Published:Updated:

சிவனுக்கு அபிஷேகம் ஏன்? - அறிந்துகொள்ள வேண்டிய தாத்பர்யங்கள் 5!

அண்ணாமலையில் அபிஷேகம்!
அண்ணாமலையில் அபிஷேகம்!

சிவனுக்கு அபிஷேகம் ஏன்? - அறிந்துகொள்ள வேண்டிய தாத்பர்யங்கள் 5!

இன்றைய பஞ்சாங்கம்

9. 6. 21 வைகாசி 26 புதன்கிழமை

திதி: சதுர்த்தசி பகல் 3.00 வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: கிருத்திகை காலை 10.00 வரை பிறகு ரோகிணி

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பகல் 12 முதல் 1.30 வரை

எமகண்டம்: காலை 7.30 முதல் 9 வரை

நல்லநேரம்: காலை 9.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 5.30 வரை

சிவன்
சிவன்

சந்திராஷ்டமம்: சித்திரை காலை 10.00 வரை பிறகு சுவாதி

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

வழிபடவேண்டிய தெய்வம்: மகாவிஷ்ணு

சிவனுக்கு அபிஷேகம் ஏன்? - அறிந்துகொள்ள வேண்டிய தாத்பர்யங்கள் 5!

சிவபெருமானுக்கு ஆலயங்களில் அன்றாடம் அபிஷேகம் நடைபெறும். அதிலும் பல நாள்கள் விசேஷ அபிஷேகங்களும் நடக்கும். காரணம் அவர் அபிஷேகப் பிரியர். மற்ற இறைவடிவங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டாலும் அவர்களை எல்லாம் அபிஷேகப் பிரியர்களாகக் குறிப்பிடுவதில்லை. லிங்கத்தின் மீது மட்டும் எப்போதும் ஜலதாரையிலிருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். லிங்கத்துக்கு மட்டும் தினமும் அதைக் குளிர்விக்கக் கட்டாயம் அபிஷேகம் செய்ய வேண்டும் என்பார்கள். ஒருசிலர் விக்கிரகங்களுக்குச் செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் வீண் என்பதுபோலப் பேசுகிறார்களே, அப்படியானால் அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் இருக்கும் தாத்பர்யங்கள்தாம் என்ன என்னும் கேள்விக்கு இது குறித்து ஆன்மிகம் சொல்லும் பதிலை அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

இன்றைய ராசிபலன்

விரிவான இன்றைய பலன்களை அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மேஷம்

மகிழ்ச்சி : மனதில் உற்சாகம் நிறைந்திருக்கும். ஆனாலும் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். செயல்கள் சாதகமாக முடியும். மகிழ்ச்சி நிறைந்திருக்கும் - ஜாலி டே!

ரிஷபம்

நிதானம் : எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. - லெஸ் டென்ஷன் மோர் வொர்க்!

மிதுனம்

ஆரோக்கியம் : அனுகூலமானநாள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சிறு கவனம் தேவை. குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். - ஹெல்த் இஸ் வெல்த்!

கடகம்

சாதகம் : புதிய முயற்சிகள் சாதகமாகும். குடும்பத்தினர் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் தேடிவந்து உதவுவார்கள். - சாதகமான ஜாதகம் இன்று!

சிம்மம்

நன்மை : செயல்கள் அனுகூலமாக முடியும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற கவலைகளை விட்டுவிடுவதன் மூலம் மனம் அமைதிபெறும். - நாள் நல்ல நாள்!

கன்னி

தெளிவு : நேற்றுவரையிருந்த குழப்பங்கள் மறையும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றினாலும் பாதிப்பு இருக்காது. பணிகளில் கூடுதல் கவனம் தேவை. - டேக் கேர் ப்ளீஸ்!

துலாம்

பொறுமை : சொல்லிலும் செயலிலும் பொறுமை தேவைப்படும் நாள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்ற அலைச்சலை மேற்கொள்ள வேண்டியிருக்கும். - ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின்ஸ் தி ரேஸ்!

விருச்சிகம்

வெற்றி : மனதில் நம்பிக்கையும் உற்சாகமும் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. உங்கள் ஆலோசனைகளுக்குரிய மரியாதை கிடைக்கும். - வெற்றிக்கொடிகட்டு!

தனுசு:

சுறுசுறுப்பு : காலைமுதலே பரபரப்பாகக் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சை மதித்து நடப்பார்கள். சகோதரர்களால் செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். - ஆல் இஸ் வெல்!

மகரம்

விவாதம் : அனுகூலமான நாள். என்றபோதும் பேச்சில் நிதானம் தேவை. வார்த்தைகளால் வம்புவரலாம். தேவையற்ற விவாதத்தையும் தவிருங்கள். - நோ ஆர்கியுமென்ட்ஸ்!

கும்பம்

நம்பிக்கை : மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். குடும்பத்திலிருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலைக்கும். - நம்பிக்கை அதுதானே எல்லாம்!

மீனம்

ஆதரவு : பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகள் சாதகமாகும். உங்கள் செயல்களுக்கு உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். - ஆல் தி பெஸ்ட்!

அடுத்த கட்டுரைக்கு