Published:Updated:

பக்திக்கு இலக்கணம் இவர்கள்தான்... ஆன்மிகம் காட்டும் அற்புதர்கள்! - அதிகாலை சுபவேளை #Video

அதிகாலை சுபவேளை
அதிகாலை சுபவேளை

பக்திக்கு இலக்கணம் இவர்கள்தான்... ஆன்மிகம் காட்டும் அற்புதர்கள்! - அதிகாலை சுபவேளை #Video

இன்றைய பஞ்சாங்கம்

18. 4. 21 சித்திரை 5 ஞாயிற்றுக்கிழமை

திதி: சஷ்டி இரவு 7.11 வரை பிறகு சப்தமி

நட்சத்திரம்: திருவாதிரை

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: மாலை 4.30 முதல் 6 வரை

எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 வரை

நல்லநேரம்: காலை 6 முதல் 7 வரை/ பகல் 3.15 முதல் 4.15 வரை

சந்திராஷ்டமம்: அனுஷம்

அனுமன்
அனுமன்

பக்திக்கு இலக்கணம் யார்?

கோயிலுக்குச் சென்று கடவுளை தரிசித்துக் கன்னத்தில் போட்டுக்கொள்வது மட்டுமா பக்தி? நம் தர்மத்தில் அனைத்துக்கும் உயர்ந்த உதாரணங்கள் உண்டு. அப்படி உன்னத பக்திக்கும் உதாரணங்கள் இருக்கிறார்கள். அவர்களில் முதல்வர் அனுமன். பக்திக்கு இலக்கணம் அனுமன். சதா சர்வ காலமும் ராம நாமம் சொல்லக் கூடியவர். அவரின் உடலின் ஒவ்வொரு ரோமக்கால்கூட ராம நாமம் சொல்லியபடி இருக்கும் என்று சொல்வார்கள். அதனால்தான் ராமன் வானர சேனையிட்ட பாலத்தின் மீது நடந்துதான் இலங்கை செல்ல வேண்டியிருந்தது. ஆனால் ராம நாமம் சொன்ன அனுமனோ பறந்தே சென்று அன்னையைக் கண்டுவந்தார்.

அனுமனைப்பற்றிக் குறிப்பிடும்போது அவரை ரகுகுல ரட்சகர் என்று குறிப்பிடுவது உண்டு. ரகுகுலம் சார்ந்த அனைவரின் உயிரையும் காத்த வீரர் அவர். அசோகவனத்தில் அன்னை துக்கத்திலிருந்தபோது ராமதூதனாகச் சென்று காத்து அருளினார். லட்சுமணன் போர்க்களத்தில் அஸ்திரத்தால் கட்டுண்டபோது சஞ்சீவி மலையைக் கொண்டுவந்து அனைவரின் ராம லட்சுமணர்களைக் காத்தார். யுத்தம் முடிந்து குறித்த காலத்தில் ராமனின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பரதனையும் அனுமனே காத்தான். அதேபோன்று லவ குசனையும் காக்கும் பணியும் அனுமனே செய்தார். இப்படியாக ரகு குலத்தோன்றலகளைக் காக்கும் பணியைச் செய்தது ராமனல்ல ராமநாமம் சொன்ன அனுமனே.

அப்படிப் பட்ட அனுமனின் சேவகத்துக்கு ஒருமுறை அன்னை சீதாவால் ஒரு சோதனை வந்தது அது என்ன... ஏன்?

வைணவத்தில் அனுமன் என்றால் சைவத்தில் பக்தியின் இலக்கணம் யார்?

எப்படிப்பட்ட பக்தியை நாம் இறைவனிடம் செலுத்த வேண்டும்?

இவற்றுக்கான பதில்களை அறிந்துகொள்ள கீழே இருக்கும் வீடியோவைக் காணுங்கள்.

இன்றைய ராசிபலன்

முழுமையான இன்றைய ராசிபலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

18.4.21

மேஷம் - தாமதம் : செயல்கள் அனைத்திலும் சிறு தாமதமும் இழுபறியும் ஏற்பட்டு முடியும். பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாலையில் நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். - தாமதமாகலாம் ஆனால் தடைப்படாது!

ரிஷபம் - அலைச்சல் : குடும்பத்திலிருந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். என்றாலும் தேவையற்ற செலவுகளும் அலைச்சலும் அதிகரிக்க வாய்ப்புள்ள நாள். - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்

மிதுனம் - செலவு : இன்று செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். பணவரவு உண்டு என்பதால் கவலையில்லை. பிற்பகலுக்கு மேல் செயல்களில் கவனம் தேவை. - செலவே சமாளி!

கடகம் - அனுகூலம் : குடும்பத்தில் மூன்றாம் நபரால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். - ஆல் இஸ் வெல்!

சிம்மம் - நிதானம் : எதிர்பார்த்த பணம் கைக்குவரும். என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது இன்று உரிய ஆலோசனை அவசியம். - வருமுன் காப்போம்!

கன்னி - உற்சாகம் : காலைமுதலே சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். செயல்களும் அனுகூலமாகும். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். - ஆல் தி பெஸ்ட்!

துலாம் - ஆரோக்கியம் : கூடுமானவரை வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள். அலர்ஜி அஜீரணம் ஏற்படலாம். செலவுகளும் அதிகரித்தவண்ணம் இருக்கும். - ஹெல்த் இஸ் வெல்த்!

விருச்சிகம் - நிதானம் : வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். செலவுகள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள். இறைவழிபாட்டில் கவனம் செலுத்துவது நல்லது. - கேர் ஃபுல் ப்ளீஸ்!

தனுசு : கவனம் : முற்பகல் சாதகமாக இருக்கும் நாள். பிற்பகலுக்கு மேல் செயல்களில் கூடுதல் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். - ரிலாக்ஸ் ப்ளீஸ்!

மகரம் - பணவரவு : எதிர்பாராத பணவரவு உண்டாகும். வராது என்று நினைத்த பணம் கிடைக்கும். என்றாலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. - பெஸ்ட் ஆஃப் லக்!

கும்பம் - சாதகம் : செயல்கள் அனைத்தும் அனுகூலமாகும். குடும்பத்தில் அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

மீனம் - நன்மை : உறவுகளால் சின்னச் சின்னப் பிரச்னைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்தாலும் பாதிப்பு இருக்காது. பிற்பகலுக்கு மேல் முயற்சிகள் நன்மையாக முடியும். - நாள் நல்ல நாள்!

அடுத்த கட்டுரைக்கு