Published:Updated:

கருடபுராணம் சொல்லும் நீத்தார் காரியங்கள்... கொரோனா கால சிக்கல்கள்... சாஸ்திரம் சொல்வது என்ன?

கருட புராணம்
கருட புராணம்

கருடபுராணம் சொல்லும் நீத்தார் காரியங்கள்... கொரோனா கால சிக்கல்கள்... சாஸ்திரம் சொல்வது என்ன?

இன்றைய பஞ்சாங்கம்

2. 6. 21 வைகாசி 19 புதன்கிழமை

திதி: சப்தமி காலை 6.26 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: சதயம் இரவு 10.01 வரை பிறகு பூரட்டாதி

யோகம்: சித்தயோகம் இரவு 10.01 வரை பிறகு அமிர்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.15 முதல் 5 வரை

பைரவர் வழிபாடு
பைரவர் வழிபாடு

சந்திராஷ்டமம்: பூசம் இரவு 10.01 வரை பிறகு ஆயில்யம்

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: பைரவர்

கருடபுராணம் சொல்லும் நீத்தார் காரியங்கள்... கொரோனா கால சிக்கல்கள்... சாஸ்திரம் சொல்வது என்ன?

கொரோனா காலம் பலருக்கும் மிகவும் கடினமான தருணங்களை உருவாக்கிவிடுகிறது. இவற்றில் மிகவும் மோசமானது இறந்தவர்களுக்குரிய நீத்தார் கடன்களை முறையாகச் செலுத்தமுடியாமல்போகும் நிலை. கருடபுராணம் இறுதிச்சடங்குகள் குறித்து விரிவாகப் பேசுகிறது. ஒரு மனிதனின் உயிர் பிரிந்ததும் எத்தனை மணி நேரத்துக்குப் பின் இறுதிச்சடங்குகளைத் தொடங்க வேண்டும்? எத்தனை மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று விரிவாகப் பேசுகிறது. இவற்றுக்கான காரணங்களையும் சரியாக முன்வைக்கிறது. இவை குறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்?

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

அனுகூலம் : அனுகூலம் நிறைந்த நாள். சகோதர உறவுகளால் செலவுகள் ஏற்படும். பேச்சில் மட்டும் சிறு கட்டுப்பாடு தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். - நா காக்க!

ரிஷபம்

உற்சாகம் : காலை முதலே உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் மீது அன்பு செலுத்துவார்கள். எதிர்பாராத சிறிய பணவரவும் வாய்க்கும். - என்ஜாய் திடே

மிதுனம்

நிதானம் : காலையிலிருந்தே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். செலவுகள் அதிகரிப்பதால் கவலை தோன்றி மறையும். மாலையில் பணவரவு ஏற்படலாம். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

கடகம்

நெருக்கடி : பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் பணவரவு வாய்க்கும் என்றாலும் போதுமானதாக இருக்காது. ஆனாலும் மன தைரியத்தோடு சமாளிப்பீர்கள். - சவாலே சமாளி!

சிம்மம்

மகிழ்ச்சி : அதிகாலை முதலே மகிழ்ச்சியோடு காணப்படுவீர்கள். செலவுக்கு ஏற்ப வருமானம் இருப்பதால் கவலையில்லை. குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். - ஜாலி டே!

கன்னி

சுறுசுறுப்பு : இன்று நாள் முழுவதும் பரபரப்பாக இருப்பீர்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துப் போங்கள். செலவுகள் ஏற்பட்டாலும் சமாளிக்கப் பணம் வரும். - ஆல் இஸ் வெல்!

துலாம்

கவனம் : முடிந்தவரை கவனமாகப் பணியாற்ற வேண்டிய நாள். தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். குடும்பத்தினர் உங்களுக்கு ஆறுதலாக இருப்பார்கள். - டேக் கேர் ப்ளீஸ்!

விருச்சிகம்

நன்மை : உறவினர்களிடம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளைக் கேட்பார்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். - நாள் நல்ல நாள்!

தனுசு:

மன உறுதி : மனதில் துணிச்சல் உண்டாகும். புதிய செயல்களைத் துணிந்து திட்டமிடுவீர்கள். செயல்களும் அனுகூலமாகும். நன்மைகள் நடைபெறும் நாள் - துணிவே துணை!

மகரம்

ஆரோக்கியம் : அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். எதிர்பார்த்த சுபச்செய்தி ஒன்றும் கிடைக்கும். என்றாலும் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். - ஹெல்த் இஸ் வெல்த்!

கும்பம்

ஆதாயம் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். நன்கு ஆலோசித்துச் செயல்பட வேண்டியது அவசியம். - ஆல் தி பெஸ்ட்!

மீனம்

பக்தி : மனதில் இறைச் சிந்தனை அதிகரிக்கும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்க்கும் செயல்களும் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் அமைதி நிலவும். - எல்லாம் அவன் செயல்!

அடுத்த கட்டுரைக்கு