Published:Updated:

பத்மநாப ஸ்வாமிக்குக் கோதுமை அதிரசம்!

பத்மநாப ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
பத்மநாப ஸ்வாமி

பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

பத்மநாப ஸ்வாமிக்குக் கோதுமை அதிரசம்!

பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

Published:Updated:
பத்மநாப ஸ்வாமி
பிரீமியம் ஸ்டோரி
பத்மநாப ஸ்வாமி

புரட்டாசி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் அனந்த விரதம். இந்த வருடம் 30.9.20 புதன்கிழமை அன்று அனந்த விரதம் அனுஷ்டிக்கவேண்டும்.

அன்று அதிகாலையில் நீராடி, தூய்மையான ஆடை அணிந்து, பூஜைக்குரிய இடத்தைப் பசுஞ்சாணத்தால் மெழுகவேண்டும்.

ஐந்து விதமான வண்ணங்களில் கோலம் போட்டு தீர்த்தக் கலசம் வைத்து, அனந்த பத்மநாபனை தியானித்து பூஜை செய்ய வேண்டும்.

பத்மநாப ஸ்வாமிக்குக் கோதுமை அதிரசம்!

ஐந்து படி கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து, 28 அதிரசங்கள் செய்யவேண்டும். இவற்றில் பதினான்கை, வேதியர்களுக்குத் தந்து தாம்பூலம் மற்றும் தட்சிணை அளிக்க வேண்டும். மீதியை நாம் உண்ண வேண்டும்.

பூஜைக்குரிய பொருள்கள் அனைத்தும் பதினான்கு என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பக்தியுடன் இந்த விரதத்தைச் செய்தால், தீராத வினைகளெல்லாம் தீரும். அளவிட முடியாத ஐஸ்வரியங்கள் வந்து சேரும். நாம் நினைத்த காரியங்கள் தடை ஏதுமின்றி நினைத்தபடி நிறைவேறும்.

- கே.சுபா, திருநெல்வேலி-3