Published:Updated:

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி எப்போது? - வாசகரின் கேள்விக்கு ஏபிஎன் சுவாமிகளின் பதில்!

வைகுண்ட ஏகாதசி
News
வைகுண்ட ஏகாதசி

ஶ்ரீரங்கத்தில் வரும் டிசம்பர் 14-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற கோயில்களில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 13-ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்று சொல்கிறார்கள். இதில் எந்த ஏகாதசியை நாம் கடைப்பிடிக்க வேண்டும்?

மார்கழி மாதம் என்றாலே அது பெருமாளுக்குரியது என்பது நம்பிக்கை. கண்ணன் கீதையில் நான் மாதங்களில் மார்கழியாக இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படிப்பட்ட மார்கழியில் முக்கியமான நாள் வைகுண்ட ஏகாதசி. பெருமாள் பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமான திருநாள். அன்றைய நாளில் விரதமிருந்து கண்விழித்து பெருமாளை தரிசனம் செய்வார்கள். அன்று நடைபெறும் சொர்க்க வாசல் திறப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும்.

ஶ்ரீரங்கம் கோயில்
ஶ்ரீரங்கம் கோயில்

பெருமாள் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி தரிசனம் கொடுக்க பக்தர்களும் அதே சொர்க்க வாசல் வழியாக வந்து பெருமாளை சேவிப்பது வழக்கம். இவ்வாறு செய்தால் வைகுண்டப் பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு எப்போது வருகிறது என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காரணம், ஶ்ரீரங்கத்தில் தற்போது வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் வரும் டிசம்பர் 14-ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மற்ற கோயில்களில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 13-ம் தேதி போகிப் பண்டிகை அன்று வைகுண்ட ஏகாதசி என்று சொல்கிறார்கள். இதில் எந்த ஏகாதசியை நாம் கடைப்பிடிக்க வேண்டும்... ஏன் இந்த வித்தியாசம் இந்த ஆண்டு மட்டும் வருகிறது... என்று மதுரையைச் சேர்ந்த கோபாலன் என்ற வாசகர் கேட்டிருந்தார். இந்தக் கேள்வியை நாம் ஆன்மிகச் சொற்பொழிவாளர் ஏபிஎன் சுவாமிகளிடம் கேட்டோம்.

திருப்பதி பெருமாள்
திருப்பதி பெருமாள்

"ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படும். இதைப் பெரிய ஏகாதசி என்றும் சிறப்பித்துக் கொண்டாடுவார்கள். அனைத்து ஆலயங்களிலும் ஒரே நாளில் ஏகாதசி கொண்டாடுவதுதான் வழக்கம். ஆனால், பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை இதேபோன்று ஶ்ரீரங்கத்துக்கும் பிறகோயில்களுக்கும் வேறுபாடு வருவது உண்டு. அந்த ஆண்டில் ஶ்ரீரங்கத்தில் மட்டும் கைசிக ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியும் மாறிவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண்டுதோறும் ஶ்ரீரங்கத்தில் தை மாதம் முதல் நாளில் பூபதித் திருநன்னாள் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இதுவும் ரக்ஷாபந்தன வைபவமும் (காப்புக்கட்டுதல்) அன்றைய நாளில் வரும். அத்யயன உற்சவத்துக்கும் ரக்ஷாபந்தன வைபவம் உண்டு என்பதால் ஒரே நேரத்தில் இரண்டு ரக்ஷாபந்தன வைபவங்களைக் கடைப்பிடிக்க முடியாது. அதேவேளையில் பூபதித் திருநன்னாளையும் தை முதல் தேதியிலிருந்து மாற்ற முடியாது என்பதால் அத்யயன உற்சவத்தை மாற்றியிருக்கிறார்கள். இதேபோன்ற நடைமுறையில் ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகுண்ட ஏகாதசித் திருநாளை மாற்றிக்கொண்டாடுகிற வழக்கமும் உண்டு. இந்த வழக்கம் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனந்த பதம்நாபாச்சார்யர்
அனந்த பதம்நாபாச்சார்யர்
apn swamygal facebook

மேலும் ஶ்ரீரங்கம் சாரங்கபாணி ஆராவமுதப் பெருமாளுக்கு தை ஒன்றாம் தேதி ரதோற்சவம் நடத்துவது வழக்கம். அதையும் மாற்றமுடியாது என்பதால் பொதுவாகவே அத்யயன உற்சவத்தை மார்கழி ஒன்றாம் தேதி தொடங்கிவிடுவது வழக்கம். இப்படி ஒவ்வொரு கோயிலுக்கும் தனிப்பட்ட நடைமுறை சம்பிரதாயங்கள் உண்டு.

எனவே பக்தர்கள் இதை மனதில் கொண்டு குழப்பிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஶ்ரீரங்கத்தைச் சார்ந்தவர்கள் வரும் டிசம்பர் 14-ம் தேதியும் மற்றவர்கள் அவரவர்கள் ஊரில் அருகே இருக்கும் பெருமாள் கோயிலில் கொண்டாடும் தினத்திலும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். எல்லா ஏகாதசி விரத நாள்களுமே மிகவும் முக்கியமானவைதான். எனவே பக்தர்கள் இரண்டு நாள்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவோம். அவரவர்கள் ஊரில் எப்போது சொர்க்க வாசல் திறப்பு நடைபெறுகிறதோ அப்போது அதில் கலந்துகொண்டு அவன் அருளைப் பெறுவோம்" என்றார்.