Published:Updated:

சனீஸ்வரரின் தொல்லைகளை நீக்கும் பெருமாள் வழிபாடு... புரட்டாசி கடைசி நாளில் நாம் செய்யவேண்டியது என்ன?

செல்வ வளம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வேண்டியே பலரது வேண்டுதலும் இருக்கும் என்பது அறிந்ததே. இந்த மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம், புரட்டாசி கடைசி நாள் விரதம்தான் என்பர் பெரியோர்.

இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி நாள். மாதம் முழுவதும் விரதமிருந்து மாதவனைப் போற்றிய அன்பர்களுக்கு இந்த நாள் முக்கியமானது. மாதம் முழுக்க அசைவம் தவிர்த்து வழிபாடு செய்தவர்கள் கடைசி நாளில் வறியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தானம் அளிக்கும் புண்ணிய நாள் இது. இன்று துவாதசி நாளாக வருவதும் சிறப்பு. புரட்டாசி மாதம் முழுக்க விரதம் அனுஷ்டிக்க முடியாதவர்கள் இந்தத் துவாதசியில் பெருமாளை வழிபட்டால் முழு பலனையும் அடைய முடியும் என்கிறார்கள் அடியவர்கள்.
பெருமாள்
பெருமாள்

செல்வ வளம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் வேண்டியே பலரது வேண்டுதலும் இருக்கும் என்பது அறிந்ததே. இந்த மூன்று பலன்களையும் ஒரே நேரத்தில் தரக்கூடிய விரதம், புரட்டாசி கடைசி நாள் விரதம்தான் என்பர் பெரியோர். நவகிரகங்களில் சனிபகவான் புரட்டாசியில்தான் அவதரித்தார். எனவே அவருடைய ஆதிக்க தெய்வமாக விளங்குகிறார் ஸ்ரீவேங்கடேச பெருமாள்.

புரட்டாசியின் கடைசி நாளில் ஆண்டாளை வேண்டிக் கொண்டால் குறைவற்ற நலத்தைப் பெருமாளிடம் விண்ணப்பித்துப் பெற்றுத் தருவாளாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள்

பூமாதேவியின் அம்சமாகப் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் நாச்சியார், பொறுமையிலும் பக்தியிலும் சிறந்தவள். எந்நேரமும் திருமாலை வணங்கியபடியே இருக்கும் இந்த கோதை, நம் விருப்பங்களை திருமாலிடம் கொண்டு சேர்க்கும் பிராட்டி என்று போற்றப்படுபவர். ஆண்டாளை எண்ணி வணங்கினால் மன அமைதியும் நிம்மதியும் அருளுவாள் என்று பெரியோர்கள் கூறுவர். பரம காருண்ய தேவதை என்று போற்றப்படும் ஆண்டாளிடம், தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை எடுத்துச் சொல்லி மனம் கனிந்து வேண்டினால், அதை பெருமாளிடம் எடுத்துச் சொல்லி மன்னிப்பையும் ஆசியையும் பெற்றுத் தருவாள் என்கின்றன ஆன்மிக நூல்கள்.

திருச்சி கோயில்கள் - 16: சொந்த வீடு, சொத்துகள் சேர வரமருளும் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோயில்!

சனீஸ்வரன் பூலோகத்தில் வலம் வந்தபோது, நாரதர் சனீஸ்வரனிடம் 'பூமியில் எங்கும் செல், யாரையும் பீடித்துக் கொள்! ஆனால் திருமலை பக்கம் மட்டும் சென்றுவிடாதே!' என்று கலகம் செய்தார். அது கேட்டு வீம்பாக சனீஸ்வரன் 'அங்கே சென்றுதான் பார்ப்போமே' என்று திருமலை மீது தன் காலை வைத்தான். அவ்வளவுதான் அடுத்த நொடியே சனீஸ்வரன் தூக்கி வீசப்பட்டான்.

ஸ்ரீவேங்கடேச பெருமாள்
ஸ்ரீவேங்கடேச பெருமாள்

திருமலையில் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான வேங்கடேச பெருமான் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட சனீஸ்வரன் அஞ்சி நடுநடுங்கி அவர் பாதம் பணிந்து மன்னிப்பு வேண்டினான். இதனால் சாந்தமான பெருமாள், 'இன்று முதல் என்னுடைய பக்தர்களுக்கு நீ எந்தத் தொல்லையும் கொடுக்க கூடாது!' என்று அறிவுறுத்தி ஆசி கூறினார்.

சனிபகவானின் பார்வையால் அவதிப்படும் அன்பர்கள், வேங்கடவனை வழிபட்டு, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஓதி, உபவாசம் இருந்து சனியின் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் என்கின்றன ஞான நூல்கள்.

'வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால்

வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும் - வேங்கடமே

தானவரை வீழத் தன் ஆழிப் படைதொட்டு

வானவரைக் காப்பான் மலை!'

- திருமழிசை ஆழ்வார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு