Published:Updated:

பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா? அதிகாலை சுபவேளை - 100!

பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா?
பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா?

பெண்கள் அர்ச்சகர் ஆகலாமா? அதிகாலை சுபவேளை - 100!

இன்றைய பஞ்சாங்கம்

17. 6. 21 ஆனி 3 வியாழக்கிழமை

திதி: சப்தமி மாலை 6.20 வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம்: பூரம் இரவு 7.05 வரை பிறகு உத்திரம்

யோகம்: சித்தயோகம் இரவு 7.05 வரை பிறகு மரணயோகம்

ராகுகாலம்: பகல் 1.30 முதல் 3 வரை

எமகண்டம்: காலை 6 முதல் 7.30 வரை

நல்லநேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை

ராகவேந்திரர்
ராகவேந்திரர்

சந்திராஷ்டமம்: திருவோணம் இரவு 7.05 வரை பிறகு அவிட்டம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீராகவேந்திரர்

பெண்கள் அர்ச்சகர்கள் ஆகலாமா?

அண்மையில் இந்து அறநிலையத்துறை அண்மையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது அர்ச்சகர் பயிற்சி பெற விரும்பும் பெண்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. இது மக்களிடையே ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருங்கே பெற்றது. பல ஆலயங்களில் பெண்கள் பூஜை செய்வதைப் பார்த்திருக்கிறோம். பெண்கள் மட்டுமே வழிபாடு செய்யும் கோயில்களும் சில உள்ளன. அப்படியிருக்கப் பெண்கள் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்ற கேள்வி முக்கியமாகிறது. இதற்கு நம் மரபில் உதாரணங்கள் உள்ளனவா? இதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்கள் என்ன என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யலாம்.

17.6.21

மேஷம்

பொறுமை : பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் யோசித்து இறங்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

ரிஷபம்

பணவரவு : எதிர்பாராத பணவரவு ஏற்படும் நாள். குடும்பத்தினர் செயல்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். - என்ஜாய் தி டே!

மிதுனம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மறைமுகத் தொல்லைகளும் குறையும். செலவுகளில் சிக்கனம் தேவை. நன்மைகள் நடைபெறும் நாள். - நம்பிக்கையே வாழ்க்கை!

கடகம்

வெற்றி : நேற்று வரையிருந்த கலக்கங்கள் மறையும். செயல்களில் வெற்றி கிடைக்கும். சகோதர உறவுகளுக்கு உதவுவீர்கள். பொருள் சேர்க்கைக்கு வாய்ப்புண்டு. - வெற்றி நிச்சயம்!

சிம்மம்

நற்செய்தி : எதிர்பார்த்த நற்செய்தி வந்து சேரும். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் மனம் போல் நடந்துகொள்வார்கள். - ஆல் தி பெஸ்ட்!

கன்னி

செலவு : செலவுகளால் சஞ்சலம் ஏற்படும் நாள். மூன்றாம் நபரின் பேச்சைக் கேட்பதைத் தவிருங்கள். குடும்பத்தினர் ஆதரவளிப்பது ஆறுதலாக இருக்கும். - செலவே சமாளி!

துலாம்

அனுகூலம் : செயல்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் செலவுகள் அதிகரித்தாலும் மகிழ்ச்சியே உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். - ஜாலி டே!

விருச்சிகம்

உற்சாகம் : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும் நாள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் தேவை. செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள் - ஆல் இஸ் வெல்!

தனுசு:

நன்மை : செலவுகள் அதிகரித்தாலும் அதற்கேற்பப் பணவரவும் காணப்படும். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும்பத் தேவையை நிறைவேற்ற அலைய வேண்டிவரும்.- நாள் நல்ல நாள்!

மகரம் -

கவனம் : புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். சமூக ஊடகங்களிலும் கருத்திடுவதைத் தவிர்ப்பது நல்லது. இறைவழிபாடு பயன் தரும். - எல்லாம் அவன் செயல்!

கும்பம்

தாமதம் : செயல்களில் சிறு தாமதம் ஏற்பட்டு முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். முக்கியமான பணிகளை இன்றே முடித்துவிடுவது நல்லது. - லெஸ் டென்ஷம் மோர் வொர்க்!

மீனம்

மகிழ்ச்சி : வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பீர்கள். நற்செய்திகள் தேடிவரும். குடும்பத்தினர் பாசமழை பொழிவார்கள். மாலையில் நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். - நினைத்ததை முடிப்பவர்!

அடுத்த கட்டுரைக்கு