சைவம் - வைணவம் இரண்டும் ஒன்றிணைந்த ஆலயமாக விளங்கும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் ஈராயிரம் ஆண்டுகள் பழைமையானது என்கின்றன ஞானநூல்கள்.

அத்ரி முனிவரின் மனைவியான அநுசூயையின் பெருமையை சோதிக்க எண்ணிய மும்மூர்த்திகளும் அவளின் கற்பின் மகிமையால் குழந்தைகளாக உருமாறினர். முப்பெருந்தேவியர்களின் வேண்டு தலால் மூவரும் மீண்டும் உரு மாறினர். இதற்குச் சாட்சியாகத் திகழும் ஆலயம் இது என்பர்.

இங்குள்ள மூலவரான லிங்கத்தின் மேல் பாகம் – விஷ்ணு, நடுப்பாகம் – சிவன், அடிப்பாகம் – பிரம்மா என வணங்கப்படுகிறது. அடியைத் தேடிய பிரம்மன், முடியைத் தேடிய விஷ்ணு இருவருக்கும் இங்கே நிரந்தர இடம் அளித்துள்ளார் ஈசன்.

சுசீந்திரத்தில் பெருமைமிக்க ஆஞ்சநேயர் சந்நிதி உலகப் புகழ்பெற்றது. சகல நோய்களையும் தோஷங்களையும் நீக்கவல்ல இந்த ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரம் கொண்டது.

அகலிகையால் உண்டான சாபம் நீங்க இந்திரன் மும்மூர்த்திகளையும் ஒரே நேரத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. ‘சுசீ’ என்றால் தூய்மை. இந்திரன் தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என்றானது.

சாபம் நீங்கியதால் தாணுமாலயனுக்கு இந்திரன் இன்றும் அர்த்த சாம பூஜை நடத்துவதாக ஐதிகம். அதனால் இத்திருக்கோயிலில் மாலையில் பூஜை செய்தவர், மீண்டும் அடுத்த நாள் காலை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை. கருவறை உள்ளே எதுவும் மாறுதல்கள் கண்டால் அதைப் பிறரிடம் வெளியிடக் கூடாது என்ற ஐதிகப்படி இந்த நியதி கடைப்பிடிக்கப்படுகிறது.

சுசீந்திரம் ஆலயத்துக்கு மேலக்கோபுர வாயிலுக்கான நிலத்தைத் தோண்டும்போது இந்த அனுமன் சிலை கிடைத்தது.

1929-ம் ஆண்டில் ராமபிரானின் கருவறைக்கு எதிரில் இந்தத் திருமேனி நிறுவப்பட்டது.

விஸ்வரூப ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படும் இவருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் காரிய ஸித்தி கிடைக்கும் என்பர். தலைக்கு மேல் அமைந்துள்ள இவரது வாலுக்கே முதல் விசேஷம் என்கிறார்கள்.

ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், மஞ்சள், அரிசி மாவு, நெய், இளநீர், பன்னீர், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, எலுமிச்சைச் சாறு, விபூதி, குங்குமம், களபம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்து வழிபட்டால் ஒவ்வொரு அபிஷேகத்துக்கும் உண்டான விசேஷ பலன்களைப் பெறுவார்கள் என்கிறது தல வரலாறு.

பல நூறு ஆண்டுகள் பழைமையான இந்த ஆஞ்சநேயர் திருமேனி 1740-ம் ஆண்டு அந்நியர்களின் படையெடுப்பின் போது இக்கோயில் சிலைகளைக் காப்பாற்றும் பொருட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்தது என்றும் அது மீண்டும் சுமார் 200 ஆண்டுகள் கழித்து பிரதிஷ்டை செய்யப்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும் பாதையில், நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து 12 கி.மீ தொலைவிலும் சுசீந்திரம் கோயில் அமைந்துள்ளது.

வேண்டியதை விரைவில் அளிக்கும் இந்த விஸ்வரூப அனுமனுக்கு வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகம் செய்வதும் விசேஷம் என்கிறார்கள்.

வாயு புத்திரனான இவருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் வேண்டியது நிறைவேறும்.செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாள்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது.

இங்கு அதிகாலை 4.30 மணிக்குக் கோயில் நடை திறந்து மதியம் 12.00 மணிக்கு அடைப்பர். மீண்டும் மாலை 5.00 மணிக்கு நடை திறந்து மாலை 8.30 மணிக்கு அடைப்பார்கள்.