Published:Updated:

எது மன்னிப்பு?

ஓஷோ
பிரீமியம் ஸ்டோரி
ஓஷோ

சிந்தனை விருந்து

எது மன்னிப்பு?

சிந்தனை விருந்து

Published:Updated:
ஓஷோ
பிரீமியம் ஸ்டோரி
ஓஷோ

`தயவுசெய்து கடவுளுக்கு பயப்படாதீர்கள். கடவுளை நேசிப்பவராக இருங்கள்’ என்கிறார் ஓஷோ. தான் வாழும் காலத்திலேயே தன் கருத்துகளுக்காக லட்சக்கணக்கான ஆதரவாளர்களையும், அதற்குச் சமமாக எதிர்க்குரல் கொடுப்பவர்களையும் சம்பாதித்தவர் ஓஷோ எனப்படும் ரஜனீஷ்.

னதுக்குப்பட்டதை பட்டென்று சொல்லிவிடும் குணம் அவருக்கு. ஒரு முறை பரோடாவில் அவரின் சொற்பொழிவு. சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது உரை. அரங்கமே அவர் பேச்சில் உறைந்துபோயிருந்தது. முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவருக்கு ஏனோ ரஜனீஷின் பேச்சு பிடிக்கவில்லை. அவர் ஒரு சம்ஸ்கிருதப் பண்டிதர்.

ஒரு கட்டத்தில் தன் காலிலிருந்த செருப்பைக் கழற்றி ரஜனீஷை நோக்கி வீசினார். கிரிக்கெட் மேட்ச்சில் பந்தை கேட்ச் பிடிப்பதுபோல லாகவமாக அதைப் பிடித்தார் ரஜனீஷ். அவர் முகத்தில் கொஞ்சமும் திடுக்கிடலோ, கோபமோ இல்லை. பிறகு சொன்னார்... ``ஐயா உங்க அன்பளிப்புக்கு நன்றி. ஒரு செருப்பைவெச்சுக்கிட்டு நான் என்ன செய்யறது... இன்னொண்ணையும் வீசுங்க.’’

அவ்வளவுதான். அந்த மனிதர் ஆடிப்போனார். அரங்கத்தைவிட்டு வெளியேற முயன்றார். ரஜனீஷ் குரல் கொடுத்தார்... ``அவரை விடாதீங்க. இன்னொரு செருப்பையும் குடுத்துட்டுப் போகச் சொல்லுங்க...’’ அந்த மனிதர் வேகமாக வெளியேறினார்.

பிறகு அந்தப் பண்டிதர் பலமுறை ரஜனீஷுக்குக் கடிதம் எழுதினார். ஒரே வாசகம்தான்... `மன்னித்து விடுங்கள்.’

பல கடிதங்கள் வந்த பிறகு பொறுக்க முடியாத ரஜனீஷ் பதில் கடிதம் எழுதினார்... `அன்றைக்கு நான் கோபப்பட்டிருந்தால் உங்களை மன்னிப்பது நியாயம். இன்றைக்கு நான் உங்களை மன்னிக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். அன்றைக்கு நான் கோபப்பட்டதாகிவிடும். இனிமேல் மன்னிப்புக் கேட்காதீர்கள்.’

கோபம் எதிராளியை அல்ல... தன்னையே தாக்கிவிடும் ஆயுதம் என்பது பலருக்குப் புரிவதில்லை.

ந்த ஊரில் தாசில்தார் ஒருவர் இருந்தார். சதா சிடுசிடுப்பு... எதற்கெடுத்தாலும் எரிந்துவிழும் சுபாவம். ஒரு நாள் அலுவலகத்துக்குப் பின்னாலிருந்த கிணற்றுக்கருகே போனவர், தவறி உள்ளே விழுந்துவிட்டார்.

எல்லோரும் சேர்ந்து கயிற்றை இறக்கி, அவரைக் கட்டச் சொல்லி மேலே இழுக்கப் போராடிக்கொண்டிருந்தார்கள். ஒரு கிராம அலுவலர் ஓடி வந்தார். ``நம்ம ஐயாவுக்கு மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சுருச்சு’’ என்றார். அவ்வளவுதான். அத்தனை பேரும் பிடித்திருந்த கயிற்றைக் கீழே போட்டுவிட்டு அலுவலகத்துக்குள் புகுந்து கொண்டார்கள்.