Published:Updated:

விதியை மதியால் வெல்லும் யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்? - அதிகாலை சுபவேளை!

சத்தியவான் சாவித்திரி
சத்தியவான் சாவித்திரி

விதியை மதியால் வெல்லும் யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்? - அதிகாலை சுபவேளை!

இன்றைய பஞ்சாங்கம்

11.6.21 வைகாசி 28 வெள்ளிக்கிழமை

திதி: பிரதமை மாலை 6.29 வரை பிறகு துவிதியை

நட்சத்திரம்: மிருகசீரிடம் பகல் 2.46 வரை பிறகு திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம்: பகல் 3 முதல் 4.30 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / பகல் 4.30 முதல் 5.30 வரை

அம்பிகை
அம்பிகை

சந்திராஷ்டமம்: விசாகம் பகல் 2.46 வரை பிறகு அனுஷம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

வழிபடவேண்டிய தெய்வம்: அபிராமி அம்பிகை

விதியை மதியால் வெல்லும் யோகம் யாருக்கெல்லாம் வாய்க்கும்?

நமக்கு நடைபெறும் நன்மை தீமைகளுக்கு நாம் விதியையே காரணமாகச் சொல்கிறோம். விதி மாற்ற முடியாதது என்றும் விதியின்வழியே வாழ்க்கை அமைகிறது என்றும் பலர் நம்புகிறார்கள். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்பது பழமொழி. அதற்கு நம் இதிகாச புராணங்களிலும் பல்வேறு உதாரணங்கள் உண்டு. மார்க்கண்டேயன், சத்தியவான் சாவித்திரி ஆகியோரின் கதைகள் அதற்கு நல்ல உதாரணங்கள். ஆனால் அவற்றிலேயே பல திறமைசாலிகளும் பராக்கிரமசாலிகளும் விதியால் வீழும் நிகழ்வுகள் இருக்கின்றன. அப்படியானால் யாரெல்லாம் விதியை வெல்லமுடியும்? அந்த யோகம் யாருக்கு வாய்க்கும் என்னும் கேள்விக்கான விடையை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

11/6/21

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

ஆதரவு : புதிய முயற்சிகளில் கவனம் அவசியம். உறவினர்களால் சின்னச் சின்ன சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவுக்குக் கவலையில்லை. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

ரிஷபம்

அனுகூலம் : இன்று செயல்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. -நா காக்க!

மிதுனம்

கவனம் : முற்பகலில் உற்சாகமாகச் செயல்பட்டாலும் பிற்பகலில் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய வேலைகளைக் காலையிலேயே தொடங்கிவிடுங்கள். வெற்றி உண்டாகும். - டேக் கேர் ப்ளீஸ்!

கடகம்

ஆதாயம் : தந்தைவழி உறவினர்களால் நன்மைகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியைத் தரும். - என்ஜாய் தி டே!

சிம்மம்

நிதானம் : புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கவனம் தேவை. பேச்சினால் மனஸ்தாபம் ஏற்படலாம் என்பதால் நிதானித்துப் பேசுவது நல்லது. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

கன்னி

மகிழ்ச்சி : குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். உங்கள் முயற்சிகளுக்குக் குடும்பத்தினர் தகுந்த ஆதரவு தருவார்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கலாம் - ஜாலி டே!

துலாம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவை. செலவுகள் அதிகரிப்பதால் கடன்வாங்கவும் நேரலாம். குடும்பத்தினர் உங்களைப் புரிந்துகொள்வர் - நாளை உங்க நாள்!

விருச்சிகம்

வெற்றி : முக்கிய வேலைகளை முற்பகலுக்குள் முடித்துவிடுங்கள். உங்கள் ஆலோசனைகளைக் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். செயல்கள் வெற்றிகரமாகும். - நினைத்ததை முடிப்பவர்!

தனுசு:

உற்சாகம் : மனதில் உற்சாகம் அதிகரிக்கும். செலவுகள் மட்டும் அதிகரித்தவண்ணம் இருக்கும். முக்கிய முடிவுகளில் குடும்பத்தினரின் ஆலோசனை அவசியம். - ஆல் இஸ் வெல்!

மகரம்

கலகலப்பு : செயல்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினர் பாசமழை பொழிவார்கள். ஆரோக்கியமும் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. - ஆல் தி பெஸ்ட்!

கும்பம்

நற்செய்தி : எதிர்பார்த்த நற்செய்தி தேடிவரும். பிற்பகலுக்கு மேல் முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரித்தாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். - இனி எல்லாம் சுபமே!

மீனம்

துணிவு : முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். அதனால் நன்மைகள் உண்டாகும். செயல்களில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணவரவு உள்ளதால் கவலையில்லை. - துணிவே துணை!

அடுத்த கட்டுரைக்கு