Published:Updated:

"எல்லாப்பணத்தையும் எல்.ஐ.சியில போட்டேன்... இன்கம்டாக்ஸ் அதிகாரி வந்து நின்னார்..!"- விசு

விசு
விசு

மனிதர்கள் அடிக்கடி போகப்போகத்தான் கோயிலுக்கு சக்தி வரும். அதேபோல நம் வீட்டு பூஜையறையில நாம் உட்கார்ந்து சாமி கும்பிட கும்பிடத்தான் அந்த இடத்துக்கே ஒரு சக்தி பிறக்கும். நான் வீட்டுல இருக்கிற பூஜையறையில தினமும் நேரம் ஒதுக்கி சாமி கும்பிடுவேன்.

தமிழ் சினிமாவில் பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் வரிசையில் குடும்பக் கதைகளை மட்டுமே இயக்கி அழியாத தடம் பதித்தவர் இயக்குநர் விசு. கூட்டுக் குடும்பத்தின் மேன்மைகளையும் அதில் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் சிறப்பாகக் கையாண்டு பல வெற்றிப் படங்களைத் தந்தவர். தயாரிப்பாளர், இயக்குநர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் எனப் பன்முகத்தன்மையுள்ளவர். இவர் இயக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்படம், இந்திய அளவில் 1986-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குப் படமாகத் தேர்வு செய்யப்பட்டுத் தங்க மயில் விருது பெற்றது.

விசு
விசு

'அரட்டை அரங்கம்' இவரைத் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டுபோய் சேர்த்தது. இயக்குநர் விசுவிடம் அவரது ஆன்மிக அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

''நான் தெய்வபக்தி உள்ளவன். என் மனசுக்கு சத்யம், தர்மம், நியாயம்னு படுறதை மட்டும்தான் செய்வேன். அப்படியில்லைன்னா அதனால் எத்தனை கோடி ரூபாய் கிடைப்பதாக இருந்தாலும் அதை விட்டு நகர்ந்திடுவேன். சின்ன வயசிலேயிருந்தே இது என் சுபாவம்.

விசு
விசு

மனிதர்கள் அடிக்கடி போகப்போகத்தான் கோயிலுக்கு சக்தி வரும். அதேபோல நம் வீட்டு பூஜையறையில நாம் உட்கார்ந்து சாமி கும்பிட கும்பிடத்தான் அந்த இடத்துக்கே ஒரு சக்தி பிறக்கும். நான் வீட்டுல இருக்கிற பூஜையறையில தினமும் நேரம் ஒதுக்கி சாமி கும்பிடுவேன்.

பொதுவா, மனசுல நினைச்ச காரியம் நல்லவிதமா முடிஞ்சதுன்னா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்குப் போவேன். வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு அடிக்கடி போவேன். பெரும்பாலும், என் பிரச்னைகள் எல்லாமே என் வீட்டு பூஜையறையில வேண்டும்போதே முடிஞ்சிடும். அதைத்தாண்டி என்னால் தீர்க்க முடியாத பிரச்னைன்னா, நேரா வல்லக்கோட்டை முருகன் கோயிலுக்குப் போயிடுவேன். ஒரகடத்திலிருந்து ஶ்ரீபெரும்புதூர் போற வழியில் இருக்கு வல்லக்கோட்டை. அங்க போய் கும்பிட்டுட்டு வந்தால், என்னைப் பொறுத்தவரை தீராத பிரச்னையெல்லாம் தீர்ந்திடும்.

பூஜையறை
பூஜையறை

ஒருமுறை எனக்கும் வருமானவரித் துறைக்கும் ஒரு பிரச்னை. வழக்கு டிரிபியூனலுக்கு போச்சு... என்ன பிரச்னைன்னா, எல்.ஐ.சியில 'ஆனியுட்டி' (Annuity னு ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசி இருக்கு. அந்தப் பாலிசியில பணம்போட்டா, அதை அந்த வருஷ இன்கம்ல காட்ட வேண்டிய அவசியமில்லை. பின்னாடி இன்கம் இல்லாத வருஷத்துல எடுத்துக்கலாம்...

