Published:Updated:

விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய நல்ல நேரம் எது?

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை நாளை கொண்டாட இருக்கிறோம். நாளை சதுர்த்தி திதியோடு நாள் முழுவதும் அஸ்த நட்சத்திரமும் இணைந்துள்ளது. அஸ்த நட்சத்திரம் விநாயகப்பெருமான் நட்சத்திரமாகக் கருதப்படுவது. எனவே, திதியும் நட்சத்திரமும் இணைந்துவரும் இந்த நாள் விநாயகர் வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் நாம் வீடுகளில் விநாயகர் வழிபாடு செய்வோம். களிமண், சந்தனம், மஞ்சள் போன்றவற்றால் விநாயகர் செய்து அதற்கு பூஜை செய்வது வழக்கம். நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம் என்றபோதும், அதற்கு உகந்த நேரம் என்ன என்பது குறித்து முத்துக்குமார சிவாசார்யரிடம் கேட்டோம்.

``விநாயகர் சதுர்த்தி என்பதே நல்ல நாள்தான். விக்னேஸ்வரனை வழிபடும் நாள். விக்னம் என்றால் தடை என்று பொருள். துன்பங்கள் தரும் தடைகளை நீக்கி அருள்பவர் விக்னேஸ்வரன். அப்படிப்பட்ட விக்னேஸ்வரன் அவதரித்த நாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நன்னாள் முழுவதுமே பூஜை செய்துவழிபட உகந்த நாள்தான். இதில் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி

நாளை (22.8.2020) அன்று சனிக்கிழமை, காலை 9 மணி முதல் 10.30 வரை. எனவே, பூஜையைக் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளும் 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் மேற்கொள்ளலாம். சில குடும்பங்களில் விநாயகரை மாலையில் வழிபடும் வழக்கம் உண்டு. அவர்கள் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் செய்யலாம்" என்று தெரிவித்தார் முத்துக்குமார சிவாசார்யர்.

எளிமையான வழிபாட்டிலேயே மனம் நிறைந்து அருள்பவர் கணபதி. எனவே, கிடைக்கும் பொருள்களைக் கொண்டு எளிமையாக விநாயகர் சதுர்த்தி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி அன்று வேண்டிக்கொள்ளும் வரங்களை மறக்காமல் நமக்குத் தந்து அருள்வார் கணநாதன் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு