Published:Updated:

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட நடராஜர்!

பிரமாண்ட நடராஜர்
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்ட நடராஜர்

பிரமாண்ட நடராஜர்

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட நடராஜர்!

பிரமாண்ட நடராஜர்

Published:Updated:
பிரமாண்ட நடராஜர்
பிரீமியம் ஸ்டோரி
பிரமாண்ட நடராஜர்

உயிர்கள் பிறப்பதும், வாழ்வதும், இறப்பதும், பேரின்ப நிலையில் பொருந்துவதும் ஆடல்வல்லானின் அசைவினாலே நிகழ்கின்றன என்கின்றன ஞானநூல்கள். ஆனந்த தாண்டவம், சந்தியா தாண்ட வம், உமா தாண்டவம், கௌரி தாண்டவம், காளிகா தாண்டவம், திரிபுர தாண்டவம், சம்ஹாரத் தாண்டவம் என சிவபெருமானின் ஏழு வகைத் தாண்டவங்கள் ஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் முதன்மையாகத் திகழ்வது நடராஜ அமைப்பே.

பிரமாண்ட நடராஜர்
பிரமாண்ட நடராஜர்


`நுண்ணிய அணுகூட அசைவற்று இருப்பதில்லை. இயக்கம் என்பது உலகின் மாபெரும் அறிவியல் தத்துவம்; இதை வெளிப்படுத்தும் இணையற்ற இறை வடிவம் நடராஜ வடிவம்’ என்பது ஆன்றோர்களின் அருள்வாக்கு.

ஆம்! நடராஜரின் திருவுருவம் இந்தப் பிரபஞ்ச இயக்கத்தைச் சுட்டுவது. அதனால்தான் ஜெனிவாவில் உள்ள அறிவியல் கூடத்தில் நடராஜர் சிலையை நிறுவி அழகு பார்த்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அந்த அழகான சிற்பத்தைச் செய்தவர் கும்பகோணம் அருகே திம்மக்குடியில் உள்ள, ‘கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ்’ நிறுவனத்தை நடத்திவரும் வரதராஜன்.

இவருக்கு உலகிலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை ஒன்றைச் செய்யும் ஆவல் ஏற்பட்டது. இதற்கான பணியை 2010-ம் ஆண்டு தொடங்கினார். இவரது பத்து வருட உழைப்பின் பலனாக 23 அடி உயரமும் 17 அடி அகலம் கொண்ட - சுமார் 15 டன் எடையுடன் கூடிய பிரமாண்டமான நடராஜர் சிலை மிக அற்புதமாக உருவாகியுள்ளது.

51 சிவ அட்சரங்களைக் குறிக்கும் 51 தீச்சுடர்கள், திருவாசியில் 52 சிம்மங்கள், 56 பூதகணங்கள், 102 தாமரை மலர்கள், 2 மகரப் பறவைகள், 34 நாகங்கள் கருணைப் பொழியும் திருமுகம், கம்பீரம் துலங்கும் திருமேனி என சிற்ப அற்புதமாகத் திகழ்கிறது இந்த நடராஜர் சிலாமேனி.

இந்தச் சிலையை உருவாக்க சுமார் ரூ.4 கோடி செலவானது என்கிறார்கள். கடந்த செப்டம்பர் 12 - ம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் குழுமியிருக்க, இந்தத் திருமேனிக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, இந்த விக்கிரகத் திருமேனி வேலூர் கொண்டுசெல்லும் விதம், நாராயணி பீடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆந்திர ஆளுநரும் புதுவை துணைநிலை ஆளுநருமான தமிழிசை கலந்துகொண்டு சிறப்பித்தார்.