இயக்குனர் விசு இயக்கிய 'சம்சாரம் அது மின்சாரம்' படம் 1986ல வந்தாலும், இன்னிக்கும் டி.வில போட்டா 90s கிட்ஸ், 80s கிட்ஸ்(?!) கூட சிப்ஸ் பாக்கெட் எடுத்து வச்சிக்கிட்டு டி.வி முன்னாடி செட்டில் ஆகிடுவாங்க! செம்ம என்டர்டெயினர் படம்!

Visu
Visu

'சம்சாரம் அது மின்சாரம்' படத்துக்கு 27-07-1986 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் விமர்சனம் வந்தது!

இந்த படத்துக்கு எவ்வளவு மார்க் போட்டிருப்பாங்க?

APPAPPO ஆப்ல கண்டுபிடிங்க..! -> http://bit.ly/SamsaaramAthuMinsaaram

நிரந்தரம் இல்லாத எங்க தொழிலுக்கு அது வரப்பிரசாதம்... அதுல வரிசையா நாலைந்து பட பணத்தைப் போட்டுட்டேன்... அந்தப் பணத்துக்கு எல்லாம் அந்தந்த வருஷம் வருமான வரி கிடையாது. பின்னாடி பணத்தை எடுக்கிற வருஷத்துலதான் அந்த வருஷத்துக்குத் தகுந்த மாதிரி வரி கட்டணும். வருமானவரித்துறை, சில காரணங்கள் காட்டி அதை ஒத்துக்காம, அதற்கான வரியை அபராதத்தோட செலுத்தச் சொன்னாங்க. அவங்க சொன்ன தொகையை ஃபைனோடு நான் கட்டணும்னா நடுத்தெருவுக்குத்தான் வரணும். ஏன்னா கைல பணம் இல்ல... எல்லாமே எல். ஐ.சி-ல இருந்தது... வழக்கு ட்ரிப்யூனலுக்கு வந்துச்சு. நான் போக வேண்டிய அவசியமில்லை. எங்க ஆடிட்டர்தான் போனார். எனக்கு மனசு சரியில்லை.

விசு
விசு

அப்போ நாங்க கீழ்ப்பாக்கத்துல இருந்தோம். காலையில எழுந்து குளிச்சிட்டு என் மனைவியை அழைச்சிக்கிட்டு வல்லக்கோட்டை முருகனைக் கும்பிட கிளம்பிட்டேன். எங்க கார் மாங்காட்டைக்கூடத் தாண்டவில்லை. ஆடிட்டர் ஃபோன் பண்ணினார். 'சார், கேஸ் நமக்கு ஃபேவரா தீர்ப்பாயிடுச்சு.'

எப்படின்னு கேட்டேன். 'புரொடக்‌ஷன் கம்பெனி பணத்தை இவங்க நிறுவனத்துக்குக் கொடுத்திருக்காங்க. இவங்க நிறுவனம் எல்.ஐ.சி-க்குக் கொடுத்துட்டாங்க. அப்போ இந்த வருமானம் எல்.ஐ.சி-க்குத்தானே போயிருக்கு... இவங்க எதுக்கு வரி செலுத்தணும்?'னு நீதிபதி கேஸை டிஸ்மிஸ் பண்ணிட்டார்னு சொன்னார்.

வல்லக்கோட்டை முருகன்
வல்லக்கோட்டை முருகன்

முருகனுடைய அருளை எண்ணி நெகிழ்ந்துபோனேன். அதற்கப்புறம் அந்த வழியில் எப்போ போனாலும் இறங்கி வல்லக்கோட்டை முருகனுக்குப் பவ்யமா ஒரு வணக்கத்தைப் போட்டுட்டுத்தான் போவேன். வல்லக்கோட்டை முருகனின் மகிமையை வெளிப்படுத்துறமாதிரி பாடல்கள் எழுதவெச்சு, அதுக்கு நானே இசையமைச்சு 500 கேசட்டுகள் போட்டு 'பக்தர்களுக்குக் கொடுங்க'னு சொல்லி கோயில் நிர்வாகத்துக்கிட்டே கொடுத்துட்டு வந்தேன்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, என்னால ஒரு பிரச்னையை எப்போ தீர்க்க முடியலையோ அதை வல்லக்கோட்டை முருகன் பாதத்துல வச்சிருவேன்... மத்ததை அவன் பாத்துப்பான்'' என்கிறார் இயக்குநர் விசு.

அடுத்த கட்டுரைக்கு