Published:Updated:

இறைவனுக்கு முடிகாணிக்கை செலுத்துவது ஏன் ? #அதிகாலை சுபவேளை

முடி காணிக்கை
முடி காணிக்கை

இறைவனுக்கு முடிகாணிக்கை செலுத்துவது ஏன் ? #அதிகாலை சுபவேளை

இன்றைய பஞ்சாங்கம்

10. 6. 21 வைகாசி 27 வியாழக்கிழமை

திதி: அமாவாசை மாலை 4.53 வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: ரோகிணி பகல் 12.29 வரை பிறகு மிருகசீரிடம்

யோகம்: மரணயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 12.30 முதல் 1.30 வரை

சாயிபாபா
சாயிபாபா

சந்திராஷ்டமம்: சுவாதி பகல் 12.29 வரை பிறகு விசாகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஷிர்டி சாய்பாபா

இன்று: அமாவாசை

இறைவனுக்கு முடிகாணிக்கை செலுத்துவது ஏன் ?

நம் முன்னோர்கள் பல்வேறு சடங்குகளையும் வழிபாட்டுமுறைகளையும் வாழ்வோடு பிணைத்திருந்தார்கள். அவற்றில் பல மறைபொருள்கள் இருந்தன. மாற்றுக்கேள்வியின்றிக் கேட்கும் தலைமுறையில் அவை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தபடி செய்யப்பட்டன. ஆனால் நவீன காலம் அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது. கேள்விகேட்கும் இளைஞர்களுக்கு உரிய பொருளைத் தரவேண்டியது நம் கடமை. அவ்வாறு சொல்லவில்லை என்றால் அவற்றை மூடப்பழக்கம் என்று அவர்கள் ஒதுக்கிவிடவும் வாய்ப்புள்ளது. அப்படி இக்கால இளைஞர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்று முடிகாணிக்கை செலுத்துவது ஏன்... அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்பதுதான். இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்துவது நேர்த்திக்கடன்களுள் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த காணிக்கை செலுத்துவதன் பின்னணியில் இருக்கும் உயர்ந்த தாத்பர்யங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்

10/6/21

மேஷம்

பொறுமை : அனுகூலமான நாள். இருந்தபோதும் சொல்லிலும் செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கது அவசியம். திட்டமிட்டுச் செயல்பட வேண்டும் - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

ரிஷபம்

ஆரோக்கியம் : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். தாய்வழி உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். - ஹெல்த் இஸ் வெல்த்!

மிதுனம்

சாதகம் : செயல்களில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

கடகம்

அனுகூலம் : நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சிதரும் செய்திகள் வந்துசேரும். - ஆல் இஸ் வெல்!

சிம்மம்

சுறுசுறுப்பு : மனதிலும் உடலிலும் உற்சாகமும் சுறுசுறுப்பும் நிறைந்திருக்கும். நீண்டநாள்களாக நிலுவையிலிருந்த பணம் கிடைக்கும். விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. - ஆல் தி பெஸ்ட்!

கன்னி

குழப்பம் : மனதில் சின்னச் சின்னக் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும். - டேக் கேர் ப்ளீஸ்!

துலாம்

கவனம் : தேவையற்ற குழப்பங்களும் கவலைகளும் மனதில் சூழ்ந்திருக்கும். வார்த்தைகளால் வம்பு வரலாம் என்பதால் பேசும்போது கவனம் தேவை. - நா காக்க!

விருச்சிகம்

ஆதாயம் : உறவினர்களால் ஆதாயம் ஏற்படும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அந்நியோன்யமும் ஏற்படும் நாள். - ஜாலி டே!

தனுசு:

மகிழ்ச்சி : மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் நாள். தொடங்கும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். - என்ஜாய் தி டே!

மகரம்

நன்மை : செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியும் நன்மையும் ஏற்படும். குடும்பத்திலிருந்த மனவருத்தங்கள் நீங்கி அன்பு பிறக்கும். - நாள் நல்ல நாள்!

கும்பம்

உதவி : எதிர்பார்த்த உதவிகள் தேடிவரும் நாள். மனதில் நம்பிக்கை நிறைந்திருக்கும் என்றாலும் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மீனம்

பிரச்னை : செயல்கள் அனுகூலமாக முடிந்தாலும் சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. - விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை!

அடுத்த கட்டுரைக்கு