Published:Updated:

`சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் எப்போது?' - விளக்கும் தீட்சிதர்

ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்
ஆடல்வல்லானுக்கு ஆனித் திருமஞ்சனம்

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம், நாளை என்று சில நாள்காட்டிகளிலும் நாளை மறுநாள் என்று சில நாள்காட்டிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையில் ஆனித் திருமஞ்சனம் நாளையா நாளை மறுநாளா என்ற குழப்பம் சில பக்தர்களிடையே ஏற்பட்டுள்ளது.

நடராஜப்பெருமானுக்கு ஓர் ஆண்டில் ஆறு நாள்களே அபிஷேகங்கள் நடைபெறும். மார்கழி திருவாதிரை நட்சத்திரம், மாசி சதுர்த்தசி திதி, சித்திரை திருவோண நட்சத்திரம் , ஆனி உத்திர நட்சத்திரம், ஆவணி சதுர்த்தசி திதி மற்றும் புரட்டாசி சதுர்த்தசி திதி ஆகிய ஆறு தினங்களில் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். இவற்றில் ஆனி உத்திரமும், மார்கழித் திருவாதிரையும் திருவிழாவாகக் கொண்டாடப்படும்.

நடராஜர்
நடராஜர்

இந்த ஆண்டு ஆனித் திருமஞ்சனம், நாளை என்று சில நாள்காட்டிகளிலும் நாளை மறுநாள் என்று சில நாள்காட்டிகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உண்மையில் ஆனித் திருமஞ்சனம் நாளையா நாளை மறுநாளா என்ற குழப்பம் பக்தர்களிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிதம்பரம் வெங்கடேச தீட்சதரிடம் கேட்டோம்.

"ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, உத்திர நட்சத்திரம் வரும் நாளில் இதைச் செய்வது வழக்கம். எனவே, சிவாலயங்களில் நாளை தொடங்கி நாளை மறுநாள் உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம்.

நடராஜர்
நடராஜர்

ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். அதன்படி, நாளை மறுநாள் 28.6.20 அன்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த அபிஷேகம், காலை 7 மணி வரை நீடிக்கும். வழக்கமான நாள்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வார்கள். கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஆகம முறைப்படி திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு