நவராத்திரி காலத்தில் ஒன்பது நாள்களும் விதிப்படி கன்னிகை களைப் பூஜை செய்ய வேண்டிய முறைகளையும் அதன் பலன்களையும் வியாசர் விரிவாகக் குறிப்பிடுகிறார். நவராத்திரி பூஜையில் கலசபூஜை முதல் அம்பிகையை அர்ச்சிப்பது வரை அனைத்தையும் முடித்த பிறகு, இந்த நவகன்னிகை பூஜையைச் செய்ய வேண்டும்.

முதல் நாள்: இரண்டு வயது உள்ள பெண்ணைக் ‘குமாரி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். குமாரியை வழிபடுவதால் தரித்திரம் நீங்கும்; பகை விலகும்; ஆயுளும் செல்வமும் வளரும்.

இரண்டாம் நாள்: சுமார் மூன்று வயதுள்ள பெண்ணை `திரிமூர்த்தி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். திரிமூர்த்தியை பூஜை செய்தால் அறம், பொருள், இன்பம், தான்யம் ஆகியவை உண்டாகும். பேரன் பேத்தி காலம் வரை மகிழ்ச்சியுடன் வாழும் வரம் கிடைக்கும்.

மூன்றாம் நாள்: நான்கு வயது உள்ள பெண்ணை `கல்யாணி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். கல்யாணியை பூஜை செய்வதன் மூலம் வித்தை, ராஜ்ய சுகம் ஆகியவை உண்டாகும்.

நான்காம் நாள்: ஐந்து வயது உள்ள பெண்ணை `ரோகிணி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். ரோகிணி பூஜை, ரோகங்களை நாசமாக்கும்.

ஐந்தாம் நாள்: ஆறு வயது உள்ள பெண்ணை `காளிகா’ என்ற பெயரால் பூஜிக்க வேண்டும். காளிகா பூஜை, எதிரி களை வெல்லும் வல்லமையை அளிக்கும்.

ஆறாம் நாள்: ஏழு வயது உள்ள பெண்ணை ‘சண்டிகா’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். சண்டிகா பூஜை, சர்வ ஐஸ்வர்யங்களையும் அளிக்கும்.

ஏழாம் நாள்: எட்டு வயது உள்ள பெண்ணை `ஸாம்பவி’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். ஸாம்பவி பூஜை, போரில் வெற்றி, ராஜபோகம் ஆகியவற்றைக் கொடுக்கும்.

எட்டாம் நாள்: ஒன்பது வயது உள்ள பெண்ணை `துர்கை’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். துர்கா பூஜை, கொடூரமான பகைவர்களையும் வெல்வதற்கான வல்லமை யைத் தரும். செய்யவே முடியாது என்றிருந்த காரியங்களைச் செய்யும் ஆற்றலைக் கொடுக்கும்.

ஒன்பதாம் நாள்: பத்து வயது உள்ள பெண்ணை `சுபத்திரா’ என்ற பெயரால் பூஜை செய்ய வேண்டும். இதனால் அடங்காத மனமும் அடங்கும்.

வசதியும் மனமும் உள்ளவர்கள், முதல் நாள் அன்று ஒரு பெண், இரண்டாம் நாளன்று இருவர் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையை அதிகமாக வரவழைத்தும் பூஜை செய்யலாம். இது மிகவும் பலன் வாய்ந்தது.

கொலு சொல்லும் தத்துவம்!

‘அகிலத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை பரவியிருக்கிறாள். அவள் கருணையால்தான் அனைத்தும் உயிர் வாழ்கின்றன என்பதை விளக்கவே கொலு வைக்கிறோம். கொலுப்படிகள் ஒன்பது, ஏழு, ஐந்து என்ற எண்ணிக்கையில், ஒற்றைப் படையில் அமைய வேண்டும்.

கீழிருந்து முதல் ஐந்து படிகளில் முறையே ஒரறிவு முதல் ஐந்தறிவு படைத்த உயிரினங்களின் பொம்மைகள் இடம்பெறலாம். 6-வது படியில் மனித உருவங்கள், 7-வது படியில் மகான்கள், 8-வது படியில் தெய்வ அவதாரங்கள் என்று கொலு வரிசை அமைய வேண்டும். ஒன்பதாவது படியில் ராஜராஜேஸ்வரியான ஜகன்மாதாவை எழுந்தருளச் செய்ய வேண்டும் என்பது நியதி.