்நாளோ?’ என மனம் கசிந்து வேண்டி நிற்க, தில்லைவாழ் அந்தணர்...’ என, தியாகேசனே திருத்தொண்டத் தொகைக்கு அடியெடுத்துத் தந்தார்.

`என் கடன் பணி செய்து கிடப்பதே’ - உழவாரப் பணி செய்து, இறைவனின் உள்ளம் கவர்ந்த நாவுக்கரசர் குருபூஜை!

இறை சிந்தையும் அடியாரைப் புகழ்ந்து ஏத்தும் எண்ணமும் கொண்டு வாழ்ந்த விறன்மிண்டர் தனது காலத்துக்குப் பிறகு இறையடி சரணடைந்தார். அடியாரை வணங்கி வாழ்ந்த இவ்வடியார் கயிலாயத்தில் பூதகணங்களுக்குத் தலையானவராய் சிவனாரால் இடம் அமர்த்தப்பட்டார்.

Siva Lingam
Siva Lingam

தன்னைக் கீழாகத் தாழ்த்தி ஈசனின் அடியவர்களை உலகத்துக்கு மேலே உயர்த்திப் பிடித்த உன்னத வாழ்வு, விறன்மிண்டருடையது. இத்தகைய சிறப்புமிக்க இவ்வடியாரின் பூஜைதினம் இன்று. இந்த நாளில் வீட்டிலமர்ந்து சிவபூஜை செய்து அடியார்களின் அருளும் அன்பும் பெறுதல் பெரும்பேறு!

அடுத்த கட்டுரைக்கு